ஊருக்கே போஸ்டர் அடிச்சி ஒட்டி வாழ்த்து சொல்லும்.. வாழ்த்து சொல்வதற்காகவே வலைப்பூ வைத்திருக்கும் எங்கள் அன்பு அத்தை ஜி3 என்று எல்லோரும் அன்புடன் அழைக்கப் படும் காயத்ரி ஆண்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். அனைத்து வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்...
மீதியை கவுஜாயினி ஆண்டி சொல்வாங்க...
அவளைத் தெரியாதவங்களோ அவளுக்குத் தெரியாதவங்களோ யாரும் இந்த பதிவுலகத்துல கிடையாது! அந்த அளவுக்கு அம்மணி பிரபலமா இருந்தாலும் இந்த சிறப்பான நாள்ல அவளைப் பத்தி எல்லாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது எங்க கடமை! சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு தெரிஞ்சி வெச்சுகோங்க.... சிவில் சர்வீஸ் எக்ஸாம் மாதிரியான போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும். :)
ஜி3 'பய'டேட்டா
செல்லப் பெயர் : ஜி3
வயது : 17 முடிந்து 16 துவக்கம்!
தொழில் : மொக்கை போடுவது
உபதொழில்கள் : உறங்குவது, ஊர் சுற்றுவது, வாழ்த்துப் பதிவு போடுவது
பொழுது போக்கு : ஆபீஸ் போவது
பிடித்த 3 விஷயங்கள் : 1. சாப்பிடுவது 2. சாப்பிடுவது 3.நிறைய சாப்பிடுவது!
பிடித்த 3 பதிவுகள் : 1. இட்லிவடை, 2. சட்னி வடை, 3. தாளிக்கும் ஓசை..
பிடித்த 3 பாடல்கள் : 1. கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்....
2. நித்த நித்த நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா..
3. உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா...
பிடித்த 3 சொற்கள் : கட், காபி, பேஸ்ட்.
விரும்புவது : ஹோட்டல்களில் நடக்கும் பதிவர் சந்திப்புகளை
வெறுப்பது : சாப்பிடும் போது குறுக்கே கேள்வி கேட்பவர்களை
சமீபத்திய சாதனை : தமிழ்மணத்தில் இணையாமலேயே 'தமிழ்மனங்கள்' பலவற்றில் இணைந்தது
நீண்ட கால சாதனை : 'ஜி3 செய்வது' என்றால் 'சுடுவது' என உலகறியச் செய்தது
வாழ்நாள் லட்சியம் : உலக நன்மை (?!) வேண்டி 45 நாட்கள் 'தொடர் உண்ணும் விரதம்' மேற்கொள்வது!
இப்படியாப்பட்ட நல்ல பொண்ணுக்கு பொறந்தநாளுங்க இன்னிக்கு! எல்லாரும் வந்து மனசார வாழ்த்திட்டு அவங்கவங்க வூட்டுக்கு போய் வயிறார சாப்பிடனும்னு குட்டீஸ் கார்னர் சார்புல வேண்டி விரும்பிக் கேட்டுக்கறோம்!!
.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி3 @ காயத்ரி ஆண்டி.....