Showing posts with label Wishes. Show all posts
Showing posts with label Wishes. Show all posts

Tuesday, October 7, 2008

ஆஷிஷ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று ( அக்டோபர் 07 ) பிறந்த நாள் கானும் நம் சங்கத்து தங்கம் ஆஷிஷ்க்கு குட்டீஸ்கார்னர் , ஆண்டிஸ் அங்கிள்ஸ் சங்கம், தாத்தா பாட்டீஸ் க்ளப் ஆகியவற்றின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. என்றும் நலமோடும் வளமோடும் வாழ வாழ்த்துவோம்..

பிகு : 07ஆம் தேதி பிறந்தவர்கள் அதி புத்திசாலிகள் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.. :)

Monday, September 1, 2008

G3 அத்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



ஊருக்கே போஸ்டர் அடிச்சி ஒட்டி வாழ்த்து சொல்லும்.. வாழ்த்து சொல்வதற்காகவே வலைப்பூ வைத்திருக்கும் எங்கள் அன்பு அத்தை ஜி3 என்று எல்லோரும் அன்புடன் அழைக்கப் படும் காயத்ரி ஆண்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். அனைத்து வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்...

மீதியை கவுஜாயினி ஆண்டி சொல்வாங்க...

அவளைத் தெரியாதவங்களோ அவளுக்குத் தெரியாதவங்களோ யாரும் இந்த பதிவுலகத்துல கிடையாது! அந்த அளவுக்கு அம்மணி பிரபலமா இருந்தாலும் இந்த சிறப்பான நாள்ல அவளைப் பத்தி எல்லாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது எங்க கடமை! சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு தெரிஞ்சி வெச்சுகோங்க.... சிவில் சர்வீஸ் எக்ஸாம் மாதிரியான போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும். :)

ஜி3 'பய'டேட்டா

பெயர் : காயத்ரி நாதன்

செல்லப் பெயர் : ஜி3

வயது : 17 முடிந்து 16 துவக்கம்!

தொழில் : மொக்கை போடுவது

உபதொழில்கள் : உறங்குவது, ஊர் சுற்றுவது, வாழ்த்துப் பதிவு போடுவது

பொழுது போக்கு : ஆபீஸ் போவது

பிடித்த 3 விஷயங்கள் : 1. சாப்பிடுவது 2. சாப்பிடுவது 3.நிறைய சாப்பிடுவது!

பிடித்த 3 பதிவுகள் : 1. இட்லிவடை, 2. சட்னி வடை, 3. தாளிக்கும் ஓசை..

பிடித்த 3 பாடல்கள் : 1. கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்....
2. நித்த நித்த நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா..
3. உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா...

பிடித்த 3 சொற்கள் : கட், காபி, பேஸ்ட்.

விரும்புவது : ஹோட்டல்களில் நடக்கும் பதிவர் சந்திப்புகளை

வெறுப்பது : சாப்பிடும் போது குறுக்கே கேள்வி கேட்பவர்களை

சமீபத்திய சாதனை : தமிழ்மணத்தில் இணையாமலேயே 'தமிழ்மனங்கள்' பலவற்றில் இணைந்தது

நீண்ட கால சாதனை : 'ஜி3 செய்வது' என்றால் 'சுடுவது' என உலகறியச் செய்தது

வாழ்நாள் லட்சியம் : உலக நன்மை (?!) வேண்டி 45 நாட்கள் 'தொடர் உண்ணும் விரதம்' மேற்கொள்வது!


இப்படியாப்பட்ட நல்ல பொண்ணுக்கு பொறந்தநாளுங்க இன்னிக்கு! எல்லாரும் வந்து மனசார வாழ்த்திட்டு அவங்கவங்க வூட்டுக்கு போய் வயிறார சாப்பிடனும்னு குட்டீஸ் கார்னர் சார்புல வேண்டி விரும்பிக் கேட்டுக்கறோம்!!

.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி3 @ காயத்ரி ஆண்டி.....

