Showing posts with label அபி அப்பா. Show all posts
Showing posts with label அபி அப்பா. Show all posts

Thursday, January 10, 2008

எனக்கு இந்த அளவுக்கு ஆதரவு தெரிவித்த தெரிவித்து கொண்டிருக்கிற என் தமிழ் மண சொந்தங்களுக்கும், தமிழ்மணத்துக்கும் என் நன்றிகள்! - அபி அப்பா

இந்த ஒரு வருடத்தில் என் நண்பர்கள் எண்ணிக்கை சர்ன்னு உசந்துச்சு. ஏகப்பட்ட சகோதர, சகோதரிகள், அம்மாக்கள், நண்பர்கள் என என்னை அவங்க வீட்டு நபராகவே கருதும் அளவு நான் கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு பெருமையா இருக்கின்றது.

அது போல என எழுத்து பிழைகளையும் பொருத்து செல்லமா திட்டி, கோவமா திட்டி என்னை சரி பண்ண முயற்ச்சி பண்ணி தோத்து போன எல்லாருக்கும் சொல்லிக்கறேன் "மாப்பு மாப்பு மாப்பு". கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணிகறேன்.

தப்பை சரி செய்யவே "வடிவேல்"ன்னு ஒரு பையன் வச்சிருந்தேன். மன்மதலீலை படத்திலே மழுங்க மழுங்க சேவ் செஞ்சுகிட்டு முதல் காட்சியில் வரும் கமலின் குமாஸ்தா படத்தின் கடைசி காட்சியில் பெரிய தாடியோட ஆவது மாதிரி ஆயிட்டான் நம்ம வடிவேல் பையன். ஒரு கட்டத்துல அவனால முடியாம "சார் நான் வெக்கேஷன் போறேன்"ன்னு போனவன் திரும்ப வந்தவுடன் பெரிய இடத்து ரெக்கமண்டேஷனோட எனக்கு கண்காணாத தூரத்துக்கு வேற பிராஜக்டுக்கு போயிட்டான். என் சாயலில் யாரையாவது பார்த்தா கூட அவனுக்கு மனசு பட படங்குதாம். கேள்வி பட்டேன். கூடிய சீக்கிரம் எழுத்து பிழை சரியாகிடும், முயற்சி பண்றேன். அதுவும் பாருங்க 90-99 பதிவு வரை ரொம்ப கொடுமை என் பதிவுகளிள் வந்த எழுத்து பிழை.

சாதாரனமாகவே எனக்கு சிரிக்க பேசித்தான், எழுதித்தான் பழக்கம். என்னையும் அறியாமல் யார் மனசாவது நோகும் படி நான் எழுதியிருந்தால் சத்தியமாக மன்னிக்க வேண்டுகிறேன்.

இந்த 90 முதல் 100 வது பதிவு வரைக்கும் இருந்த அந்த ஸ்ட்ரெஸ் இனி இருக்காது என நினைக்கிறேன். அதனால இனி பழைய அபிஅப்பாவை பார்க்கலாம் என சொல்லிக்கறேன்.

மேலும் ஒரு விஷயம்! நான் சமீப காலமாக சரி வர பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதில்லை என்னும் மனக்குறை எனக்கு ஏகப்பட்டது இருக்கு எனக்கு. காரணம் என் வேலை பளுதான். இரவு மட்டும் தான் தமிழ்மணம் பக்கம் வர முடிகிறது. ஆனால் இனி அந்த குறையும் இல்லாத அளவு நடந்து கொள்கிறேன்.

எனக்கு இந்த அளவுக்கு ஆதரவு தெரிவித்த தெரிவித்து கொண்டிருக்கிற என் தமிழ் மண சொந்தங்களுக்கும், தமிழ்மணத்துக்கும் என் நன்றிகள்!

அபி அப்பாவுக்கு போராட்டம் ஆரம்பம் - 1

அபிஅப்பா அங்கிள் நீங்க திரும்ப வந்து பதிவு போட ஆரம்பிக்கர வரைக்கும் நாங்க பல விதமா போராட்டம் நடத்த திட்டம் போட்டு இருக்கோம்.

நாங்க என்ன பண்ணுவோம் எப்படி பண்ணுவோம்னு எங்களுக்கே தெடியாது.

முன்னா பாய் மாதிரி இல்ல இல்ல மகாத்மா காந்தி மாதிரி Get well soon வாழ்த்து பதிவும் போடுவோம்.

பகத்சிங் மாதிரி அணுகுண்டு பதிவும் போடுவோம்.

எங்க கூட இருக்க ஆளுங்க எல்லாம் யாருன்னு உங்களுக்கு தெரியாது. சீக்கிரம் வந்து பதிவு தொடர்ந்து எழுதப்போறேன் அப்படின்னு பதிவு போடுங்க...