Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Monday, February 25, 2008

291 ஆத்திச்சூடி - புரியல விளக்கவும்

கொஞ்சம் விளக்கம் குடுங்க புரியல. அன்டர்லைன் பண்ணிருக்க வரிகளை பாருங்க அதற்கு குட்டிஸ் கிட்ட சிம்பிளா எப்படி சொல்லி புரியவைக்கரது.
அறம் செய விரும்பு
நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.
ஆறுவது சினம்
கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
இயல்வது கரவேல்
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஓளிக்காது கொடு.
ஈவது விலக்கேல்
ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
உடையது விளம்பேல்
உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
ஊக்கமது கைவிடேல்
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
எண் எழுத்து இகழேல்
கணித, இலக்கண நூல்களைத் தவிற்காமல் நன்கு கற்க வேண்டும்.
ஏற்பது இகழ்ச்சி
இரந்து வாழ்வது இழிவானது.அதனால் யாசிக்கக் கூடாது.
ஐயம் இட்டு உண்
யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.
ஒப்புரவு ஒழுகு
உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடுபொருந்துமாறு நடந்துகொள்.
ஓதுவது ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
ஔவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
அஃகஞ் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே,

Tuesday, January 29, 2008

திருப்பூர் குமரன்

திருப்பூர் என்றால் உடனே உங்களுக்கு என்ன ஞாபகம் வருது. இவர உங்களுக்கு ஞாபகம் வருதா...

1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன். இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

http://en.wikipedia.org/wiki/Tirupur_Kumaran

http://sivabalanblog.blogspot.com/2007/08/blog-post_14.html

திருப்பூர் குமரன் அவர்களை பற்றி உங்களுக்கு தெரிந்ததை எங்களுக்கு தெரிவியுங்கள்.

Tuesday, January 22, 2008

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் - Please give your views

"ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல"

இப்படி சொன்னவர் நமது நேதாஜி. கண்டிப்பாக விவாதத்திற்குறிய கருத்து. எனக்கு கண்டிப்பாக இதில் உடன்பாடு உண்டு. மற்ற அனைவரின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.

ஒரு வேளை இந்த கருத்தின் அடிப்படையில் நமக்கு 60 ஆண்டுகளுக்கு முன் சுதந்திரம் கிடைத்து. நேதாஜி நமது நாட்டின் தந்தையாக போற்றப்பட்டு இருந்தால். இந்தியா இன்னும் முன்னேறிய நாடாக இல்லாமை வல்லரசாகி இருக்குமா இல்லை நாம் இன்னும் பின் தங்கிய நாடாகவே இருந்திருக்குமா.

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம். Kindly let us know your views please.

நேதாஜி அவர்களை பற்றிய நிறையெ தமிழ் கட்டுரைகள் நெட்டில் உள்ளது இதோ உங்களுக்காக ஒன்று

http://www.tamilnation.org/forum/sabesan/061023netaji.htm

Tuesday, January 15, 2008

விடுதலை வீரன் வீர வாஞ்சிநாதன்

விடுதலை வீரன் வீர வாஞ்சிநாதன் நன்றி திரு http://www.ennar.blogspot.com/

""இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள்'' என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் ஒருவராகத் தான் வாஞ்சிநாதன் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்.

உண்மையில் இவர் இதற்கும் மிக மேலே. இவர் வரலாற்று நாயகன். ஆனால், அவரது தீரச் செயலின் கன பரிமாணம் தனித்தன்மை வரலாற்று முக்கியத்துவம் சரியாக உணரப்படவில்லை.

ஆங்கிலேயர்கள் நாடு விட்டு நாடு வந்து இந்த மண்ணை ஆக்கிரமித்து இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களையே அடிமைப் படுத்திக் கொண்டவர்கள். தமிழகத்தில் தங்களை எதிர்த்துப் போராடிய புலித்தேவன், சின்னமலை, கட்டபொம்மன், ஊமைத்துரை, அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் ஆகியோரை இந்த மண்ணிலேயே தூக்கிலிட்டுக் கொன்றவர்கள்.
கட்டபொம்மன் வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்த்து தரைமட்டம் ஆக்கியதுடன் அந்த மண்ணில் தங்களுக்கு எதிராக மீண்டும் ஒரு போராட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக அந்த ஊரையே ஏர் கொண்டு உழுது விட்டார்கள்.