Tuesday, July 22, 2008

மைஃப்ரண்ட் அனு ஆண்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




ஊருக்கே போஸ்டர் அடிச்சி ஒட்டி வாழ்த்து சொல்லும் எங்க சங்கத்தின் மூத்த பெண் சிங்கமும், தேன்கிண்ணத்தின் முழுநேர RJவும், 24/7 ஃப்ரேம்ஸின் ஓனருமான அன்புத் தோழி அனுவுக்கு குட்டீஸ் கார்னரின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சீக்கிறமே சங்கத்தில் குட்டி அனுவுக்கு அட்மிஷன் போடவும் மனதார வாழ்த்துகிறோம்.

Saturday, July 12, 2008

குட்டி பாப்பா ஜெய்ஸ்ரீக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அண்ணாச்சி ஜீவ்ஸ் @ ஐயப்பர் வீட்டு தேவதை குட்டி பாப்பா ஜெய்ஸ்ரீக்கு இன்று இரண்டாவது பிறந்த தினம். பாப்பா என்றும் நலமுடனும் சந்தோஷத்துடனும் வாழ குட்டீஸ் கார்னர், ஆண்டிஸ் அங்கிள்ஸ் க்ளப், தாத்தா பாட்டீஸ் சங்கம் ஆகிய அனைவர் சார்பிலும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். நம் சார்பில் குட்டி பாப்பாவை வாழ்த்த G3யை பெங்களூருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

***********************************

மூன்று நாட்களாய் இணையம் பக்கம் வர முடியாமல் போனதால் கவிதாயினி காயத்ரியின் பிறந்த நாளை இணையத்தில் கொண்டாட முடியாமல் போய்விட்டது. ஜூலை 13 (1958)ம் தேதி தனது பிறந்த நாளை ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் பிரமாண்டமாக கொண்டாடிய அழுகாச்சி கவிதாயினி காயத்ரிக்கு தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Thursday, May 15, 2008

நம்ம வீக் எண்ட் ஜொள்ளு வித்வான் மங்களூராருக்கு இன்று பிறந்த நாள

வாழ்க்கைல ஒவ்வொருத்தர்க்கும் ஒவ்வொரு மாதிரி ஹாபி இருக்கும். சிலர் ஸ்டாம்ப் சேகரிப்பாங்க.. சீலர் நாணயங்கள்.. சிலர் பல நாட்டு கரன்ஸிகள் .. இந்த மாதிரி இன்னும் சில.. ஆனா இவர் ஜொள்ளு விடற மாதிரி குளுகுளு படங்கள் சேகறிக்கிறார். ஆனா இப்போ அந்த வேலைய விட்டுட்டு முழு நேர முத்தக் கவுஜரா மாறிட்டார். நம்ம வீக் எண்ட் ஜொள்ளு வித்வான் மங்களூராருக்கு( இப்படி தான் அவர சொல்லனுமாம்..) இன்று பிறந்த நாள். மாமா.. உங்களை வாழ்த்த எங்களுக்கு வயதில்லை... ஆகவே வணங்குகிறோம்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாம்ஸ்... வாழ்க வளமுடன்...

Wednesday, May 14, 2008

அப்பாவி சிறுமி துர்க்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மலேசிய நேரப்படி இன்றும் இந்திய நேரப் படி நாளை(மே15)யும் பிறந்த நாள் காணும் தமிழ் வலைப்பதிவுலகின் ஒரே அப்பாவி சிறுமியும் மலேசியா மாரியாத்தாக்கள் முன்னேற்றக் கழக தலைவியுமான தோழி துர்க்காவிற்கு குட்டீஸ் கார்னரின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியமான உடல் நலத்துடனும் ஒவ்வொரு வினாடியும் சந்தோஷமான தருணங்களுடன் வாழ அன்புடன் வாழ்த்துவோம்.

