Monday, February 25, 2008

291 ஆத்திச்சூடி - புரியல விளக்கவும்

கொஞ்சம் விளக்கம் குடுங்க புரியல. அன்டர்லைன் பண்ணிருக்க வரிகளை பாருங்க அதற்கு குட்டிஸ் கிட்ட சிம்பிளா எப்படி சொல்லி புரியவைக்கரது.
அறம் செய விரும்பு
நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.
ஆறுவது சினம்
கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
இயல்வது கரவேல்
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஓளிக்காது கொடு.
ஈவது விலக்கேல்
ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
உடையது விளம்பேல்
உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
ஊக்கமது கைவிடேல்
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
எண் எழுத்து இகழேல்
கணித, இலக்கண நூல்களைத் தவிற்காமல் நன்கு கற்க வேண்டும்.
ஏற்பது இகழ்ச்சி
இரந்து வாழ்வது இழிவானது.அதனால் யாசிக்கக் கூடாது.
ஐயம் இட்டு உண்
யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.
ஒப்புரவு ஒழுகு
உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடுபொருந்துமாறு நடந்துகொள்.
ஓதுவது ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
ஔவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
அஃகஞ் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே,

3 comments:

said...

ஏம்ப்பா குட்டிகளா.... இதுலே என்ன ஐயம் இருக்கு?

ஏற்பது இகழ்ச்சி: அதாவது நாம் யாசிச்சு எதையும் வாங்கக்கூடாது. இது நமக்குச் சொன்னது.
உலகத்துலே எல்லாரும் ஒன்னுபோல இருப்பாங்களா?

கஷ்டகாலம் வந்துருச்சுப்பா. வேற வழியே இல்லாம கையேந்தி வர்றான் ஒருத்தன். அப்ப்படி ஒருவன் வந்து கேட்டால் ஐயம் இட்டு உண். அவனுக்கு உங்கிட்டே இருக்கும் உணவில் கொஞ்சம் கொடுத்துட்டு தின்னு.


இப்பப் புரியுதா?

ரெண்டும் நமக்குன்னு சொன்னாலும் முதல் வாக்கியம் நமக்கே நமக்கு. ரெண்டாவது சொன்னது

ஐய்யோ பாவம்னு ஒருத்தனுக்கு இரக்கப்பட்டுக் கொடுன்னு.

said...

ம்ம்ம் அங்க தானே பிராப்ளம்...ஏற்பது இகழ்ச்சி இதுல எது எல்லாம் வருது... பணம் / பொருள் பிச்சை கேட்டா தப்பு ஆனா மத்தது எல்லாம்...

அடுத்த கேள்வி , கஷ்டகாலம் வந்துருச்சுப்பா. வேற வழியே இல்ல இப்ப என்ன பண்ணரது...நீங்க ரெண்டாவதா சொன்னதுல ... கொஞ்சம் அந்த பக்கமா இருந்து பாருங்க அப்ப என்ன பண்ணரது.

said...

இருப்பதிலே எளிதான நீதி போதனைகள் அவ்வையின் ஆத்திச்சூடி தான், புரிவதில் பிரச்சினை இருக்காது, ஆனாலும் இன்னும் எளிதா வேண்டும் என்று நினைக்கிறிங்க போல தெரியுது(குட்டிஸ் எல்லாம் வாழைப்பழ சோம்பேறிங்களோ)
என்னால் முடிஞ்ச அளவு சிக்கலாக்கி விடுறேன் :-))

அறம் செய விரும்பு!

விருப்பப்பட்டு தருமம் செய்ய வேண்டும்.நண்பனுக்கு சாக்லேட் தரும் போது மனம் விரும்பி அவனுக்கு தறனும், அதை விட்டு ச்சே இவனுக்கு தண்டத்துக்கு சாக்லேட் தரோமேனு நினைக்ககூடாது.
-----------------------------
ஆறுவது சினம்.

கோபம் மாறிவிடும், ஒரு நாள் நண்பன் கூட சண்டை போட்டு டூ விட்டுக்கிட்டாலும் அடுத்த நாள் போய் பழம் விட்டு பேசிடனும்.
-------------------------------
இயல்வது கரவேல்.