வேலூர்ப் புரட்சியின் முடிவில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட பின் அவர்களது வாரிசுகள் மீண்டும் தங்களுக்கு எதிராகத் தலை எடுத்து விடக் கூடாது என்பதற்காக இளம் சிறார்களாயிருந்த அவர்களது மகன்களையும் மருதுபாண்டி யருக்குத் துணை நின்ற புரட்சிக் காரர்களையும் மலேயாவுக்கு நாடு கடத்தி அங்குள்ள சிறையில் அடைத்தவர்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட தமிழர்களின் உடல்களைச் சுற்றி இரும்பு விலங்குகள் பூட்டப்பட்டு அவர்கள் நடக்கும் பொழுது "கிளிங்' "கிளிங்' என்று ஓசை எழுப்பியதால், தமிழர்களுக்கு ""கிளிங்கர்கள்'' என்ற பட்டப் பெயர் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.

பிற்காலத்தில் ஆஷ்துரை கூடத் தன் பங்கிற்குத் தூத்துக்குடியில் ஊர்வலமாக வந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் சிலரைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறார். இத்தகைய கொடுமைக்கார ஆங்கிலேயரை எதிர்த்துப் பிற்காலத்தில் தமிழகத்தில் தமிழர்கள் கொடிபிடித்திருக் கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்களே தவிர, யாரும் ஆயுதம் ஏந்தவில்லை 1806 இல் குறுநில மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய வேலூர்ப் புரட்சிக்குப் பின் 105 ஆண்டுகள் கழித்து அந்தக் குறையைப் போக்கி அவர்களிடம் கணக்குத் தீர்த்தவர் வாஞ்சிநாதன் தான்.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேய அரசை எதிர்த்து தமிழகத்தில் நடந்த போராட்டங்களின் பாதிப்புகள் எல்லாம் தமிழக எல்லையைத் தாண்டவில்லை. ஆனால், வாஞ்சிநாதன் நிகழ்த்திய தீரச் செயல்தான் இந்திய எல்லையையும் தாண்டி நம்மைப் பாதித்துக் கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டையே உலுக்கியது. ஆங்கிலேயரிடம் பாதிப்பை ஏற்படுத்தியது. தகவல் தொடர்பு, போக்குவரத்து ஆகிய துறைகளில் மிகவும் பின் தங்கியிருந்த அக்காலத்திலேயே வாஞ்சிநாதன் 1911, ஜுன் 17 இல் ஆங்கிலேயப் பேரரசின் பிரதிநிதியான கலெக்டர் ஆஷ்துரையைச் சுட்டது பற்றி 1911 ஜுன் 19 ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இவர் தான் வெளிநாட்டுப் பத்திரிக்கையின் தலையங்கத்தில் புகழப் பட்டவர். இந்திய விடுதலையில் மிகவும் அக்கறை கொண்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் பக்கபலமாகத் திகழ்ந்த மேடம் காமா அவர்கள் அப்போது பாரீஸ் நகரிலிருந்து வெளியான தனது ""வந்தே மாதரம்'' பத்திரிக்கையின் தலையங்கத்தில் வாஞ்சிநாதன் தீரச் செயலைப் புகழ்ந்து இவ்வாறு எழுதினார்.

""திருநெல்வேலி கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் என்ற இளைஞர் பட்டப் பகலில் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி இந்திய மக்கள் உறங்கவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வடக்கோ, தெற்கோ, கிழக்கோ இந்தியாவின் எந்தப் பகுதியுமே இனிமேல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பான பகுதிகள் இல்லை என்பதை எச்சரிக்கும் அபாயச் சங்கு ஊதப்பட்டு விட்டது.

இதுவரை மிதவாத அரசியலின் தொட்டிலாக விளங்கி வந்த தென்னாட்டிலும் புரட்சிக் கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது. இனிமேல் இந்தியாவில் பணியாற்ற வரும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போதே தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் வர வேண்டியிருக்கும்.''

வாஞ்சிநாதனும் வ.உ.சியும்
வ.உ.சி. மென்மையான மேன்மையான பண்புக்குச் சொந்தக்காரர். ஈ, எறும்புக்குக் கூடத் துன்பம் விளைவிக்காதவர். இத்தகைய வ.உ.சியே கூட, சிறையிலிருந்த தன்னிடம் சிறைக்காவலன் கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற செய்தியைக் கூறியதும், ஆஷ்துரை கொல்லப் பட்டதற்காகக் கொஞ்சமும் இரக்கப்பட வில்லை.

மாறாக, ""நல்ல செய்தியைச் சொன்னாய் நீ நலம் பெறுவாய்'' என்று அவனை வாழ்த்தினார். அத்துடன் அவனிடம் தான் சிறைவாசம் அனுபவிப்பதற்கும், தனது கப்பல் கம்பெனி நசிந்து போனதற்கும் இந்த ஆஷ்துரைதான் காரணம் என்றும் விளக்கினார்.

