Friday, November 30, 2007
நாங்களும் வந்துட்டோமுல்ல!!
நான் தாங்க இளமதி....
வீட்டுல எல்லோரும் மதிக்குட்டி ன்னு கூப்பிடுவாங்க.. நீங்களும் அப்படியே கூப்பிடலாம்....
என் வயசு 6மாதம்....
அப்பாவும், சித்தப்பாவும் சிங்கப்பூர்ல வேலை செய்யுறாங்க.
அதனால அப்பா, அம்மா, சித்தப்பா, நான் எல்லாரும் சிங்கப்பூர்ல இருக்கோம்.
நான் பதிவு எழுத இன்னும் சில வருடங்கள் ஆகும்... அதுவரைக்கும் என் சார்புல என் சித்தப்பா எழுதுவார்......
ஹாய்! ஹாய்! ஹாய்!
ஆல் த அங்கிள்ஸ், ஆன்டீஸ் மற்றும் அன்பு குட்டீஸ்,
எல்லோருக்கும் வணக்கம்.
நான் ஆஷிஷ் நான் 6 ஆம் வகுப்பு படிக்கிறேன். டான்ஸ், பாட்டு, வரைதல், கராத்தே ஆகியவை என் பொழுது போக்கு. எனக்கு கார்கள் மற்றும் பைக்குகள் ரொம்ப இஷ்டம். இப்போ என் தங்கச்சி பத்தி சொல்றேன்.
என் தங்கை பேரு அம்ருதா. அம்ருதா 3 ஆம் வகுப்பு படிக்கிறாங்க. பாட்டு, கராத்தே, புத்தகம் படித்தல் அம்ருதாவின் பொழுதுபோக்கு. பார்பி பொம்மைகள் ரொம்ப இஷ்டம்.
நாங்க இந்தியர்கள். அப்பாவோட வேலை காரணமாக இங்கே ஸ்ரீலங்காவில் 5 வருஷமா இருக்கோம்.
டாம் & ஜெர்ரி மாதிரி சில நேரம் அடிச்சுப்போம், சில நேரம் கொஞ்சிப்போம். அதனாலதான் விட்டுல அந்த பேரு. we love each other.
Thursday, November 29, 2007
வாங்க விளையாடலாம்..
சரி, ஏதாவது சொல்லி தப்பிச்சிடலாம்ன்னு "இம்சை சார், கூட்டி கழிச்சு பாருங்க.. கணக்கு சூப்பரா வரும்"ன்னு ஒரு பிட்டை போட்டேன்.. அனானி அங்கிள் வந்து "வரலையே"ன்னு சொல்லி மாட்டி விட்டுட்டார்ர்ர்.... :-(
அப்படியே இம்சை சாருக்கு டிமிக்கி குடுத்துட்டு காடு மலை ஓடி ஒரு ப்லேக்ரவுண்டுக்கு போய் சேர்ந்தேன்.. என்னமா அழகா இருக்கு.. சுத்தி பார்க்கிற ஏலா இடத்துலேயும் விளையாட்டுதான்..
யாம் பெற்ற இன்பம் மற்ற குட்டிஸ்களும் பெறட்டுமேனு இங்கே வந்து நோட்டிஸ் கொடுக்கிறேன்:
பவன் தம்பி, யாரும் இல்லாத ஸ்கூல்ல நீ மட்டும் அங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கே? ஓடியாடா ராசா.. :-) அக்கா அங்கே வெயிட்டிங். :-)))
Wednesday, November 28, 2007
TEACH - 1 இந்திய பங்கு சந்தை அடிப்படை தகவல்கள் (BASICS)
பெயர் : S.சிவராமன்
வயது : 29 (15-05-1977) {இப்பதான் பொண்ணூ பாத்துகிட்டிருக்காங்க }
படிப்பு : DECE; B.COM
தொழில் : நெட்வர்க் இன்சினியர் தி இந்து
பிறந்து வளந்தது தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை என்ற கிராமம். டிப்ளமோ படித்தது சேலம். வேலை பாத்தது சென்னை, ஈரோடு, இப்ப மங்களூர்.
இவருக்கு மிகவும் பிடித்தது பங்கு வணிகம்
இதொ வலைப்பதிவுகள் படிக்காத நிறையா மாணவர்களுக்காக TEACH - 1 Basics of Indian Share Market.
001_TEACH_Basics_o... |
Hosted by eSnips |
We welcome your ideas, suggestions & feedback to add, modify, delete to improve this presentation before presenting it to the students.
Kindly send mail to MGLRSSR@GMAIL.COM and babypavan@gmail.com
இவருடைய ஹாபிஸ்
ரீடிங் - இதுதான் படிக்கிறதுன்னு வகை தொகை இல்லாம படிக்கிற ஆளுங்க நான் பெரும்பாலும் இணையத்தில் ரெகுலரா படிக்கிற புத்தகம் - Wealth Insight , தினசரி - பிசினஸ் லைன்
ட்ராவலிங் - குறிப்பிட்டு சொல்லும்படி எல்லாம் எதுவும் இல்லை நாலு பசங்க சேந்துட்டா பைக் எடுத்துகிட்டு 'லாங்' கிளம்பிடுவோம்
டான்ஸ் - இது ஒரு உடற்பயிற்சி மாதிரி கன்னா பின்னான்னு டிஸ்கோல ஆடுவாங்களே அப்பிடித்தான்.