அப்பா ரெண்டு சாக்லேட் தறார், அதில ஒன்றை மறைச்சு வச்சுக்கிட்டு ஒன்னு தான் இருக்குனு சொல்லாம நண்பனுக்கு என் கிட்டே ரெண்டு சாக்லேட் இருக்கு ஒன்று நீ சாப்பிடு என்று கொடுக்கலாம்.
--------------------------------
ஈவது விலக்கேல்.

உனக்கும் உன் வகுப்பில் இருக்கும் மாணவனுக்கும் சின்ன மன வருத்தம், அப்படி இருக்கும் போது அவனுக்கு உன் நண்பன் சாக்லேட் தரும் போது அவனுக்கு தராதேனு நண்பனை தடுக்க கூடாது.
--------------------------------
உடையது விளம்பேல்.

எங்க அப்பா பெரிய கார் வாங்கி இருக்கார், எங்க வீட்டில பெரிய பிளாஸ்மா டீ.வி இருக்குனுலாம் பள்ளிக்கூடத்தில போய் பெருமை பேசக்கூடாது.
--------------------------

ஊக்கமது கை விடேல்

ஒரு சப்ஜெக்ட்ல கம்மியா மார்க் வாங்கிட்டால் , அயோ அந்த சப்ஜெட்க் ல நான் வீக் அதான் மார்க் வாங்கலைனு சாக்கு சொல்லாமல் அதிகம் அந்த சப்ஜெட்டுக்கு டைம் ஒதுக்கி நல்லாப்படிச்சு மார்க் வாங்கிக்காட்டணும்.
---------------------------------------
எண், எழுத்து இகழேல்.

படிச்சு என்னப்பண்ணபோறோம், காமராஜர் படிக்காமலே பெரிய ஆள் ஆகலையானு இடக்கா பேசமாம சமர்த்தா எல்லாப்பாடமும் படிக்கணும்.
--------------------------
ஏற்பது இகழ்ச்சி.

அறிமுகம் இல்லாதவங்க கொடுத்தா எதையும் வாங்கிட கூடாது. அறிமுகம் இருப்பவர்கள் கொடுத்தாலும் அப்பா, அம்மாக்கேட்டே கேட்கணும்.
------------------------------------
ஐயம் இட்டு உண்.

பசியோட யாராவது இருந்தா முதலில் அவர்களுக்கு சாப்பிடக்கொடுத்துவிட்டு பிறகு நாம் உண்ண வேண்டும்.
----------------------------------
ஒப்புரவு ஒழுகு.

ஒரு இடத்தில் எல்லாம் எப்படி நடந்துக்கிறாங்களோ அதுக்கு ஏற்ப நடக்கணும் , பிரேயர் ஹாலில் கிசு கிசு என்று பேசுவதுலாம் கூடாது , மற்றவங்க அமைதியா இருப்பது போல நாமும் அமைதியா இருக்கணும்.
-----------------------------
ஓதுவது ஒழியேல்.

பரிட்சை வந்தா மட்டும் புத்தகத்தை தூக்கி வச்சு படிக்க கூடாது தினமும் கொஞ்ச நேரம் படிக்கணும்.தினசரி படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளணும்.
--------------------------------
ஒளவியம் பேசேல்.

நண்பன் அதிகம் மதிப்பெண் வாங்கினால் நீ எப்படி இவ்வளவு மார்க் வாங்கினனு போறாமை கொண்டு பேசாமல் பாராட்டி பேசணும்.
-----------------------------
அஃகஞ் சுருக்கேல்.

ரேஷன் கடைல எல்லாம் எடையக்குறைச்சி பொருட்களை விக்கிறாங்க இல்லை அதைப்போல நாம் செய்யக்கூடாது.ரெண்டு வாழைப்பழம் அப்பா வாங்கிட்டு வர சொன்னா ஒன்ன திண்ணுட்டு , ஒண்ணு தான் கடைல கொடுத்தான் சொல்லக்கூடாது :-))