Thursday, May 15, 2008
நம்ம வீக் எண்ட் ஜொள்ளு வித்வான் மங்களூராருக்கு இன்று பிறந்த நாள
வாழ்க்கைல ஒவ்வொருத்தர்க்கும் ஒவ்வொரு மாதிரி ஹாபி இருக்கும். சிலர் ஸ்டாம்ப் சேகரிப்பாங்க.. சீலர் நாணயங்கள்.. சிலர் பல நாட்டு கரன்ஸிகள் .. இந்த மாதிரி இன்னும் சில.. ஆனா இவர் ஜொள்ளு விடற மாதிரி குளுகுளு படங்கள் சேகறிக்கிறார். ஆனா இப்போ அந்த வேலைய விட்டுட்டு முழு நேர முத்தக் கவுஜரா மாறிட்டார். நம்ம வீக் எண்ட் ஜொள்ளு வித்வான் மங்களூராருக்கு( இப்படி தான் அவர சொல்லனுமாம்..) இன்று பிறந்த நாள். மாமா.. உங்களை வாழ்த்த எங்களுக்கு வயதில்லை... ஆகவே வணங்குகிறோம்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாம்ஸ்... வாழ்க வளமுடன்...
Wednesday, May 14, 2008
அப்பாவி சிறுமி துர்க்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மலேசிய நேரப்படி இன்றும் இந்திய நேரப் படி நாளை(மே15)யும் பிறந்த நாள் காணும் தமிழ் வலைப்பதிவுலகின் ஒரே அப்பாவி சிறுமியும் மலேசியா மாரியாத்தாக்கள் முன்னேற்றக் கழக தலைவியுமான தோழி துர்க்காவிற்கு குட்டீஸ் கார்னரின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியமான உடல் நலத்துடனும் ஒவ்வொரு வினாடியும் சந்தோஷமான தருணங்களுடன் வாழ அன்புடன் வாழ்த்துவோம்.
Friday, May 2, 2008
அபிராமி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
நிலா போல் பதிவராக இல்லை என்றாலும் இவள் பெயரில் இவள் அப்பா அடிக்கும் லூட்டியில் அபியப்பா பதிவை விட அபி தான் ரொம்ப பிரபலம். உபசரிப்பில் அப்படியே அவள் அம்மாவின் அவதாரம்.இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.இதனால சகலமானவங்களுக்கும் தெரிவிக்கிறது இன்னான்னா.. நம் அபி பாப்பாவிற்கு நாளை ( மே. 3ம் தேதி) பிறந்த நாள். அதனால அல்லாரும் ஜோரா அபி பாப்பாவுக்கு வாழ்த்து சொல்லி ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ்.... :))
தலைப்பு பாத்து கன்பீஸ் ஆவாதிங்க.. அது சும்மா டமாசு மரியாதைக்கு.. :P
நிலா குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
Ilaya nila.mp3 |
சங்கத்து பெண்சிங்கமும் தமிழ் பதிவுலகின் குட்டி தேவதையுமான நம்ம நிலா குட்டிக்கு நாளை (மே 3ம் தேதி) பிறந்தநாள். இதனால் பொது மக்களுக்கு அறிவிக்கிறது இன்னான்னா அல்லாரும் பாப்பாவுக்கு வாழ்த்து சொல்லி ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ்.
Subscribe to:
Posts (Atom)