பெயர் : குசும்பன்பெயர் காரணம் : பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை அவர் எதிர் பார்த்த மாதிரி அமையாத்தால் உள்ளுக்குள் இருக்கும் சோகத்தை மறைக்க பிற பதிவர்களையும் பதிவுகளையும் கலாய்த்து சம்பந்த்தப் பட்டவர்களே அந்த கலாய்ப்புக்கு சிரித்து( சின்னாப்பின்னமாகி) பின்னூட்டம் போடும் அளவுக்கு குசும்பு பண்ணுவதால்.
அடிக்கடி வரும் கனவு : யாரையாவது கலாய்க்கிற மாதிரி
சமீபத்திய சாதனை : விற்பனையில் சக்கை போடு:( போட்ட மேக்கப் செய்வது எப்படி என்ற ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியது.
நீண்டகால வேதனை : ஒரு கேர்ள் ப்ரண்டும் கிடைக்காதது.
தொழில் : யாரயாவது கலாய்த்துக் கொண்டிருப்பது, எதிர் கவுஜ எழுதுவது.
உபதொழில் : எப்போதாவது உருப்படியான பதிவு போடுவது.
முடியாதது : அலுவலகத்தில் வேலை பார்ப்பது.
முடிந்தது : வேலைத் தவிர வேறெல்லாம் பார்ப்பது.
அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் : எனக்கொரு கேர்ள் ப்ரண்ட் வேணுமடா.
நொந்து போயி புலம்பும் பாடல்; எனக்கொரு கேரளா ப்ரண்ட் வேண்டாமடா
ஆப்பு : தலைப்பை பாத்துட்டு குட்டீஸ் தான் ஆப்பு வைக்க போறோம்னு நெனச்சிங்களா? அதான் இல்ல.. அவர் குசும்பு தாங்காம அவங்க அப்பா அம்மாவே அவருக்கு ஸ்பெஷல் ஆப்பு ரெடி பண்ணிட்டாங்க..அதாங்க.. குசும்பன் மாமாக்கு விரைவில் கல்யாணம் ஆகப் போகுது.( இத விட பெரிய ஆப்பு எங்களால வைக்க முடியாது :P )
ஆப்புத் துறை, குட்டீஸ் கார்னர்.
இதையும் கொஞ்சம் பாருங்கஅன்புடன் உங்களை அறிவு கடன் தர அழைக்கிறொம்... TEACH - To Educate A CHild