Friday, May 2, 2008

அபிராமி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்


"என்னோட பிறந்தநாள் விருந்து.. வாங்க வாங்க.. ":P
நிலா போல் பதிவராக இல்லை என்றாலும் இவள் பெயரில் இவள் அப்பா அடிக்கும் லூட்டியில் அபியப்பா பதிவை விட அபி தான் ரொம்ப பிரபலம். உபசரிப்பில் அப்படியே அவள் அம்மாவின் அவதாரம்.இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.இதனால சகலமானவங்களுக்கும் தெரிவிக்கிறது இன்னான்னா.. நம் அபி பாப்பாவிற்கு நாளை ( மே. 3ம் தேதி) பிறந்த நாள். அதனால அல்லாரும் ஜோரா அபி பாப்பாவுக்கு வாழ்த்து சொல்லி ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ்.... :))

தலைப்பு பாத்து கன்பீஸ் ஆவாதிங்க.. அது சும்மா டமாசு மரியாதைக்கு.. :P

நிலா குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

இந்தாங்க என் பர்த்டே ட்ரீட் :P

Ilaya nila.mp3

சங்கத்து பெண்சிங்கமும் தமிழ் பதிவுலகின் குட்டி தேவதையுமான நம்ம நிலா குட்டிக்கு நாளை (மே 3ம் தேதி) பிறந்தநாள். இதனால் பொது மக்களுக்கு அறிவிக்கிறது இன்னான்னா அல்லாரும் பாப்பாவுக்கு வாழ்த்து சொல்லி ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ்.

Wednesday, April 16, 2008

குசும்பன் மாமா கல்யாணத்துக்கு குட்டீஸின் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.


இவ்வளவு நாள் எங்களுக்கு மட்டும் அங்கிளா இருந்த குசும்பன் அங்கிள் மஞ்சு ஆண்டியை மணந்து இன்று முதல் அதிகாரப் பூர்வமாக அங்கிள் ஆகிறார். குசும்பன் மாமா மற்றும் மஞ்சு ஆன்டிக்கு குட்டீஸ் சார்பில் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். aஅடுத்த ஆண்டு குட்டீஸ் கார்னரில் குட்டி குசும்பனோ குட்டி மஞ்சுவோ சேர வாழ்த்துக்கள்.

Saturday, March 22, 2008

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவன்!

நம்ம சங்கத்து சிங்கம் பவனுக்கு இன்று பிறந்தநாள். ஏற்கனவே பலரும் வாழ்த்து சொல்லியாச்சி. இன்னும் சொல்ல வேண்டியவங்க எல்லாரும் சொல்லிடுங்க. வாழ்த்து சொல்றவங்க பேர் எல்லாம் சேர்த்து ஒரு வழ்த்து அட்டை தயாரித்து பவனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். :) இது வரை வாழ்த்து சொன்னவங்க....

Saturday, March 8, 2008

சங்கத்து சிங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


இதனால சகலமானவங்களுக்கும் தெரிவிக்கிகறது இன்னான்னா.. நம்ம சங்கத்து சிங்கமும்.. தமிழ் பதிவுலகின் குட்டிராஜாவுமான பவன் அவர்களுக்கு இந்த மாதம் 22ம் தேதி பொறந்தநாளுங்கோ. அதனால அல்லாரும் வந்து நம்ம குட்டிராஜாவ வாழ்த்தி ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ்... குட்டீஸ்கார்னரின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவன். நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்று அப்பாவை போலவே பொதுநல உணர்வோடு சிறந்த மனிதனாக வாழ வாழ்த்துகிறோம். :))

Sunday, March 2, 2008

அபிஅம்மாவுக்கு குட்டீஸ்கார்னரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நம்ம அபிஅக்கா& நட்டுவின் அம்மாவான அபிஅம்மாவுக்கு குட்டீஸின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அபிஅம்மா ரொம்ப நல்லவங்க,வல்லவங்க. எப்படி பாப்பா அவங்கள பாக்காமயே சொல்ரேன்னு கேக்கறீங்களா?

உங்க எல்லோருக்கும் அபிஅப்பாவ தெரியும். அவர இவ்வளவு நாளா சமாளிக்கறாங்க அப்படீங்கறதே இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு

இன்னும் http://abiappa.blogspot.com/2008/02/blog-post.html இந்த போஸ்ட்ல பாருங்க நான் சொல்றது தெரியும்



HAPPY BIRTHDAY அபிஅம்மா

Sunday, February 24, 2008

53வது பிலிம் பேஃர் அவார்ட்ஸ் வாழ்த்துக்கள் தர்ஷில்

பதினோரு வயது ஸ்டார் தர்ஷில் சஃவாரி won the Critics Award for the Best Male Performance for his role as the protagonist Ishaan Awasthi for the film Tare Zameen par.

