Monday, October 27, 2008

பப்பிள் விடுவது எப்படி ?

வாங்க வாங்க பஃப்பிள் விடுவது எப்படின்னு கத்து தரேன்...

பேக்கிரவுண்டில் என்னோட கைவண்ணம் எல்லாம் நல்லா இருக்கா ?

Tuesday, October 7, 2008

ஆஷிஷ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று ( அக்டோபர் 07 ) பிறந்த நாள் கானும் நம் சங்கத்து தங்கம் ஆஷிஷ்க்கு குட்டீஸ்கார்னர் , ஆண்டிஸ் அங்கிள்ஸ் சங்கம், தாத்தா பாட்டீஸ் க்ளப் ஆகியவற்றின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. என்றும் நலமோடும் வளமோடும் வாழ வாழ்த்துவோம்..

பிகு : 07ஆம் தேதி பிறந்தவர்கள் அதி புத்திசாலிகள் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.. :)

Monday, September 1, 2008

G3 அத்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



ஊருக்கே போஸ்டர் அடிச்சி ஒட்டி வாழ்த்து சொல்லும்.. வாழ்த்து சொல்வதற்காகவே வலைப்பூ வைத்திருக்கும் எங்கள் அன்பு அத்தை ஜி3 என்று எல்லோரும் அன்புடன் அழைக்கப் படும் காயத்ரி ஆண்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். அனைத்து வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்...

மீதியை கவுஜாயினி ஆண்டி சொல்வாங்க...

அவளைத் தெரியாதவங்களோ அவளுக்குத் தெரியாதவங்களோ யாரும் இந்த பதிவுலகத்துல கிடையாது! அந்த அளவுக்கு அம்மணி பிரபலமா இருந்தாலும் இந்த சிறப்பான நாள்ல அவளைப் பத்தி எல்லாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது எங்க கடமை! சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு தெரிஞ்சி வெச்சுகோங்க.... சிவில் சர்வீஸ் எக்ஸாம் மாதிரியான போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும். :)

ஜி3 'பய'டேட்டா

பெயர் : காயத்ரி நாதன்

செல்லப் பெயர் : ஜி3

வயது : 17 முடிந்து 16 துவக்கம்!

தொழில் : மொக்கை போடுவது

உபதொழில்கள் : உறங்குவது, ஊர் சுற்றுவது, வாழ்த்துப் பதிவு போடுவது

பொழுது போக்கு : ஆபீஸ் போவது

பிடித்த 3 விஷயங்கள் : 1. சாப்பிடுவது 2. சாப்பிடுவது 3.நிறைய சாப்பிடுவது!

பிடித்த 3 பதிவுகள் : 1. இட்லிவடை, 2. சட்னி வடை, 3. தாளிக்கும் ஓசை..

பிடித்த 3 பாடல்கள் : 1. கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்....
2. நித்த நித்த நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா..
3. உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா...

பிடித்த 3 சொற்கள் : கட், காபி, பேஸ்ட்.

விரும்புவது : ஹோட்டல்களில் நடக்கும் பதிவர் சந்திப்புகளை

வெறுப்பது : சாப்பிடும் போது குறுக்கே கேள்வி கேட்பவர்களை

சமீபத்திய சாதனை : தமிழ்மணத்தில் இணையாமலேயே 'தமிழ்மனங்கள்' பலவற்றில் இணைந்தது

நீண்ட கால சாதனை : 'ஜி3 செய்வது' என்றால் 'சுடுவது' என உலகறியச் செய்தது

வாழ்நாள் லட்சியம் : உலக நன்மை (?!) வேண்டி 45 நாட்கள் 'தொடர் உண்ணும் விரதம்' மேற்கொள்வது!


இப்படியாப்பட்ட நல்ல பொண்ணுக்கு பொறந்தநாளுங்க இன்னிக்கு! எல்லாரும் வந்து மனசார வாழ்த்திட்டு அவங்கவங்க வூட்டுக்கு போய் வயிறார சாப்பிடனும்னு குட்டீஸ் கார்னர் சார்புல வேண்டி விரும்பிக் கேட்டுக்கறோம்!!