ஆங்கிலேயர் காலத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் சிறைவாசம் என்பது கடுமையானது & கொடுமையானது. இந்தச் சூழ்நிலையில், ""இங்கிலாந்து சக்கர வர்த்தியின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தண்டனைக் குறைப்பு இந்த ஆண்டு வ.உ.சிக்கு கிடையாது'' என்று அந்த சிறைக் காவலன் கூறிய போது ""இப்பொழுது மட்டுமல்ல, இனி எப் பொழுதுமே எனக்கு விடுதலை இல்லா விட்டாலும் கூடப் பரவாயில்லை'' என்று அலட்சியமாக அவர் பதில் கூறினார் என்றால் ஆஷ்துரை கொல்லப்பட்டது அவருக்கு எத்தகைய மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

முத்துராமலிங்கத் தேவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியாதை. ""சூரரைப் போற்று'' என்பார் பாரதி. யாருக்கும் தலைவணங்காத தன்மானச் சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன் அப்போது சென்னையில் வசித்து வந்த வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் அம்மையாரைச் சந்தித்து அவருடைய காலில் விழுந்து வணங்கி அவருக்கு ஒரு புடவை வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இது அவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியா தைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

(திரு.பி. ராமநாதன் வருடந்தோறும் ஜுன் 17 ஆம் தேதி வாஞ்சி இயக்கம் சார்பில் வாஞ்சி பிறந்த புனித மண்ணான செங்கோட்டையில் மாவீரன் வாஞ்சிநாதன் நடு கல்லுக்கு வீர வணக்கம் செலுத்தும் விழாவை வருடந்தோறும் நடத்தி வருகிறார்).

அங்கிள் உங்க அனுமதி இல்லாம காப்பி பண்ணிட்டோம் மன்னிச்சிக்கோங்க.

Saturday, January 12, 2008

நரேன் (எ) விவேகானந்தர் Jan 12 1863

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, ஜனவரி 12, 1863 - ஜூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.

The Complete Works of Swami Vivekananda online
The Life and Teachings of Swami Vivekananda
Advaita Ashrama
Vivekananda's biography
Sri Ramakrishna Math.org
Vivekananda's speech at World Parliament of Religion, Chicago
Vivekanand Swadhyay Mandal
Poetry of Swami Vivekananda
A Chronological Record of Swami Vivekananda in the West
Swami Vivekananda at the World's Parliament of Religions in 1893 - 3 famous speeches in Text + Audio versions.

விவேகானந்தரின் பொன்மொழிகள்

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

Tuesday, January 8, 2008

வரலாறு - மாவீரன் பகத் சிங்

மாவீரன் பகத் பற்றிய ஒரு வாழ்கை வரலாற்று சிறு குறிப்பு: நன்றி வவ்வால்
செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் 1907 ஆண்டு, பஞ்சாபில் உள்ள லாயல் பூர் என்ற கிராமத்தில் சர்தார் கிஷன் சிங்க் மற்றும் வித்தியாவதிக்கும் பிறந்தார். அவர் குடும்பமே விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்டதால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்.

சிறு வயதிலேயே ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்.

லெஜண்ட் ஆப் பகத் சிங்க் திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி!




அவரது நண்பர்கள் சுக்தெவ், ராஜ்குரு, ஆகியோருடன் சேர்ந்து சந்திர சேகர்ஆசாத்தின் உதவியுடன் " Hindustan Socialist Republican Army (HSRA)" என்ற அமைப்பை உருவாக்கி சுதந்திரப்போரில் ஈடுபட்டார். சிறு வயதிலேயெ கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையர்களை வேட்டையாட வேண்டும் எனக்கனவு கண்டவர்.

அவர் புரிந்த சாகசங்கள் எண்ணற்றவை இறுதியாக செண்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடி குண்டு மற்றும் துண்டு பிரசுரம் போட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கம் இட்டு தானே சரணடைந்து பின்னர் நடைப்பெற்ற லாகூர் கொலைவழக்கு விசாரணையில் தூக்கு தண்டனை அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் விதிக்கப்பட்டது . அப்போது விடுதலைப்போர் என்பதும் ஒரு போர் தான் எனவே எங்களை போர்க்கைதிகளாக நடத்தி தூக்கில் போடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள வேண்டும் என மரணத்தையு விரும்பி வரவேற்ற வீரன்!