உங்கள் உதவி தேவை
இங்கு சென்று பார்த்துவிட்டு வரவும்.உங்களின் எழுத்து,உங்களின் அறிவு உங்களோட பெயரால் நல்ல விஷயத்துக்கு யூஸாகறதுல உங்களுக்கு கண்டிப்பா சந்தோஷம் இருக்கும். அதற்காக உங்க பொன்னான நேரத்த கொஞ்சம் இதுக்கு ஒதுக்குனீங்கன்னா வலைப்பதிவுகள் படிக்காத நிறையா மாணவர்களுக்கு அதையெல்லாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
என்றும் அன்புடன் - குட்டீஸ்
Tuesday, November 27, 2007
அப்பாவுக்கு தப்பாம பொறந்திருக்காங்க.
அதாவது
"நூல போல சேல..தாய போல புள்ள".
எனக்கு தெரிஞ்சி நெறய புள்ளைங்க தாய போல இருக்கிறதில்ல.அப்பா மாதிரி தான் இருக்காங்க. அப்புறம் எதுக்கு இந்த பலமொழி வந்ததுனு பிரிட்டனை சேர்ந்த சில மருத்துவ நிபுணர்கள் கிட்ட பேசிட்டிருக்கும் போது கேட்டிருந்தேன். அவங்களும் மெனக் கெட்டு ஆராய்ச்சி பண்ணி நான் சொன்னது சரி தான்னு நிருபிச்சிருக்காங்க. அப்பா சமத்தா இருந்தா குழந்தயும் சமத்தா இருக்கும். அப்பா ஓவர் அழிச்சாட்டியம் பண்ணா குழந்தயும் அப்படியே தான் செம அராஜக பார்ட்டியா இருக்குமாம். எனக்கு தெரிஞ்ச நெறய உதாரணக் குழந்தைகள் இருக்காங்க. அவங்க எல்லாரயும் உங்களுக்கு தெரியாது என்பதால் உங்களுக்கு தெரிந்த சில உதாரண குழந்தைகளை இங்கு அறிமுகப் படுத்த விரும்புகிறேன்.
1. நம்ம நிலா - செம அராத்து.
அவங்க அம்மா படு சமத்து. அநியாயத்துக்கு அப்பிராணி. சத்தம் போட்டு பேசக் கூட மாட்டாங்க. ஆனா அவங்க அப்பா பாருங்க. அவர பத்தி நான் எதும் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
2. நம்ம அம்முவாகிய நிஷாலினி - பயம் கிலோ என்ன விலைனு கேக்கர ஆளு.
அவங்க அம்மா ரொம்ப பயந்த சுபாவம். அவங்க அப்ப எப்போவாச்சும் வெளியூர் போனா, அம்முவோட அம்மா அம்முவோட தாத்தா வீட்டுக்கு போய்டுவாங்க. வீட்ல தனியா இருக்க பயம். ஆனா நம்ம அம்மு பாருங்க பல்லி கால ஒடைக்கிறதுல ஆரம்பிச்சி கரப்பான் பூச்சிய பயமுறுத்தறது வரைக்கும் கொஞ்சமும் பயமில்லாம செய்வா. அவங்க அப்பா இருக்காரே. நடுக் கடல்ல தனியா குதிச்சி மீன் முள்ளால நெஞ்சில வீரத் தழும்போட உலா வர்ரார்.
3.நம்ம அண்ணாச்சி பவன் - வருங்கால மாவீரன்..
எதயும் புடிக்காம சைக்கிள் மேல ஏறி தனியா நிக்கறான். எதுனா மனசுல கொஞ்சமாச்சும் பயம் தெரியுதா பாருங்க. அவங்க அப்பா பன்ற இம்சைக்கு கொஞ்சமும் சளைக்காதவன்.
4. நம்ம அப்பு @ அப்ரா - சமத்து பைய்யன்.( என்ன மாதிரியே )
அவன் இருக்கிற இடம் தெரியுதா பாருங்க. தான் உண்டு தன் வேலையுண்டு. அவ்ளோ அப்பாவியா சமத்தா இருக்கான். நிச்சயம் அவங்க அப்பா மாதிரி தான் அவன் இருக்கனும். ஏன்னா அவங்க அம்மாவுக்கும் சமத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் சொல்லுங்க?:P
இப்போ சொல்லுங்க.தாயைப் போல பிள்ளையா இல்ல அப்பாவுக்கு தப்பாம பொறக்குறாங்களா சாரி வளர்கிறார்களா?