.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி3 @ காயத்ரி ஆண்டி.....

Thursday, August 7, 2008

குசும்பு மாமா நீங்க சொன்னபடியே செஞ்சிட்டேன் அடுத்து என்ன பண்ணட்டும்

நீங்க சொன்னத செஞ்சிட்டேன், அடுத்த்து என்ன பண்ணலாம் ?



இதுக்கு மேல எட்டல...

Tuesday, July 22, 2008

மைஃப்ரண்ட் அனு ஆண்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




ஊருக்கே போஸ்டர் அடிச்சி ஒட்டி வாழ்த்து சொல்லும் எங்க சங்கத்தின் மூத்த பெண் சிங்கமும், தேன்கிண்ணத்தின் முழுநேர RJவும், 24/7 ஃப்ரேம்ஸின் ஓனருமான அன்புத் தோழி அனுவுக்கு குட்டீஸ் கார்னரின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சீக்கிறமே சங்கத்தில் குட்டி அனுவுக்கு அட்மிஷன் போடவும் மனதார வாழ்த்துகிறோம்.

Tuesday, July 15, 2008

என் கை வண்ணங்கள்

குட் மார்னிங் பிரண்ட்ஸ், நான் இப்ப ஸ்கூல்க்கு விளையாட போறேன் தெரியுமா. ஆல்ரெடி என்மேல பசங்க கூட சண்டை போடறேன்னு கம்பிளைன்ட் வந்தாச்சி.

அப்புறம் நல்லா ஆக்டிவிட்டீஸ் பண்ணதுக்கு கைல ஸ்டார் கூட வெச்சி விட்டாங்க மிஸ். இப்போதைக்கு ஒரு சின்ன டான்ஸ் மட்டும் கத்து இருக்கேன்.

ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சது படம் வரைவதுதான். வீட்டில சுவத்தில எல்லாம் கைக்கு எட்டர வரைக்கும் வரைஞ்சிட்டேன், இப்ப தான் வாட்டர் கலர் எப்படி போடரதுன்னு கத்துறுக்கேன் நீங்க பாருங்க பிடிச்சிருக்கா உங்களுக்கு.





Saturday, July 12, 2008

குட்டி பாப்பா ஜெய்ஸ்ரீக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அண்ணாச்சி ஜீவ்ஸ் @ ஐயப்பர் வீட்டு தேவதை குட்டி பாப்பா ஜெய்ஸ்ரீக்கு இன்று இரண்டாவது பிறந்த தினம். பாப்பா என்றும் நலமுடனும் சந்தோஷத்துடனும் வாழ குட்டீஸ் கார்னர், ஆண்டிஸ் அங்கிள்ஸ் க்ளப், தாத்தா பாட்டீஸ் சங்கம் ஆகிய அனைவர் சார்பிலும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். நம் சார்பில் குட்டி பாப்பாவை வாழ்த்த G3யை பெங்களூருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

***********************************

மூன்று நாட்களாய் இணையம் பக்கம் வர முடியாமல் போனதால் கவிதாயினி காயத்ரியின் பிறந்த நாளை இணையத்தில் கொண்டாட முடியாமல் போய்விட்டது. ஜூலை 13 (1958)ம் தேதி தனது பிறந்த நாளை ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் பிரமாண்டமாக கொண்டாடிய அழுகாச்சி கவிதாயினி காயத்ரிக்கு தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Sunday, June 22, 2008

இனிய காலை வணக்கம்

ஹையா ஜாலி இன்னிக்கு எனக்கு ஷ்கூல் லீவு....

இன்னிக்கு முழுக்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்...

என்னோட ஷ்கூல் எப்படி இருக்கு பாருங்க.... அங்க கூட எப்பவும் விளையாட்டு மட்டும் தான்...







அப்படியே என்ன இந்த சின்ன வயசில பள்ளிகூடத்தில சேர்த்த இம்சைய திட்டரவங்க எல்லாம் வரிசையா வந்து திட்டுங்க.... ரெடி ஸ்டார்ட் மீஜிக்...