தூக்கு தண்டனையை நிறுத்த சொல்லி காந்தியிடம் பலரும் முறையிட்டனர், அப்பொழுது இர்வின் பிரபுவிடம் ஒரு ஒப்பந்தம் இட காந்தி இருந்தார், பகத் சிங்க் தூக்கை நிறுத்தினால் தான் ஒப்பந்தம் போடுவேன் என சொன்னால் வெள்ளையர்கள் கேட்பார்கள் என நேரு முதலானோர் எடுத்து சொல்லியும் காந்தி வன்முறை வழியில் செயல் படுபவர்களுக்கு ஆதரவாக செயல் பட மாட்டேன் என வேதாந்தம் பேசி மறுத்து விட்டார். கடைசியில் மார்ச் 23, 1931 இல் பகத் சிங்க் அவர் நண்பர்கள் சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கில் இடப்பட்டனர். அதற்கு ஒரு நாள் முன்னதாக காந்தியும் ஒப்பந்தம் செய்து கொண்டார். காந்தியின் தீவிர சீடர் ஆன நேருவே மனம் வெறுத்து , இன்னும் ஒரு நாள் கழித்தி கை எழுத்து போட்டிருந்தால் அதற்கு பகத் சிங்கின் ரத்தம் கிடைத்து இருக்கும் என சொன்னார்.

ஒரு சே கு வேரா போல இந்தியாவில் இளைஞர்களை வசிகரிக்கும் திறன் கொண்ட மாவீரன் பகத் சிங். அவருக்கு இந்தியா என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

நன்றி
http://vovalpaarvai.blogspot.com/2007/09/blog-post_9149.html
வீர மகன் சர்தார் பகத் சிங் annaiyin arul
http://groups.google.com/group/muththamiz/browse_thread/thread/ba8bd8e3a1156c43
http://www.keetru.com/literature/essays/asuran_3.php
மாவீரன் பகத் சிங் - தமிழ் மக்கள் இசை விழாவில் இருந்து !
விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்
மாவீரன் பகத்சிங்
விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்
விடுதலைப் போரின் விடிவெள்ளி !
தீவிரவாதிக்கு இன்று பிறந்தநாள்!

Tuesday, January 1, 2008

வரலாறு - மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார்

அந்த காலத்தில் சுதந்திரப் போராட்டத்துடன் சேர்த்து சமுதாய விடுதலைக்காகவும் போராட வேண்டியிருந்தது. அப்படி போராடியவர்களில் மிக முக்கியமானவர் ராமாமிர்தம் அம்மையார்.

நன்றி ♠ யெஸ்.பாலபாரதி ♠
எத்தனையோ மாமனிதர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஆனால், பல சாதனையாளர்கள் அப்படிப் பதிவு செய்யப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறார்கள். குடத்திலிட்ட விளக்காய் ஒளிவீசும் அவர்களின் பெருமைகள், உலகத்திற்கு அதிகம் தெரியாமல் போனது பெரும் சோகம்.

அவர்களில் ஒருவர்தான் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார்.

சில வருடங்களுக்கு முன் தமிழக முதல்வர் கலைஞர் ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம்’ என்கிற திட்டத்தை அறிவித்தது நினைவிருக்கலாம். அந்தச் செய்தியைப் படித்த பலருக்குக் கூட, அவர் யார் என்பது தெரியாமல்தான் இருந்தது. ‘மூவலூர் மூதாட்டி’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் அவர். அவர் புரிந்த இமாலயச் சாதனைகள் யாருக்கும் தெரியாது.. அதற்குக் காரணம் அவர் புகழ் விரும்பி எதையும் செய்ததில்லை. கொள்கைக்காக, தன்னுடைய லட்சியத்துக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த தியாகி அவர்.

‘தேவதாசி’ என்னும் மகா மோசமான முறை ஒன்று, தமிழகத்தில் சோழர் காலம் தொட்டு இருந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மிகச் சிறு வயதிலேயே கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறோம் என்கிற பெயரில், கோயில்களுக்கு ‘நேர்ந்து விடப்பட்டு,’ அவர்களை ஊர்ப் பெரிய மனிதர்களின் ஆசை நாயகிகளாகவும், ஊராரை மகிழ்விக்கும் நடனப் பெண்மணிகளாகவும் ஆக்கியிருந்தது சமூகம். அவர்களின் தனிப்பட்ட ஆசைகளைப் பற்றியோ, நியாயமான உணர்வுகளைப் பற்றியோ எந்த அக்கறையும் இன்றி, ‘பொட்டு கட்டப்பட்டவர்களாகவும்’ ‘தேவரடியார்களாகவும்’ இழிவாகப் பேசப்படும் பிரிவினராகவும் அவர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். ‘நித்ய சுமங்கலி’ என்று பெயர் கொடுத்து, அவர்களைப் ‘புனிதப்படுத்தி’ ஏமாற்றினார்கள் அந்தணர்கள். உடலை விற்கும் தொழிலை அவர்களின் மீது திணித்து விட்டு, அதற்குச் சடங்குகளின் பேரால் புனிதப் போர்வை போர்த்தி அநியாயம் செய்து வந்தார்கள், சனாதனம் பேசிய உயர்ஜாதியினர். இந்த அவலம் பல நூற்றாண்டுகளாக நடந்து வந்தது.