பாப்பா பாட்டு - மகாகவி பாரதியார்
ஓடி விளையாடு பாப்பா -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா -ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
சின்னஞ் சிறுகுருவி போலே -நீ
திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு -நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா
கொத்தித் திரியுமந்தக் கோழி -அதைக்
கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடுமந்தக் காக்காய் -அதற்க்
கிரக்க படவேணும் பாப்பா
பாலைப் பொழிந்துதரும், பாப்பா -அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்துவரும் நாய்தான் -அது
மனிதருக்குத் தோழனடி பாப்பா
வண்டி இழுக்கும்நல்ல குதிரை -நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு
அண்டிப் பிழைக்கும்நம்மை ஆடு -இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு -பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு -என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா
பொய்சொல்லக் கூடாது பாப்பா -என்றும்
புறஞ் சொல்லலாகாது பாப்பா
தெய்வம் நமக்குத்துணை பாப்பா -ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா
பாதகஞ் செய்பவரைக் கண்டால் -நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா -அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
துன்பம் நெருங்கிவந்த போதும் -நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்ததெய்வ முண்டு -துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா -தாய்
சொன்ன சொல்லைத்தட்டாதே பாப்பா
தேம்பி யழுங்குழந்தை நொண்டி -நீ
திடங்கொண்டு போராடு பாப்பா
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற -எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா -நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா
சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே -அதை
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஇந் துத்தானம் -அதை
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
வடக்கில் இமயமலை பாப்பா -தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரியகடல் கண்டாய் -இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா
வேத முடையதிந்த நாடு -நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில் லாதஇந் துத்தானம் -இதை
தெய்வமென்று கும்பிடடி பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பர் -குலத்
தாழ்ச்சி உயற்ச்சிசொல்லல் பாவம்
நீதி, உயர்ந்தமதி, கல்வி -அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
உயிர்களிடத்தில் அன்பு வேணும் -தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடையநெஞ்சு வேணும் -இது
வாழும் முறைமையடி பாப்பா
Monday, November 26, 2007
குட்டீஸ்க்கு படம் காட்டறேன்.
உங்களுக்கு குட்டியா ஒரு படம் காட்ட போறேன். நம்ம தலைவருங்க எல்லாம் விமானத்துல இருந்து இறங்கி வறத டீவில பாத்திருப்பிங்க. ஏர்போர்ட்ல ஓடுதளம்(Runway) பகுதியில தனியா விமானம் நின்னுட்டிருக்கும். அதுல இருந்து நம்ம தலைவருங்க இறங்கி வருவாங்க. அது VIP க்கு மட்டும் தான். நம்மள மாதிரி சதாரண( இப்போதைக்கு) ஆளுங்கள எல்லாம் ஒரு கூண்டு வழியா நேரா விமானத்துக்கு உள்ளயே அனுப்பிடறாங்க. இப்போ அந்த கூண்டும் :) விமானமும் எப்படி இணையுதுனு பாக்கலாம். Bangkok விமான நிலையத்துல எங்கள கூட்டிட்டு :P போக வந்த இண்டியன் விமானத்த உங்களுக்காக படம் புடிச்சி வந்திருக்கேன். விமானத்துல பயணம் போகாத அல்லது போயும் இத பாக்காத பெரியவங்களுக்கும் இது தெரிஞ்சிக்க உதாவும். :)
ஓகே.. ஸ்டார்ட் மீஜிக்..
Sunday, November 25, 2007
.:: மை ஃபிரண்ட் ::. அக்கா ஸ்கூல் போலாம் வாங்க
உங்களுக்காக இம்சை கிட்ட ரெக்கமண்ட் பண்ணி அவரோட ஸ்கூல்ல ஒரு பிரீ சிட் வாங்கி வெச்சிருக்கேன் சீக்கிரம் வந்து ஜாயின் பண்ணிக்கோங்க.
என் ஸ்கூல் எப்படி இருக்கு....
நம்புங்க இது ஒரு கார்ப்பரேசன் ஸ்கூல்....பெஸ்ட் மீடில் ஸ்கூல் ஆப் மஹாராஸ்ட்ரா...லவுக்கீ ஸ்கூல் (80KM from Pune)...இம்சைஸ் பேவரைட் ஸ்கூல்.
வாங்க வரையலாம்
6- இப்போ அழகா கண்ணையும், மூக்கையும், வாயையும் வரைங்க பார்க்கலாம்.
7- இப்போதான் ஆட்டம் கலைக்கட்ட போகுது. உங்க இஷ்டத்துக்கு புள்ளி வச்சு கோலம் போடுங்க.. ஒட்டகச்சிவிங்கிக்கு நிறைய மார்க்ஸ் இருக்கும்ல..
8- இப்போ கலர் அடிக்கிற போட்டி.. பென்சில் கலர், க்ரயோன்ன்னு என்ன இருக்கோ ஆதை உபயோகிச்சு கலர் அடிங்க. இது எப்படி இருக்கு?
