Showing posts with label கணக்கு. Show all posts
Showing posts with label கணக்கு. Show all posts

Wednesday, December 5, 2007

9ஆம் வாய்ப்பாடு கையாலே சொல்லலாமா? U/A

வாய்ப்பாடு (Times tables) மனப்பாடம் செய்வது கஷ்டமாக இருக்கிறது எனும் குட்டீஸ்'க்கு ஒரு எளிய வழி இது.

9 ஆம் வாய்ப்பாட்டை கையாலேயே சொல்ல பழகிக்கொண்டால் சுலபமாக மனப்பாடம் ஆகிவிடும். எடுத்துக்காட்டு : 9 * 2 = 18.

இதற்கு வலது கையின் இரண்டாவது விரலை மடக்கிக் கொண்டால், வரும் விடை 1 + 8 (மடக்கிய விரலைத்தவிர மீதம் இருக்கும் விரல்கள் தான் விடை.

9 * 1 = 9

9 * 2 = 18
இங்கே 1 (சுண்டு விரல்) + 8 (மீதி விரல்கல்) = 18

9 * 3 = 27
இங்கே 2(சுண்டு விரல்+ பக்கத்து விரல்) + 7 (மீதி விரல்கல்) = 27
9 * 4 = 36

9 * 5 = 45

9 * 6 = 54

9 * 7 = 63
9 * 8 = 72
9 * 9 = 81
9 * 10 = 90
என்ன குட்டீஸ் சுலபமா இருக்கா? உபயோகமா இருக்கா? பதில் பின்னூட்டத்தில் சொல்லுங்க.
அன்புடன்
புதுகைத் தென்றல்

65 பெருக்கல் கணக்கு U/A

பெருக்கல் கணக்கு Posted by வெங்கட் as கல்வி
வெங்கட் அண்ணா உங்க இந்த பதிவு நாங்க காப்பி பண்ணிக்கறோம், வருத்தப்படாதிங்க.

பெருக்கல், வகுத்தல் கணக்குகளை குழந்தைகளுக்குச் சொல்லித்தர பல செய்முறைகள் இருக்கின்றன. இந்தியாவில் படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் Traditional Algorithm என்ற முறையில் பெருக்கக் கற்றுக் கொண்டவர்கள். இன்றளவும் நான் இதைத்தான் பயன்படுத்திவருகிறேன்.

என்னுடைய பையனுக்குச் சொல்லித்தரும்பொழுது செய்வழிகளுக்கு முன்னால் உள்ளுணர்வின் அடிப்படையில் அவனாக எப்படிச் செல்கிறான் என்பதை அவதானிப்பது என் வழக்கம். மேற்கொண்டு படிக்குமுன் இந்த வீடியோவைப் பாருங்கள்:

இதில் வருகின்ற Partial Fractions Method உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது. ஆறாம் வகுப்பிலோ, ஏழாம் வகுப்பிலோ படித்ததாக நினைவு. Lattice Algorithm பாடமுறையில் படித்த நினைவு இல்லை. ஆனால் பொழுதுபோக்கு கணிதம் போன்ற ஏதோ ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

இங்கே (ஒண்டாரியோ மாநிலம், கனடா) நான்காம் வகுப்பு படிக்கும் என் மகனுக்குப் போதுமான அளவுக்குக் கணக்கு பயிற்சித் தரப்படுவதில்லை என்பது என் கருத்து. இந்த வீடியோவின் அடிப்படையில் விவாதிக்கப் பல விடயங்கள் இருக்கின்றன. வரும் நாட்களில் எழுதலாம் என்று எண்ணம்.
நீங்கள் ஒரு சிறுமிக்கோ, சிறுவனுக்கோ கற்றுக் கொடுத்தால் எப்படிக் கற்றுக் கொடுப்பீர்கள்?

Monday, December 3, 2007

51. எங்களுக்கு புரியல கொஞ்சம் doubt கிளியர் பண்ணுங்க பிளிஸ்

முத்துலெட்சுமி ஆன்ட்டி, காயத்ரி ஆன்ட்டி, கண்மணி ஆன்ட்டி மூனு பேரும் ஒரு காபி ஷாப் போய் 'டீ' சாப்ட்டாங்க.

ஒரு டீ ரூபாய் '10', மூனு டீ'க்கு '30' ரூபாய் டேபிள்ல வெச்சிட்டு போனாங்க, ஆனா அந்த கடைல ஒரு டிஸ்கவுன்ட் ஸ்கீம் வெச்சி இருந்தாங்க. மூனு டீ சாப்டா ரூபாய் 25 தான்.

அதனால அந்த காபி ஷாப் ஓனர் அந்த கடை பையன் கிட்ட '5' ரூபாய் மீதி குடுத்துவிட்டார். அதில மூனு ஆன்ட்டியும் ஈச் 1 ருபி எடுத்திட்டு 2 ருபி அந்த பையனுக்கு டிப் குடுத்தாங்க.

இப்ப நம்ம .:: மை ஃபிரண்ட் ::. அக்கா'க்கு கணக்குல எப்பவும் போல டவுட் வந்திருச்சி. மூனு ஆன்ட்டியும் ஈச் 10 ருபி செலவு பண்ணாங்க அதில ஈச் 1 ருபி ரிட்டர்ன் வாங்கிட்டாங்க. அப்ப ஒருத்தர் 9 ருபி செலவு பண்ணாங்க, சொ டோட்டல் 27 ருபி. ஹோட்ல் பையனுக்கு 2 ருபி டிப். ஆக மொத்தம் 27+2 = 29.

மீதி 1 ருபி எங்க எங்க எங்க எங்க எங்க?

இதயும் எஞ்சாய் பண்ணுங்க... அப்படியே செந்தில் அங்கிள் கேள்விக்கும் பதில் சொல்லுங்க