Showing posts with label குட்டீஸ் அறிமுகம். Show all posts
Showing posts with label குட்டீஸ் அறிமுகம். Show all posts

Tuesday, December 11, 2007

105 ஹாய்! நாங்களும் வந்துட்டோம் - பானு & தேஜு

எல்லோர்க்கும் வணக்கம்.

நாங்கள் பானு & தேஜு.

நாங்கள் இந்தியர்கள். ஸ்ரீலங்காவிலிருந்து, ஜப்பான் போயி, இப்போ கென்யா போகப் போகிறோம்.

வழியில் எங்கள் நண்பர்களைக் காண இலங்கை வந்துள்ளோம்.

ஜனவ்ரியில் கென்யா போகிறோம்.

அங்கிருந்து உங்கள் அனைவருடனும் தொடர்பு கொள்வோம்.

எங்களுக்கு பிடித்த மானது எல்லாம் எங்கள் பிளாக்கில் பதிவோம்.

குட்டீஸ் கார்னரிலும் கலக்கவோம்.

http://www.bhanutheju.blogspot.com/ இது தான் எங்கள் பிளாக் ஐடி.

பானு & தேஜூ

Friday, November 30, 2007

நாங்களும் வந்துட்டோமுல்ல!!




நான் தாங்க இளமதி....
வீட்டுல எல்லோரும் மதிக்குட்டி ன்னு கூப்பிடுவாங்க.. நீங்களும் அப்படியே கூப்பிடலாம்....

என் வயசு 6மாதம்....
அப்பாவும், சித்தப்பாவும் சிங்கப்பூர்ல வேலை செய்யுறாங்க.
அதனால அப்பா, அம்மா, சித்தப்பா, நான் எல்லாரும் சிங்கப்பூர்ல இருக்கோம்.

நான் பதிவு எழுத இன்னும் சில வருடங்கள் ஆகும்... அதுவரைக்கும் என் சார்புல என் சித்தப்பா எழுதுவார்......

ஹாய்! ஹாய்! ஹாய்!



ஆல் த அங்கிள்ஸ், ஆன்டீஸ் மற்றும் அன்பு குட்டீஸ்,

எல்லோருக்கும் வணக்கம்.

நான் ஆஷிஷ் நான் 6 ஆம் வகுப்பு படிக்கிறேன். டான்ஸ், பாட்டு, வரைதல், கராத்தே ஆகியவை என் பொழுது போக்கு. எனக்கு கார்கள் மற்றும் பைக்குகள் ரொம்ப இஷ்டம். இப்போ என் தங்கச்சி பத்தி சொல்றேன்.

என் தங்கை பேரு அம்ருதா. அம்ருதா 3 ஆம் வகுப்பு படிக்கிறாங்க. பாட்டு, கராத்தே, புத்தகம் படித்தல் அம்ருதாவின் பொழுதுபோக்கு. பார்பி பொம்மைகள் ரொம்ப இஷ்டம்.

நாங்க இந்தியர்கள். அப்பாவோட வேலை காரணமாக இங்கே ஸ்ரீலங்காவில் 5 வருஷமா இருக்கோம்.

டாம் & ஜெர்ரி மாதிரி சில நேரம் அடிச்சுப்போம், சில நேரம் கொஞ்சிப்போம். அதனாலதான் விட்டுல அந்த பேரு. we love each other.

Wednesday, November 14, 2007

அம்மு (எ) நிஷாலினி ஒரு அறிமுகம்

இவதாங்க அம்மு (எ) நிஷாலினி.வயசு ஒரு வயசு 9 மாசம். பாக்க எவ்வளவு சமத்தா தெரியுது. ஆனா இவ ஒரு குட்டி சுனாமி.
இவள பத்தி முழுசா சொல்வதுக்கு பதிலா அம்முவோட லேட்டஸ்ட் திருவிளையாடல் ஒன்னு சொல்றேன்.





வீட்ல ஒரு பெரிய பல்லி ஒன்ன கையில புடிச்சுட்டா. அது அவளோட குட்டிக்கையவிட பெரிய பல்லி.