Saturday, November 24, 2007
பூனைக் குட்டி…
எங்கும் ஓடும் பூனை
முறுக்குத் தின்னும் பூனை
மூலையில் அமரும் பூனை
மீதி இங்க போய் படிச்சிகோங்க. http://pookri.com/?p=104
Friday, November 23, 2007
Thursday, November 22, 2007
10 வயது குட்டீஸ் சாதனை
10-yr-old makes Satara proud
Satara: Citizens of Satara will be proud while welcoming a new postal stamp, which would be based on a painting by Swarali Vishwanath Bhakare, a 10-year-old student here.
The department of posts commemorates Children’s Day every year by bringing out stamps designed by children. The designs are selected by holding an all India competition. For this year’s stamp the competition was conducted on November 14, 2006on the theme ‘The magic of the night’.
Swarali Bhakare, daughter of constable Vishwanath, won the first prize in Group I and B. Karthick of Pudukottai in Tamil Nadu won the first prize in Group II.
The postal department will release about eight lakh stamps of these designs from December 1. The stamps will be priced at Rs 5.
Swarali was studying in the fourth standard of Annasaheb Raje Bhosale primary school when she participated in the competition. Swarali told TOI that she wanted to pursue a career in painting and loves swimming and dancing. She had bagged a state-level gold medal in a painting competition and has won several local contests.
“She is a bright student. I have a dream to enrol her in the J.J. School of Arts,” her father, himself an arts graduate, told TOI.
Swarali is studying in Std V at the Anant English School and taking her drawing lessons at Kala Niketan under the guidance of Shekhar Hasbnis.
“Her uncle Kailas Bhakare is also a good painter, who helps Swarali in paintings. At home her mother Sangita, also an art graduate, helps her and her brother Partha who is in Std II, with their studies,” Vishwanath said.
The police and postal departments and many local mandals have felicitated the emerging artist.
Swarali Bhakare’s painting will be depicted on a Rs 5 postal stamp to be issued on December 1
Wednesday, November 21, 2007
நாங்களும் சொல்லுவோம்ல பன்னிரெண்டாம் வாய்ப்பாடு..
வந்ததே லேட்டு. இதுல ஹை ஒரு கேடான்னு கேட்கப்படாது ஆமா.. மை ஃபிரண்ட் குழந்தை கணக்கு படிக்க போயிருந்தா.. இதோ இப்போதான் ஓடோடி வந்திருக்கா குட்டீஸ் கார்னருக்கு..
பவன், நிலா, அப்ரா, இன்னைக்கு டீச்சர் என்ன சொல்லிக்கொடுத்தாங்கன்னு சொல்லித்தாரேன் கேட்குறீங்களா?
அண்ணா, அக்கா, ஆண்டிஸ் & அங்கிள்ஸ்.. நீங்களும் கேட்கலாம். பிடிச்சிருந்தா உங்க வீட்டுல குட்டீஸ்களுக்கு சொல்லி தரலாம்.
நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். வாய்ப்பாடு மனப்பாடம் பண்ணாததுனால அண்ணாஸ் & அக்காஸ் ஸ்கூல்ல அடி வாங்குறாங்க.. இதோ.. இந்த டெக்னிக் ஃபால்லோ பண்ணி பாருங்க.. பன்னிரெண்டாம் வாய்ப்பாடு மனப்பாடம் பண்ணாமலேயே நீங்க சூப்பரா சொல்வீங்க..
முதல்ல ஒன்னுல இருந்து ஒன்பது வரை எழுதிக்கோங்க. அடுத்த லைன்ல ரெண்டுல இருந்து 18 வரை ரெண்டு ரெண்டா கூட்டி எழுதிக்கோங்க.
1 /2 = 12
2 /4 = 24
3 /6 = 36
4 /8 = 48
5 /10 = 60 (5 + 1 =6)
6 /12 = 72 (6 + 1 =7)
7 /14 = 84 (7 + 1 = 8)
8 /16 = 96 (8 + 1 = 9)
9 /18 = 108 (9 + 1 = 10)
அட.. ரொம்ப சுலபமா இருக்குல்ல. இனி பன்னிரெண்டாம் வாய்ப்பாடு யார் கேட்டாலும் சுலபமா சொல்லிடுவோம் குட்டிஸ்ங்க நாங்க. :))
Tuesday, November 20, 2007
ருபினா வளர்த்த அம்மாவுக்கா இல்ல பெற்ற அம்மாக்கா உங்க கருத்து என்ன?
உங்க ஓட்டு பெற்ற அம்மா என்றால், எதனால் என்று பின்னூட்டம் இடுங்கள்.
Aurangabad: Two women here are locked in a custody battle over four-year-old Rubina causing the police and local residents much consternation.
The child was given to Sangeeta Shinde, a resident of Nagsennagar slum shortly after she was born because Vijubai Jagdhane, the biological mother, was too upset after the birth to care for her. However, Sangeeta too found it difficult to bring up the baby and approached Rashidabi Shah, who has three sons and three daughters.
Rashidabi, who was working as a housemaid, took the child and named her Rubina. At the age of four, Rubina was admitted to a nursery school in Shahnoorwadi.