அட எங்க அண்ணணோட வெற்றிய எங்க தாடி மாமா டான்ஸ்சோட சேர்த்து பாருங்க

Saturday, February 23, 2008

283. எதை நீ கிழித்தாயோ அதை நன்றாகவே கிழித்தாய்!

எதை நீ கிழித்தாயோ அதை நன்றாகவே கிழித்தாய்! வாத்தியார் தாத்தாவுக்கு வாழ்த்துக்கள்.
அப்படியே படத்த பாருங்க விளக்கம் குடுத்திருக்கேன்... படத்தில பின்னாடி தெரியர மாடர்ன் ஆர்ட் அத்தனையும் நானே போட்டது. உங்களுக்கு கத்துக்கனுமா சொல்லி தரவா ?

Wednesday, January 23, 2008

நேதாஜி 111 வது பிறந்த நாள்

Let us remember Netaji on his 111th birth anniversary on January 23, 2008.
"ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல"

இப்படி சொன்னவர் நமது நேதாஜி. கண்டிப்பாக விவாதத்திற்குறிய கருத்து. உங்கள் மற்ற அனைவரின் கருத்துக்களை அறிய விரும்புகிறோம்.

ஒரு வேளை இந்த கருத்தின் அடிப்படையில் நமக்கு 60 ஆண்டுகளுக்கு முன் சுதந்திரம் கிடைத்து. நேதாஜி நமது நாட்டின் தந்தையாக போற்றப்பட்டு இருந்தால். இந்தியா இன்னும் முன்னேறிய நாடாக இல்லாமை வல்லரசாகி இருக்குமா இல்லை நாம் இன்னும் பின் தங்கிய நாடாகவே இருந்திருக்குமா.

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம். Kindly let us know your views please.

நேதாஜி அவர்களை பற்றிய நிறையெ தமிழ் கட்டுரைகள் நெட்டில் உள்ளது இதோ உங்களுக்காக ஒன்று

http://www.tamilnation.org/forum/sabesan/061023netaji.htm

Wednesday, January 16, 2008

பேரண்ட்'ஸ் கிளப் போட்டி சங்கத்துக்கு வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் பேரன்ட்ஸ் கிளப் . குட்டீஸ் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

"பிள்ளைகளை பெறுவதால் மாத்திரமே பெற்றவர்கள் ஆகிவிடுவதில்லை. நம்மில் இருந்து பிறந்தவர்கள் என்பதனாலேயே நம் பிள்ளைகள் நமக்கு அடிமையும் இல்லை. அதனாலே நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக். "

www.parentsclub08.blogspot.com

email id parentsclub08@gmail.com

அனைவரையும் இருகரம் நீட்டி வரவேற்கிறேன். நன்றி

எல்லாம் ஒக்கே ஆனா உங்க சங்கத்தில இம்சைய எதுக்கு சேர்ந்துக்க அழைப்பு அனுப்பி இருக்கீங்க...

நிலா நம்ம திட்டப்படி parents எப்படி சமாளிக்கரதுன்னு பதிவு போட வேண்டிய நேரம் வந்துடிச்சி.

Sunday, January 13, 2008

இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

இந்த வாரம் வலைச்சரத்தை அலங்கரிக்க போகும் நமக்கு "ரொம்ப நெருக்க"மானவருக்கு குட்டீஸ் கார்னரின் மன்ப்பூர்வமான வாழ்த்துக்கள். :P

இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் யார்னு நான் சொல்ல மாட்டேன். ரொம்ப கஷ்டமான க்ளூ குடுக்கிறேன். முடிஞ்சா கண்டுபிடிங்க.
1. அவர் பார்க்க எட்டங்களாஸ் கஷ்டப் பட்டு பெயில் ஆன சின்ன பையன் மாதிரி இருந்தாலும் பங்கு வர்த்தகம் பற்றி கூட பேசுவார்.
2.வெள்ளிக் கிழமை விடுமுறையில் இருப்பவர்கள் இவர் பதிவை பார்க்கலைனா அது அவங்களுக்கு விடுமுறையா இருக்காது.
3.சீனா தாத்தா மாதிரி அந்த கால வாலிபர்கள் கூட இவருக்கு ரசிகர் மன்றம் வச்சிருக்காங்க.
4. ஒரே பதிவ 2 ப்ளாக்ல போட்டு இதுல 100 அடிச்சதா அதுலையும் அதுல 100 அடிச்சதா இதுலையும் போடுவார்.
5.அவ்வப்போது "சொந்தமாக" யோசித்து தொடர் கதை எழுதுவார்.
6. மறைந்து நின்று பார்க்கும் மர்ம நபர்களுக்காக வலையிலுள்ளா அத்தனை கில்மா குழுமங்களிலும் உறுப்பினர் அட்டை வாங்கி வைதிருப்பார். அதை மறைத்து யாரோ எதையோ மெயில் அனுப்புவதாக உதார் விடுவார்.
7. ரூட் க்ளியர் ஆன சந்தோஷத்தில் ஒரு சுற்று பருத்திருப்பார்.
8. நான் செய்யற தப்ப யாரும் கண்டுகாதிங்கனு " அன்பா" மெரட்டுவார்.
9. வாரக் கடைசியில் இவர் ப்ளாக் மீட்டர் கொளுந்து விட்டு எரியும்.
10. இவருக்கு பதிவுலக மாத்ருபூதம்"னு ஒரு பேரு உண்டு.
ரொம்ப கஷ்டமான க்ளூ தான். ட்ரை பண்ணுங்க. :)
கண்டுபிடிக்க முடியாதவங்க நாளைக்கு வலைச்சரம் பாருங்க.

Tuesday, January 1, 2008

குட்டீஸின் பு(கு)த்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கோயம்புத்தூர்காறங்க கண்டிப்பா பாக்க வேண்டிய பதிவு(படம்). இதுல உங்க வீட்டு குட்டிஸும் குட இருக்கலாம். பார்த்து ரசிங்க. இரவு புத்தாண்டுக் கொண்டாட்டம் கோவை ஜென்னிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. மாதக் கடைசி ஆணிகளை புடுங்கிவிட்டு செல்வதற்கு 11 மணி ஆகிவிட்டது. நான் போகும் போது மஸ்தானா மஸ்தானா மற்றும் ஜோடி நெ.1 ல் ஆடிய ஜோடிகள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். பெரிசா ரசிக்கும்படி ஒன்னும் இல்லை. ஆஹா 1350 ரூபாய் வீண் ஆய்டிச்சி போல இருக்குனு நெனச்சிட்டே பாத்துட்டு இருந்தேன். பார்வையாளர்களும் ஆங்காங்கே ஆட்டம் போட்டு கொண்டிருந்தார்கள். சும்மா சொல்ல கூடாது. அவங்கள விட இவங்க ரொம்ப நல்லாவே ஆடினாங்க. எல்லார் முகத்துலையும் சந்தோஷம்.அப்புறம் அந்த ஜோடிகள் ஆட்டத்தை முடித்துக் கொண்டதும் நம்ம கோயம்புத்தூர் குட்டீஸ் போட்டாங்க பாருங்க குத்தாட்டம். அட அட.. காண கண் கோடி வேண்டும். என் டிஜி கேமராவில் பேட்டரி சார்ஜ் குறைவாக இருந்ததால் நீண்ட நேரம் படம் பிடிக்க முடியவில்லை. நான் ரசித்ததை நீங்களும் ரசிங்க.

எல்லாருக்கும் குட்டீஸ்கார்னரின் இனிமையான பு(கு)த்தாண்டு நல் வாழ்த்துக்கள்.






பிங்க் நிற உடையில் ஆடி கலக்கிய இந்த குட்டிப் பாப்பவிற்கு தான் முதல் வாழ்த்து சொன்னேன்.







Sunday, December 30, 2007

தேண்கிண்ணம் RJ மைஃப்ரண்ட் ஆண்ட்டிக்கு வாழ்த்துக்கள்.