அப்படிப்பட்ட தேவதாசி இனத்திலேயே பிறந்து, அதனால் பாதிப்படைந்து, அந்தத் தளைகளை அறுத்து எறிந்ததும் அல்லாமல், அந்தக் கேடுகெட்டப் பழக்கத்தையே ஒழித்துக் கட்டும் வரை ஓயாமல் உழைத்தவர்தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். அதற்காக அவர் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

சென்ற நூற்றாண்டில் 1883_ம் வருடம் பிறந்தவர் அவர். தேவதாசி சமூகத்தில் பிறந்தாலும், அவருடைய பெற்றோர்கள் அவரை அந்த இழிநிலைக்குத் தள்ளக் கூடாது என்றே வைராக்கியத்துடன் வளர்த்தார்கள். உறவினர்களும், வேறு சிலரும் ராமாமிர்தத்தின் தாய் தந்தையரிடம், ‘உங்கள் மகளுக்கு இசையும் நாட்டியமும் கற்றுக் கொடுங்கள், பிற்காலத்தில் அவள் அதை வைத்து நிறைய சம்பாதித்துக் கொடுப்பாள்’ என்று தொடர்ந்து வற்புறுத்திய போதும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் கோபமுற்ற சமூகம், ராமாமிர்தத்தின் தந்தையை ஒதுக்கி வைத்தது. பொருளாதாரரீதியில் அவரைத் தனிமைப்படுத்தியது. நாளடைவில் அவர்கள் அடுத்த வேளை உணவுக்குக்கூட வழியில்லாமல், வாழ்வின் ஓரத்துக்குத் தள்ளப்பட்டார்கள்.

ராமாமிர்தத்தின் தந்தையான கிருஷ்ணசாமி வாழ்க்கையில் வெறுப்புற்று, மனைவியையும், மகளையும் காப்பாற்ற முடியாத சோகத்தில், குடும்பத்தை விட்டு விலகி எங்கோ காணாமல் போனார். நிர்க்கதியாக நடுத்தெருவில் நின்ற தாய் சின்னம்மாள், பாவம் என்ன செய்வார்? உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோர் வீட்டுக்கும் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு நடையாய் நடந்தார். யாரும் உதவிக்கு வரவில்லை. ஆதரவற்ற நிலையில், தன் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேறு வழியின்றி, ஒரு தாய் செய்யவே முடியாத, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கொடுமையை அவர் செய்ய நேர்ந்தது. ஒரு தேவதாசியிடம் 10 ரூபாய் பணத்துக்கும், பழைய புடவைக்கும் தன் ஆருயிர் மகளை விற்றார் அந்தத் தாயார். அப்போது சிறுமி ராமாமிர்தத்தின் வயது ஐந்து. அதன் பிறகு, அக்குழந்தையின் வாழ்க்கைப் பாதையே மாறிப் போனது.

ஆடுதல், பாடுதல் என்று பல கலைகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. குழந்தையும் குமரியானாள். வயதுக்கு வந்த உடனேயே அவளுக்கு ஆபத்துக் காத்திருந்தது. அறுபது வயதுக் கிழவன் ஒருவன், தன்னிடம் பணம் இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக, அந்த இளம் பெண்ணை மணக்கப் பேராசை கொண்டான். அதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. ஆனால், அந்தக் கொடுமையைக் கண்டு பொங்கி எழுந்தார் ராமாமிர்தம். ‘கிழவனை மணக்க மாட்டேன்’ என்று அறிவித்தார். அத்தனை எதிர்ப்புகளையும் காலில் போட்டு மிதித்தார். அந்தக் காலத்தில் ஒரு பெண் இவ்வாறு துணிச்சலுடன் அறிவித்து, தனக்கு இசையும், நாட்டியமும் பயிற்றுவித்த இளைஞரையே மணப்பேன் என்று சூளுரைத்து, அதைச் செய்தும் காட்டியது என்பது மிகப் பெரிய காரியம். ராமாமிர்தம் சுயம்புப் பிள்ளையை மணமுடித்தது இப்படித்தான். இதற்குப் பிறகு ‘ஏதோ நம் வாழ்க்கை நல்லபடியாக முடிந்து விட்டது. இனி சொந்த நலனைப் பார்க்கலாம்’ என்று இல்லாமல், தேவதாசி முறையையே அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்று, அதற்காகப் போராடத் தொடங்கினார் ராமாமிர்தம். இதனால் பல இன்னல்களைச் சந்தித்த போதும், அவருடைய லட்சியத்துக்கு உறுதுணையாய் நின்றார், அவருடைய கணவர் சுயம்புப் பிள்ளை.