Meanwhile, Vijubai, who lives in Paithan after having married again, came to regret her decision to give up her child and decided she wanted her daughter back. She searched for Sangeeta who had moved to another slum. A few days ago, she managed to contact Sangeeta, who directed her to Rashidabi. However, Rashidabi refused to let go of Rubina.
“Ask her (Rubina) whom she wants to live with?” an angry Rashidabi told head constable Shivaji Jine, who is handling the case. “Why did Vijubai abandon her in the first place? I must have my Rubina back.”
Monday, November 19, 2007
வலையுலகில் முதல் முறையாக...குட்டீஸ் கொசுவத்தி
கொஞ்சம் டிபரண்டா வீடியொ கொசுவத்தி. இது நான் குடி இருந்த முதல் வீடு. பொறுமையாக பார்த்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.
please wait until the video loads.
>
வலையுலகில் முதல் முறையாக எப்படி என்னோட flashback.
I still have lot of flashback to share but will do if my mother permits. She still don't know about my new kutties corner blog.
குட்டீஸ்காக குட்டீஸ் வாசித்த வயலின்
நீங்க கூட உங்க ஊர் govt ஹாஸ்ப்பிடல் pediatric ward குட்டீஸ் சந்தோசமா இருக்க எதாவது செய்யலாமெ.
இதையும் கொஞ்சம் பாருங்கஅன்புடன் உங்களை அறிவு கடன் தர அழைக்கிறொம்... TEACH - To Educate A CHild
Saturday, November 17, 2007
குசும்பு மாப்புக்கு வெச்சிட்டாங்கய்யா ஆப்பு...
பெயர் காரணம் : பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை அவர் எதிர் பார்த்த மாதிரி அமையாத்தால் உள்ளுக்குள் இருக்கும் சோகத்தை மறைக்க பிற பதிவர்களையும் பதிவுகளையும் கலாய்த்து சம்பந்த்தப் பட்டவர்களே அந்த கலாய்ப்புக்கு சிரித்து( சின்னாப்பின்னமாகி) பின்னூட்டம் போடும் அளவுக்கு குசும்பு பண்ணுவதால்.
அடிக்கடி வரும் கனவு : யாரையாவது கலாய்க்கிற மாதிரி
சமீபத்திய சாதனை : விற்பனையில் சக்கை போடு:( போட்ட மேக்கப் செய்வது எப்படி என்ற ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியது.
நீண்டகால வேதனை : ஒரு கேர்ள் ப்ரண்டும் கிடைக்காதது.
தொழில் : யாரயாவது கலாய்த்துக் கொண்டிருப்பது, எதிர் கவுஜ எழுதுவது.
உபதொழில் : எப்போதாவது உருப்படியான பதிவு போடுவது.
முடியாதது : அலுவலகத்தில் வேலை பார்ப்பது.
முடிந்தது : வேலைத் தவிர வேறெல்லாம் பார்ப்பது.
அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் : எனக்கொரு கேர்ள் ப்ரண்ட் வேணுமடா.
நொந்து போயி புலம்பும் பாடல்; எனக்கொரு கேரளா ப்ரண்ட் வேண்டாமடா
ஆப்பு : தலைப்பை பாத்துட்டு குட்டீஸ் தான் ஆப்பு வைக்க போறோம்னு நெனச்சிங்களா? அதான் இல்ல.. அவர் குசும்பு தாங்காம அவங்க அப்பா அம்மாவே அவருக்கு ஸ்பெஷல் ஆப்பு ரெடி பண்ணிட்டாங்க..அதாங்க.. குசும்பன் மாமாக்கு விரைவில் கல்யாணம் ஆகப் போகுது.( இத விட பெரிய ஆப்பு எங்களால வைக்க முடியாது :P )
ஆப்புத் துறை, குட்டீஸ் கார்னர்.
இதையும் கொஞ்சம் பாருங்கஅன்புடன் உங்களை அறிவு கடன் தர அழைக்கிறொம்... TEACH - To Educate A CHild
Friday, November 16, 2007
அன்புடன் உங்களை அறிவு கடன் தர அழைக்கிறொம்... TEACH - To Educate A CHild
நாங்க இங்க வந்த டேல இருந்து உங்க அனைவரது பதிவுகளையும் படித்தோம். அப்ப தான் எங்களுக்கு தெரிந்தது இங்க நிறைய டொக்டர், மெக்கானிக்கல் , கட்டுமானதுறை , சிவில், எலக்ட்டிரிக்கல், கம்பியூட்டர், எலக்ரானிக், ஆட்டோமொபைல், கெமிக்கல், பாங்கிங், பங்கு துறை, வக்கீல், மீடியா, என்வைரான்மென்டலிஸ்ட், சினிமா, போட்டாகிராபி, கதை, கவிதை என பல பல துறைகளை சார்ந்தவங்கன்னு.
நீங்க அனைவரும் உங்கள் பதிவுகளிள் உங்கள் துறை சார்ந்த, அல்லது உங்கள் Area of interest படி பல பல பயனுள்ள பதிவுகள் போட்டுட்டு வரிங்க.