Thursday, May 15, 2008

நம்ம வீக் எண்ட் ஜொள்ளு வித்வான் மங்களூராருக்கு இன்று பிறந்த நாள

வாழ்க்கைல ஒவ்வொருத்தர்க்கும் ஒவ்வொரு மாதிரி ஹாபி இருக்கும். சிலர் ஸ்டாம்ப் சேகரிப்பாங்க.. சீலர் நாணயங்கள்.. சிலர் பல நாட்டு கரன்ஸிகள் .. இந்த மாதிரி இன்னும் சில.. ஆனா இவர் ஜொள்ளு விடற மாதிரி குளுகுளு படங்கள் சேகறிக்கிறார். ஆனா இப்போ அந்த வேலைய விட்டுட்டு முழு நேர முத்தக் கவுஜரா மாறிட்டார். நம்ம வீக் எண்ட் ஜொள்ளு வித்வான் மங்களூராருக்கு( இப்படி தான் அவர சொல்லனுமாம்..) இன்று பிறந்த நாள். மாமா.. உங்களை வாழ்த்த எங்களுக்கு வயதில்லை... ஆகவே வணங்குகிறோம்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாம்ஸ்... வாழ்க வளமுடன்...

Wednesday, May 14, 2008

அப்பாவி சிறுமி துர்க்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மலேசிய நேரப்படி இன்றும் இந்திய நேரப் படி நாளை(மே15)யும் பிறந்த நாள் காணும் தமிழ் வலைப்பதிவுலகின் ஒரே அப்பாவி சிறுமியும் மலேசியா மாரியாத்தாக்கள் முன்னேற்றக் கழக தலைவியுமான தோழி துர்க்காவிற்கு குட்டீஸ் கார்னரின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியமான உடல் நலத்துடனும் ஒவ்வொரு வினாடியும் சந்தோஷமான தருணங்களுடன் வாழ அன்புடன் வாழ்த்துவோம்.

Friday, May 2, 2008

அபிராமி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்


"என்னோட பிறந்தநாள் விருந்து.. வாங்க வாங்க.. ":P
நிலா போல் பதிவராக இல்லை என்றாலும் இவள் பெயரில் இவள் அப்பா அடிக்கும் லூட்டியில் அபியப்பா பதிவை விட அபி தான் ரொம்ப பிரபலம். உபசரிப்பில் அப்படியே அவள் அம்மாவின் அவதாரம்.இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.இதனால சகலமானவங்களுக்கும் தெரிவிக்கிறது இன்னான்னா.. நம் அபி பாப்பாவிற்கு நாளை ( மே. 3ம் தேதி) பிறந்த நாள். அதனால அல்லாரும் ஜோரா அபி பாப்பாவுக்கு வாழ்த்து சொல்லி ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ்.... :))

தலைப்பு பாத்து கன்பீஸ் ஆவாதிங்க.. அது சும்மா டமாசு மரியாதைக்கு.. :P

நிலா குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

இந்தாங்க என் பர்த்டே ட்ரீட் :P

Ilaya nila.mp3

சங்கத்து பெண்சிங்கமும் தமிழ் பதிவுலகின் குட்டி தேவதையுமான நம்ம நிலா குட்டிக்கு நாளை (மே 3ம் தேதி) பிறந்தநாள். இதனால் பொது மக்களுக்கு அறிவிக்கிறது இன்னான்னா அல்லாரும் பாப்பாவுக்கு வாழ்த்து சொல்லி ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ்.

Wednesday, April 16, 2008

அய்யனார் மாமா அத்தைய பத்திரமா பாத்துக்கோங்க !

இன்று இல்லற வாழ்வில் அடி எடுத்து வைக்கும் அய்யனார் அங்கிளுக்கு குட்டீஸ் கார்னரின் அன்புமிகுந்த திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.

மாமா அத்தை உங்களை அடிக்காம இருக்க நாங்கள் வாழ்த்துக்கிறோம்.

குசும்பன் மாமா கல்யாணத்துக்கு குட்டீஸின் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.