1917_ம் வருடம் முதல் மயிலாடுதுறை பகுதியில் தனது போராட்டத்தைத் துவங்கினார் ராமாமிர்தம். ஊர் நடுவே நின்று எரிமலையாக வெடித்துப் பிரசாரம் செய்து, ஒரு புயல் சின்னத்தைப் போல் சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார் அவர். தேவதாசிப் பெண்களிடம் சென்று ‘இந்த இழிவான வாழ்க்கையில் இருந்து விடுபடுங்கள்’ என்று எடுத்துரைத்தார். அவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘நாகபாசத்தார் சங்கம்’ என்கிற அமைப்பை ஆரம்பித்தார். (பிற்பாடு அது இசை வேளாளர் சங்கமாக மாறியது) அவர்களைக் கொண்டு இரண்டு பெரிய மாநாடுகளையும் கூட்டினார். இதனால் அவர் சந்தித்த எதிர்ப்புகள் ஏராளம். பெரும் அரசியல் தலைவர்கள், ஜமீன்தார்கள், மைனர்கள், காவல் துறையினர், அந்தணர்கள், ரவுடிகள் என்று பல தரப்பினரும் ராமாமிர்தத்தின் போராட்டத்தை நசுக்கவே முயன்றார்கள்.. அவ்வளவு ஏன், தங்கள் விடுதலைக்காகத்தானே போராடுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத தேவதாசி இனத்தவரே கூட, அவருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அரசியல் பின்னணி இல்லாமல் சமூக மாற்றங்களைக் கொண்டு வருவது கடினம் என்பதைப் புரிந்து கொண்ட ராமாமிர்தம், பிறகு காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், தி.ரு.வி.க, வரதராஜுலு போன்றவர்கள் தேவதாசி முறை ஒழிப்புக்காகக் குரல் கொடுத்து வந்தனர். அவர்களால் ஈர்க்கப்பட்டதும் காங்கிரஸில் ராமாமிர்தம் இணைந்ததற்கு ஒரு காரணம். ராமாமிர்தத்தின் போராட்டங்களைப் பற்றி அறிந்த காந்தியடிகள் கூட அவரைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். தேவதாசி முறை எவ்வளவு இழிவானது என்கிற விழிப்புணர்ச்சியை மக்களிடத்தில் ஏற்படுத்தியதில் பெரும் வெற்றி கண்டார்.

மத அடிப்படைவாதிகளின் ஆதிக்கம் காங்கிரஸில் அதிகப்படியாக இருந்தமையால், அவர்களால் பெரியார் போன்றோரின் புரட்சிகரமான கருத்துக்களை ஏற்க முடியவில்லை. குறிப்பாக, இட ஒதுக்கீடு பிரச்னையில் பெரியாரின் தீர்மானங்கள் அவர்களுக்கு வேப்பங்காயாகக் கசந்தன. அவர்களுடன் போராடிப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்ட பெரியார், சிங்காரவேலர் போன்றவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறினார்கள். அவர்களுடன் தானும் வெளியேறினார் ராமாமிர்தம். அதற்குப் பிறகு, பெரியார் தமிழகத்தில் ஏற்படுத்திய சூறாவளி மாறுதல்களில் ராமாமிர்தம் அவருக்குத் தோள் கொடுத்து நின்றார். ‘குடியரசு’ பத்திரிகையில் ராமாமிர்தத்தின் அனல் பறக்கும் கட்டுரைகள் தொடர்ந்து வெளி வந்தன. சுயமரியாதை இயக்க கொள்கைத் திட்டம் உருவானதில் ராமாமிர்தம் அம்மையாருக்குப் பெரும் பங்கு உண்டு.