இப்போ நாங்க புதிசா வந்ததுனால உங்கள் நிறைய பயனுள்ள பதிவுகளை தேடி தேடி படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால நீங்கள் publish பண்ற அனைத்து useful/informative posts எல்லாம் சேர்த்து ஒரு database create
பண்ணலாம்னு இருக்கோம்.
அதற்கு நாங்கள் உங்கள் அறிவை எங்களுக்கு கடன் தருமாறு கேட்டு கொள்கிறொம். என்னடா கடன்னு சொல்றேன்னு பாக்கறிங்களா, நாங்க பெரிய பசங்க ஆனப்பறம் திரும்ப வேற யாருக்காவது எங்க அறிவை கடன் தருவோம்.
அப்புறம் இம்சை சொல்றாரு இதல்லாம் PPT or Audio or Video presentation செய்து தந்தா அவரோட 400 school/college students + his friends 3000 school/college students கும் பயன் படுத்தி workshop, softskills session நடத்த பயன் படுத்துவேன்னு சொல்றாரு.
நீங்க பிசியா இருப்பீங்கன்னு தெரியும்.உங்களின் எழுத்து,உங்களின் அறிவு உங்களோட பெயரால் நல்ல விஷயத்துக்கு யூஸாகறதுல உங்களுக்கு கண்டிப்பா சந்தோஷம் இருக்கும். அதற்காக உங்க பொன்னான நேரத்த கொஞ்சம் இதுக்கு ஒதுக்குனீங்கன்னா வலைப்பதிவுகள் படிக்காத நிறையா மாணவர்களுக்கு அதையெல்லாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்
நீங்களும் உங்க வீட்டு குட்டிஸ், அப்புறம் உங்க வீட்டு பக்கத்துல இருக்க school students கும் சொல்லிகுடுக்கலாம்.
நாங்கள் வாரம் ஒருவரை இங்க உங்களை உங்க presentation உடன் சேர்த்து அறிமுகம் செய்யலாம்னு இருக்கோம்.
அதற்காக முதலில் எங்க பதிவில் right barல குட்டீஸ் Recommendedல இருக்க
அத்தை, மாமா கிட்ட தான் 1ஸ்ட் ஹெல்ப் கெக்கலாம்னு இருக்கோம்.
நீங்களும் எங்களுக்கு உதவி பண்ணுங்க. நீங்கள் படித்த பயனுள்ள பதிவு (தமிழ், ஆங்கிலம்) லிங்க் குடுங்க. நீங்கள் எங்களுக்காக எதாவது useful/informative post போட்டிருந்தால் அதை PPT or Audio or Video presentation செய்து தாருங்கள் பிளிஸ்.
Please check the Introduction Template in the Left bar under TEACH - To Educate A CHild
Every Child has a DREAM & YOU have the POWER to fulfill it.
உங்கள் ஆதரவு வேண்டி...குட்டீஸ்
Thursday, November 15, 2007
வெள்ளி காலை எட்டு மணி - அபிஅப்பாவிற்கு பிறந்த நாள் பரிசு
உடனடியாக உங்களது செல்பேசியை எடுத்து அதில் வெள்ளி காலை 8.00 மணிக்கு அலாரமோ,ஞாபகமூட்டலோ ( Reminder) வையுங்கள். நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பரவாயில்லை. உங்களிடம் செல்பேசி இல்லையென்றால் நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
நம்மிடைய தனது அனுபவங்களை அனைவரும் புரிந்து கொள்ளும்படி சொல்லி வந்த அனுராதா ஆன்ட்டி சில தினங்களுக்கு முன் சிக்கலான கட்டத்தை அடைந்துள்ளதாக பதிவு வந்தது. அதைத் தொடர்ந்து நிலா அக்கா அனைவரும் இறைவனிடம் அனுராதா ஆன்ட்டிக்காக பிரார்த்திக்க வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை ஏற்று பலரும் பிரார்த்தவை செய்தனர். இதே போல இன்னும் பலரும் பிரார்த்தனை செய்திருந்தனர். இப்போது அனுராதா ஆன்ட்டி ஓரளவு தேறி வருவதாக பதிவில் தெரிவித்துள்ளனர். 18 ந்தேதி சென்னை திரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். பிரார்த்தனைக்கு என்றுமே கடவுள் செவி சாய்ப்பார்.
அனுராதா ஆன்ட்டியின் உடல்நிலை நல்ல முறையில் முன்னேற எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் வேண்டும் விதமாக அபிஅப்பா தனது பதிவில் வெள்ளி காலை 8:00 மணிக்கு உலகில் அனைவரும் பிரார்த்திக்க வேண்டுகோள் விடுத்திருந்தார். எனவே உங்கள் அலாரமோ, ஞாபகமூட்டலோ வந்தால் உடனடியாக இரண்டு நிமிடம் கடவுளிடம் அனுராதா ஆன்ட்டிக்காக வேண்டிக்கொள்ளுங்கள். அபிஅப்பாவிற்கான பிறந்த நாள் பரிசை வழங்குங்கள்.
நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் உங்களது கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். இது எங்கள் குட்டீஸ் கார்னரின் அனபான வேண்டுகோள்.
அமீரகத்தில் உள்ள மாமாக்கள் உங்கள் தூக்கத்தை கலைப்பதை இந்த குட்டீஸ்க்காக மன்னித்து பிரார்த்தனை செய்யவும்.
அன்பு குட்டீஸ்
நிலா
பவன்
அப்ரா
மாதினி
அம்மு
Wednesday, November 14, 2007
அம்மு (எ) நிஷாலினி ஒரு அறிமுகம்
இவள பத்தி முழுசா சொல்வதுக்கு பதிலா அம்முவோட லேட்டஸ்ட் திருவிளையாடல் ஒன்னு சொல்றேன்.
வீட்ல ஒரு பெரிய பல்லி ஒன்ன கையில புடிச்சுட்டா. அது அவளோட குட்டிக்கையவிட பெரிய பல்லி.
கீழ்வீடு,பக்கத்து வீடு, எதிர்வீடுன்னு எல்லாரும் எதோ பல்லி அம்முவ புடிச்சுகிட்ட மாதிரி கத்துன கத்துல மொத்த தெருவும் கூடிருச்சு, பல்லிய பாத்து எல்லோரும் பயந்து ஓடறதபாத்து குஷி வேற ஆகி எல்லாறயும் பல்லிய காட்டி மிரட்ட ஆரம்பிச்சுட்டா.
பயந்தவங்க பக்கதுல போயி பல்லிய மேல போடற மாதிரி காட்டறது, அவங்க விட்டா போதும்ன்னு ஓடறது.யாரு சொல்லியும் இவ பல்லிய விடல. கடைசில ஒரு பெரிய பூச்சிய புடிச்சு அவகிட்ட காட்டுனதும் அய்ய் பூச்சின்னு பல்லிய விட்டுட்டு பூச்சிய புடிச்சுகிட்டா. (குத்துயிரும் கொலையுயிருமான அந்த பல்லி இப்பவும் ஒரு கால் ஒடிஞ்சி போயி வீட்டுலதான் இருக்கு, அதுக்கு இப்போ பாப்பா பல்லின்னு பேரு. அத யாரும் விரட்றதில்ல.)
அப்புறம் பெரிய கட்டெரும்பா இருந்தா லாவகமா வேட்டையாடி அதை வாயில போட்டு சாப்பிடறதுல அலாதி பிரியம்.
நான் சொன்ன சாம்பிள்ஸ்ல இருந்து கொஞ்சம் இவள பத்தி புரிஞ்சிருக்கும். இவ என்ன மாதிரி இல்லை.இவ அதிரடி பார்ட்டி. நான் அவ்வளவு அதிரடி இல்லை. ஒரு குடும்பத்துல ரெண்டு பேர் வேற வேற மாதிரி இருந்தா தானே நல்லாயிருக்கும். யெஸ் அம்மு என் கஸின்.என்ன விட ரெண்டு மாசம் மூத்த அக்கா.(ரெண்டு மாசம் பெரியவன்னா அக்கான்னு சொல்லனுமா?) குட்டீஸ் மற்றும் சீனியர்ஸ் எனக்குக் கொடுத்த ஆதரவை அம்முவுக்கும் கொடுங்க
குட்டீஸ் தினம் - ஒரு அன்பான வேண்டுகோள்...மொக்கை அல்ல
எங்களை கனவு காண அனுமதியுங்கள், உங்கள் கனவுகளை எங்கள் மீது சுமத்தாதீர்கள் பிளிஸ்.
Please listen to this video of my big brother Sadhanand who gave a speech in front of Infosys head and 150 Kids from FoC.
அன்பு மாமா, அத்தை நம் அனைவருக்கும் சூப்பர் அம்மா,அப்பா,படிப்பு,சாப்பாடு அனைத்தும் கிடைத்தனால நாம இப்ப Internet/Chatனு மகிழ்ச்சியா இருக்கோம்.
இங்க போட்டோஸ்ல இருக்கற என்னோட பிரண்ட்ஸ்கு நமக்கு கிடைச்ச மாதிரி அம்மா,அப்பா கிடைக்கல. படிக்க வசதி இல்ல, Guide செய்ய உங்கள மாதிரி படிச்ச பிரண்ட்ஸ் இல்ல.
எங்களொட நாளான இன்னைக்கு நாங்க உங்க கிட்ட கேக்கறது என்னன்னா, பிளிஸ் உங்க வீட்டு பக்கத்தில இருக்க இவங்க மாதிரி குழந்தைகளுக்கு கொஞ்சம் டைம் ஷ்பெர் பண்ணி Guide/Mentoring பண்ணுங்க.
Only EDUCATION will change their life.
EVERY CHILD HAS A DREAM & YOU HAVE THE POWER TO FULFILL IT
இது நான் சொல்லல இம்சை சொன்னது...