இவ்வளவு நாள் எங்களுக்கு மட்டும் அங்கிளா இருந்த குசும்பன் அங்கிள் மஞ்சு ஆண்டியை மணந்து இன்று முதல் அதிகாரப் பூர்வமாக அங்கிள் ஆகிறார். குசும்பன் மாமா மற்றும் மஞ்சு ஆன்டிக்கு குட்டீஸ் சார்பில் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். aஅடுத்த ஆண்டு குட்டீஸ் கார்னரில் குட்டி குசும்பனோ குட்டி மஞ்சுவோ சேர வாழ்த்துக்கள்.

Saturday, March 22, 2008

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவன்!

நம்ம சங்கத்து சிங்கம் பவனுக்கு இன்று பிறந்தநாள். ஏற்கனவே பலரும் வாழ்த்து சொல்லியாச்சி. இன்னும் சொல்ல வேண்டியவங்க எல்லாரும் சொல்லிடுங்க. வாழ்த்து சொல்றவங்க பேர் எல்லாம் சேர்த்து ஒரு வழ்த்து அட்டை தயாரித்து பவனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். :) இது வரை வாழ்த்து சொன்னவங்க....

Monday, March 17, 2008

பிரேக்கிங் நியூஸ் மங்களூர் சிவா & பொடியன் சஞ்சய் அடிதடி சண்டை

அடிச்சிட்டோம்ல 300. மொக்கை + கும்மி எல்லாம் கூட்டி கழிச்சி பாருங்க 300 வந்திருச்சில்ல.


மங்களூர் மாமாவுக்கும் பொடியன் அங்கிள்கும் சண்டை. குசும்பன் மாமா மகிழ்ச்சி. ஏன் எதற்கு பாருங்க பாருங்க பாத்துக்கிட்டே இருங்க.

Sunday, March 16, 2008

எனக்கு 489 ! உங்களுக்கு எவ்வளவு ?

படம் பாருங்க உங்களுக்கு புரியும். இத பத்தின உங்க கருத்து என்ன ?

பிரார்த்தனை செய்வது எப்படி ?

இது இம்சைக்கு பிடிக்காது ஆனா என்னோட அம்மாக்கு பிடிக்கும். என்ன செய்யரது அம்மாக்கு கடவுள் நம்பிக்கை உண்டு, ஆனா அப்பாக்கு இல்லை. இத பத்தி பேரண்ட்ஸ் கிளப்ல சீக்கிரம் ஒரு பதிவு போடுங்க.








கடிகாரம் சொல்லும் நேரம்.

கடிகாரத்தின் கதைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ஒரு நாளை 24மணிநேரத்தை சரியாக பிரிப்பதுநல்லது என்று அறிந்து செய்தார்கள். (12 மணிநேரம் பகல் & 12 மணி நேரம் இரவு). இப்படி செய்வதால் நேரத்தை முறையாக அளவிட முடிந்தது.


எதற்காக 12 மணிநேரத்திற்கு பிரித்தார்கள்? 12 பொளர்ணமிகள் ஒரு வருடத்தில் வருகிறது. இதனால் 12 மிக விசேஷம்.


ஒரு மணி நேரம் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிமிடங்களும் 60 நொடிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சுமேரியர்களின் முறை 60ஆம் எண்ணைச் சார்ந்திருப்பதாலேயே, இவ்வாறு பிரித்தனர். A.M Ante meridiem ( latin word) - Before noon - முற்பகல்

P.M. Post meridiem (latin word) - After noon - பிற்பகல்

Saturday, March 8, 2008

சங்கத்து சிங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


இதனால சகலமானவங்களுக்கும் தெரிவிக்கிகறது இன்னான்னா.. நம்ம சங்கத்து சிங்கமும்.. தமிழ் பதிவுலகின் குட்டிராஜாவுமான பவன் அவர்களுக்கு இந்த மாதம் 22ம் தேதி பொறந்தநாளுங்கோ. அதனால அல்லாரும் வந்து நம்ம குட்டிராஜாவ வாழ்த்தி ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ்... குட்டீஸ்கார்னரின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவன். நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்று அப்பாவை போலவே பொதுநல உணர்வோடு சிறந்த மனிதனாக வாழ வாழ்த்துகிறோம். :))