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்காக சட்ட மன்றத்தில் அரும்பாடு பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும் நல்ல நட்பும் தொடர்பும் இருந்து வந்தது. சட்டமன்றத்தில் பணியாற்றுவது குறித்துப் பல ஆலோசனைகளையும், திட்டங்களையும் டாக்டர் முத்துலட்சுமிக்கு வழங்கினார் ராமாமிர்தம். தேவதாசி முறை ஒழிப்புச் சட்ட தீர்மானத்தை காங்கிரஸில் இருந்த சனாதனவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். அதில் முக்கியமானவர் ‘தீரர்’ சத்தியமூர்த்தி. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அந்தச் சட்டத்தைக் கொண்டு வர தீர்மானம் இயற்றியபோது, ஏதோ தீப்பட்டது போல் எதிர்த்த சத்தியமூர்த்தி, ‘தேவதாசி முறை தொடர்ந்து நடக்க வேண்டும்.. இல்லாவிட்டால் பாரம்பரியம் மிக்க இந்தியக் கலாசாரம் சீரழிந்து விடும்’ என்று ஆவேசப்பட்டார். ‘இவ்வாறு அவர்கள் தொடர்ந்து பேசினால், இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து விட்டனர். இந்தியப் பண்பாட்டைக் காக்க, இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும்’ என்று பேசுமாறு டாக்டர் முத்து லட்சுமியிடம் சொன்னார் ராமாமிர்தம் அம்மையார். அவ்வாறே முத்துலட்சுமியும் சட்டமன்றத்தில் எரிமலையாகப் பேச, அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட சனாதனவாதிகள். பல போராட்டங்களுக்குப் பிறகு, 1929_ம் வருடம், உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானமாய் விளங்கிய தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

‘தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்’ என்கிற தான் எழுதிய நாவலை 1936_ம் வருடம் வெளியிட்டார் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். அது தேவதாசிகளின் பரிதாப வாழ்வையும் , சொந்த அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டது. விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட இந்த நாவலை ஒரு வரலாற்று ஆவணம் என்றே சொல்லலாம். அரசியலிலும், கலைவாழ்விலும் ராமாமிர்தத்தின் பணிகள் இறுதி வரை தொடர்ந்தன. தேவதாசி முறை ஒழிக்கப்பட்டாலும் ரகசியமாகப் பல இடங்களில் அந்த முறை தொடர்ந்து நடந்து வந்தது. அங்கெல்லாம் நேரடியாகச் சென்று, விசாரணை நடத்திப் பல பெண்களை விடுவித்தார் அவர். அண்ணா, சிவாஜி கணேசன், டி.வி.நாராயணசாமி போன்றோர் நடித்த நாடகங்களில் தாயார் பாத்திரத்தில் தொடர்ந்து நடித்தார்.

“தனக்குப் பிறகு இயக்கத்தைக் கட்டிக் காத்து நடத்த மணியம்மையை விட்டால் வேறு யாருமில்லை’’ என்று பெரியார் அறிவித்தபோது ‘‘ஏன், எனக்குக் கூடவா அந்தத் தகுதி இல்லை?’’ என்று அவரிடமே நேரடியாகக் கேட்டார் ராமாமிர்தம். அப்போது திராவிடர் கழகத்திலிருந்து விலகி அண்ணா, தி.மு.க.வைத் தொடங்கியபோது, தன்னுடைய 70_வது வயதில் அவருடன் வெளியே வந்தார் ராமாமிர்தம் அம்மையார். பல்வேறு இயக்கங்களில் தீவிரப் பணியாற்றினாலும் தனக்கான முழு அங்கீகாரம் எங்குமே கிடைக்கவில்லை என்கிற மனப் புழுக்கம் அவருக்கு இருந்ததென்னவோ உண்மை. கண் பார்வை மங்கி விட்ட நிலையில், மாயவரத்தில் தன் மகனுடன் சிறுவர்களுக்குப் பாடம் நடத்தியபடி தன் கடைசி காலத்தைக் கழித்தார் அவர். 1962_ம் வருடம் சமூக விடுதலைக்காக உறக்கமின்றிப் போராடிய அந்த மூதாட்டி, எண்பதாவது வயதில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார். கடைசி வரை எந்தப் பதவியையும் அவர் வகிக்கவில்லை.