Tuesday, November 13, 2007
தமிழ் மண நிர்வாகத்திற்கு நாங்கள் எழுதாத மடல் இல்ல...கடிதம்...இல்ல...Letteru
இன்னும் எழுதவே ஆரம்பிக்கல கண்டீப்பாக எழுதும் போது மீண்டும் அறிவிக்கறொம்...அப்ப வந்து படிச்சிக்கோங்க....
இது நாங்களா எழுதல, ஒரு அக்கா எழுத சொன்னாங்க...
நிலா அம்மாக்கு ஹேப்பி பர்த்டே!
நாங்களும் வாழ்த்துவோம்ல....நட்ராஜ் அப்பாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்னிக்கு பொறந்தநாளு கொண்டாடும் எங்க சங்கத்து மெம்பர்ஸ் நட்ராஜ்,அபி அவர்களின் அப்பாவி அப்பாக்கு சங்கத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
சரி சரி எங்க அப்பாவி அப்பாக்கு பிறந்தநாள் பரிசா வரிசையா வந்து ஆளுக்கு 4 குட்டு குட்டீட்டு போங்க....
Monday, November 12, 2007
குசும்பன் அங்கிளை கலாய்த்தால் என்ன ஆகும்? அது தப்பா?
நம்ம வலை உலகில் எல்லாரையும் வரைமுறை இல்லாம கலாய்க்கும் குசும்பன் அங்கிளை கலாய்த்தால் தப்பா....நீங்க எல்லாம் நாட்டாமையா மாறி தீர்ப்பு சொல்லுங்க....
ஊங்க தீர்ப்பு என்னவொ அதுபடி செஞ்சிடுவோம்....
அனுராதா ஆண்ட்டிக்காக குழந்தைகளின் பிரார்த்தனை...
குழந்தையும் தெய்வமும் ஒன்றுன்னு பெரியவங்க சொல்வாங்க. அதனால நாம குட்டீஸ் எல்லாரும் இன்னைக்கு அவங்க உடம்பு சரியாகனும்னு சாமிகிட்ட வேண்டிக்குவோம், பேரண்ட்ஸ் எல்லாரும் அவங்களுக்கு எங்கப்பா மாதிரி சாமி நம்பிக்கை இல்லைன்னாலும் இன்னைக்கும் மட்டும் அனுராதா ஆண்ட்டி க்காக குட்டீஸ் கூட ப்ரார்தனை செய்யுங்க ப்ளீஸ்,
இதை படிக்கும் மாமா,அத்தை எல்லோரும் குட்டீஸ் ஆசைக்காக ஒரே ஒரு நிமிடம் கண்மூடி வேண்டுங்கள் ப்ளீஸ்.
அனுராதா ஆண்ட்டி சீக்கிரம் குணமடைய குட்டீஸின் வாழ்த்துக்கள்
Sunday, November 11, 2007
அல்லாருக்கும் நன்றிங்கோ...
எங்க சங்கத்துக்கு வந்து எங்களுக்கு முதல் ஆதரவு கொடுத்து பிறகு எங்க சங்கத்துல( ஆப்புக்கு பயந்து ) ஐக்கியமான எங்கள் அன்பு அத்தை மை ப்ரண்டுக்கும் மற்றும் அடிக்கடி வந்து கும்மியடிக்கும் எங்கள் குல சீனியர் சிட்டிசன்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
எச்சரிக்கை : வழக்கம் போல இந்த பதிவுக்கும் வந்து கும்மியடிச்சிட்டு போய்டுங்க. இல்லனா வராதவங்களுக்கு எல்லாம் ஆப்பு அடிக்கப் படும்.( எப்டியெல்லாம் சங்கத்த வளர்க்க வேண்டி இருக்கு.. அவ்வ்வ்வ்வ்வ்வ் :( )
பிரியங்காவுக்கு பிரார்தனை செய்வோம் இன்று 12/11/07 Heart Operation.
ஆனால் எங்க பிரண்ட் பிரியங்கா (1.5 yrs old) ரொம்ப வீக்கா இருப்பதாக அப்பா டாக்டர்கிட்ட பேசிட்டு சொன்னாங்க (she is now only 6.5 KG...had lost about 5KG weight).
இன்று (12/11/2007) காலை 10:00AM operation பண்ண இருக்காங்க (originally scheduled on 9th Nov but postponed bcos of the kid condition) , பிளிஸ் கொஞ்சம் எங்க பிரண்ட் பிரியங்கா'காக இன்னைக்கு கொஞ்சம் வேண்டிக்கோங்க.
அன்புடன்....குட்டீஸ்
தமிழ்மணத்தில் சூடு கிளப்பும் குட்டீஸ்
நான் இந்த பதிவுல சொன்னதை இன்னொரு தடவை இங்க சொல்லிடுரேன்
//அடடா பேக்ரவுண்ட்ல "மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு" ன்ன்னு சென்னை 600028 பாட்டயும் சேத்துருக்கலாமேட அப்ரா. சும்மா இந்த வயசான பிளாக்கர்ஸ்க்குல்லாம் இப்பவே கிலி புடிச்சிருக்கும்//