தேண்கிண்ணத்தின் 24 மணி நேர ரேடியோ ஜாக்கி மைஃப்ரண்ட் அத்தைக்கு குட்டீஸ்கார்னரின் அன்பான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். தேண்கிண்ணத்தில் மட்டுமல்ல. எங்க அன்பு அத்தை வீட்டிலும் ரேடியோ ஜாக்கி தான். இசை இன்றி ஒருபொழுதும் இருக்க மாட்டாங்க. :P



GooD Morningggggggggg Thenkinnam.. :)

பவன் அப்பா இம்சை மாமாவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நம்ம எல்லார்க்கும் ரொம்ப மெனக்கெட்டு வாழ்த்து சொல்ற பவனோட அப்பா இம்சைக்கு நாம வாழ்த்து சொல்லியாகனும்ல.. அவன் சொல்றதுக்கு கொஞ்சம் கூச்சப் படறதால நான் அந்த பொறுப்ப ஏத்துகிட்டேன். உங்க எல்லார்க்கும் தெரியும் அவர் FOC( Friends Of Children) மூலமா ஏராளமான மாணவர்களுக்கு பாடம் சொல்லி குடுத்துட்டு இருக்கார். இவர் ஓவரா வீட்ல பில்ட் அப் குடுக்கிறதால கடுப்பான நம்ம பவன் ஒரு நாள் ஒளிஞ்சிருந்து அவர் பாடம் நடத்தறத படம் புடிச்சி சங்கத்துக்கு அனுப்பிட்டான். அது உங்கள் பார்வைக்கு.

.....அப்டியே இம்சை அங்கிள் மற்றும் அவர் மாணவர்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.....
இது வரையில் அவர் பயிற்சி அளித்த அனைத்து மாணவர்களும் வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். திருமதி.சுதா நாராயணமூர்த்தி உட்பட சிலரின் நிதி உதவியுடன் பயிற்ச்சி அளிக்கிறார். இனி வரும் ஆண்டுகளில் மேலும் பல நல்ல உள்ளாங்களின் உதவியுடன் மேலும் பல ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் வாழ்க்கையில் பல வெற்றிகளை குவிக்க இம்சை என்று அன்போடு அழைக்கப் படும் வெங்கட் மாமாவையும் அவர் மாணவர்களையும் அன்போடு வாழ்த்துவோம். :)


புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

1. New Year Wishes Express Yourself
2. New Year Wishes Express Yourself - 2
3. Power of Human Expression
4. Power of Expression
5. Value of Expression
6. பொடியன் அங்கிள் சூப்பர் கலக்கிட்டீங்க போங்க
7. சீனா தாத்தா புத்தாண்டு வாழ்த்துக்கள்
8. குசும்பன் அங்கிள் புத்தாண்டு வாழ்த்துக்கள்
9. ஓடிக் கொண்டே இருக்கணும் : Mission Possible
10.ஓசை அங்கிள் PTr Project வெற்றிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
11. PIT டீம் உங்களுக்கு ஷ்பெசல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
12. நந்து மாமா உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் (4) :
13. வவ்வால் அங்கிள்க்கு சூப்பர் ஷ்பெசல் வாழ்த்து
14. New Year Wishes Mangalore Siva Uncle
15. புத்தாண்டு வாழ்த்துக்கள் மைபிரண்ட் அக்கா
16. தேண்கிண்ணம் RJ மைஃப்ரண்ட் ஆண்ட்டிக்கு வாழ்த்துக்கள். (5)
17. பவன் அப்பா இம்சை மாமாவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். (2)

மங்களுர் மாமாவுக்காக பதிவிட்டவை
1. "நச்" என்று மங்களுர் மாமாவுக்கு குட்டீஸ் அறிவுரை வீடியோ
2. மங்களுர் மாமா & Katrina kaif ஏன் இப்படி ? பாகம் - 1
3. மங்களுர் மாமா நீங்க இப்படி பாடம் எடுக்காதிங்க
4. மங்களூர் மாமா ஏன் ? பாகம் - 2
5. Mangalore Siva மாமா நீங்க பண்ணரது சரியில்ல
6. மங்களுர் மாமா குட்டீசை எப்படி கெடுத்து வெச்சிருக்கீங்க