அவருக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் இரண்டுதான். ஒன்று, 1956_ல் அண்ணா வழங்கிய விருது. இரண்டு, 1989_ம் வருடம் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது மூவாலூர் ராமாமிர்தத்தின் பெயரில் அறிவிக்கப்பட்ட ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம். மற்றபடி, அந்த மாபெரும் மூதாட்டியைப் பற்றி யாருக்கும் நினைக்க நேரமில்லை. ☞

--------------------

தேவதாசி முறை ஒழிப்புக்காக வெறும் மேடைப்பேச்சுப் பிரசாரம் மட்டுமின்றி, கலை வெளிப்பாடாக பல நாடகங்களையும் ஊர் ஊராகச் சென்று போட்டு வந்தார் ராமாமிர்தம். அதைப் பொறுக்க முடியாத பழைமைவாதிகள், அவர் நாடகம் போட்டுக் கொண்டிருந்தபோது வன்முறைக் கும்பலாக மேடையேறிச் சென்று, அவர் கூந்தலைப் பிடித்து இழுத்து வெட்டி எறிந்தனர். மற்றொரு முறை பாலில் விஜம் கொடுத்துக் கொல்லவும் முயன்றனர். அதனால் எல்லாம் அவர் கலங்கிடவில்லை. தன் பணியின் தீவிரம் கொஞ்சமும் குறையாமல் போராடிக் கொண்டேயிருந்தார். காங்கிரஸின் கொள்கைகளையும் இடையிடையே பரப்பி வந்தார். குறிப்பாக, கதராடை பிரசாரத்தில் அவருடைய பணி சிறப்பானது. சுதந்திரப் போராட்டங்களில் பல நூதனமான வழிகளில் தன் போராட்டத்தை நடத்தினார். பேச்சாளர்கள் வாயைத் திறந்து பேசக்கூடாது என்று வெள்ளையர்கள் அறிவித்த போது, ராமாமிர்தம் தான் பேச நினைத்தவற்றை ஒரு கரும்பலகையில் எழுதி வைத்தது ஒரு உதாரணம். அரசியல்வாதிகளில் மேடைப் பேச்சில் கொடி கட்டிப் பறந்த முதல் பெண்மணி என்று இவரைத் தாராளமாகச் சொல்லலாம். எதிராகவும் தீரத்துடன் போராடினார், ராமாமிர்தம் அம்மையார்.



தாசித் தொழில்தான் செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்ட ராமாமிர்தம், அதை மறுத்து ஒரு இசைக் கலைஞரைத் திருமணம் செய்து வாழ நினைப்பதா என்று கொதித்தவர்கள், ராமாமிர்தம் _ சுயம்புப் பிள்ளையின் திருமண வாழ்க்கையைக் குலைக்கச் சதி செய்தனர். ஒரு இளம் பெண்ணை ராமாமிர்தம் கொலை செய்துவிட்டதாகச் சொல்லி ராமாமிர்தத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது. ராமாமிர்தம் கலங்கிடவில்லை. கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட அதே பெண்ணை, உயிருடன் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். யார் யாரெல்லாம் அந்தப் பெண்ணை மறைத்து வைத்துக் கொடுமைப் படுத்தினர் என்பதை அம்பலப்படுத்தி, அவர்களுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்.
---------
நன்றி:- குமுதம் டாட் காம்

Saturday, December 22, 2007

வரலாறு-1 பாடம் ஆரம்பம் "Madam Bhikaji Cama"


அன்பு குட்டீஸ் இன்று நாம் Madam Bhikaji Cama பற்றி தெரிஞ்சிக்க போறோம்.

"This flag is of Indian Independence! Behold, it is born! It has been made sacred by the blood of young Indians who sacrificed their lives. I call upon you, gentlemen to rise and salute this flag of Indian Independence. In the name of this flag, I appeal to lovers of freedom all over the world to support this flag." -- B. Cama , Stuttgart, Germany, 1907"

அவங்க என்ன பண்ணாங்கன்னு தெரியுமா.

"She is the one who first unfurled India's flag at an international assembly. She turned away from a life of luxury and lived an exile - to serve her country. And the mighty British Government grew afraid of her."
"A fearless woman, she brought in awareness of Indian struggle for independence in Europe and America and was instrumental in helping several revolutionaries, with finances and publishing."
"The tricolor flag contained green, saffron and red stripes. In the green stripe at the top there were eight blooming lotuses. India was then divided into eight provinces and the flowers represented these provinces. The words 'Vande Mataram' in Devanagari script across the central saffron strip of the flag were a salutation to Mother India. In the red stripe at thebottom there was a half-moon on the right and the rising sun on the left. Red represents strength, saffron represents victory; and boldness and enthusiasm are represented by green."
Where is the Flag Now?
The flag was smuggled into India by Indulal Yagnik, the socialist leader of Gujarat. It is now on public display at the Maratha and Kesari Library in Pune.
இன்னும் தெரிஞ்சிக்க http://www.kamat.com/kalranga/itihas/cama.htm