கீழ்வீடு,பக்கத்து வீடு, எதிர்வீடுன்னு எல்லாரும் எதோ பல்லி அம்முவ புடிச்சுகிட்ட மாதிரி கத்துன கத்துல மொத்த தெருவும் கூடிருச்சு, பல்லிய பாத்து எல்லோரும் பயந்து ஓடறதபாத்து குஷி வேற ஆகி எல்லாறயும் பல்லிய காட்டி மிரட்ட ஆரம்பிச்சுட்டா.

பயந்தவங்க பக்கதுல போயி பல்லிய மேல போடற மாதிரி காட்டறது, அவங்க விட்டா போதும்ன்னு ஓடறது.யாரு சொல்லியும் இவ பல்லிய விடல. கடைசில ஒரு பெரிய பூச்சிய புடிச்சு அவகிட்ட காட்டுனதும் அய்ய் பூச்சின்னு பல்லிய விட்டுட்டு பூச்சிய புடிச்சுகிட்டா. (குத்துயிரும் கொலையுயிருமான அந்த பல்லி இப்பவும் ஒரு கால் ஒடிஞ்சி போயி வீட்டுலதான் இருக்கு, அதுக்கு இப்போ பாப்பா பல்லின்னு பேரு. அத யாரும் விரட்றதில்ல.)

அப்புறம் பெரிய கட்டெரும்பா இருந்தா லாவகமா வேட்டையாடி அதை வாயில போட்டு சாப்பிடறதுல அலாதி பிரியம்.

நான் சொன்ன சாம்பிள்ஸ்ல இருந்து கொஞ்சம் இவள பத்தி புரிஞ்சிருக்கும். இவ என்ன மாதிரி இல்லை.இவ அதிரடி பார்ட்டி. நான் அவ்வளவு அதிரடி இல்லை. ஒரு குடும்பத்துல ரெண்டு பேர் வேற வேற மாதிரி இருந்தா தானே நல்லாயிருக்கும். யெஸ் அம்மு என் கஸின்.என்ன விட ரெண்டு மாசம் மூத்த அக்கா.(ரெண்டு மாசம் பெரியவன்னா அக்கான்னு சொல்லனுமா?) குட்டீஸ் மற்றும் சீனியர்ஸ் எனக்குக் கொடுத்த ஆதரவை அம்முவுக்கும் கொடுங்க

Wednesday, November 7, 2007

தீபாவளியும், அறிமுகமும்

Photo Sharing and Video Hosting at Photobucket
எல்லாருக்கும் எங்க சங்கத்தோட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இது என்னோட முதல் பதிவு என்பதால் ஒரு சிறு அறிமுகம் செய்யனும் என்று என்னோட சீனியர்கள் சொன்னதால் இங்க அறிமுகம்.
அறிமுகம் 1
Photo Sharing and Video Hosting at Photobucket
பெயர் : நிலா
எனது அக்கா. இவங்களைத் தெரியாதவங்க தமிழ்மணத்தில் குறைவு. இவங்க அப்பவுக்கு முன்னாடியே தமிழ்மணத்துக்கு வந்துட்டாங்க. அப்பப்ப கும்மீ எங்காயவது நடந்தா புகுந்து விளையாடுவாங்க. இப்ப நல்லா நடக்குறதாக் கேள்வி. இவங்களோட புது குழந்தைகள் அகராதி பிரசித்தம். இதுக்கு அகில உலக ரீதியில் பாராட்டு வந்திருக்கு.
அறிமுகம் 2
Photo Sharing and Video Hosting at Photobucket
பெயர் : பேபி பவன்
எனது அண்ணன். இவங்க என்னை மாதிரி தமிழ்மணத்துக்கு புதுசுனாலும் இவங்க அப்பா என்னோட மாமா திரு. இம்சை எல்லாருக்கும் தெரிஞ்சவங்க தான். இனி இவங்களும் தமிழ்மணத்தில் இனி வலம் வருவாங்க.
அறிமுகம் 3
Photo Sharing and Video Hosting at Photobucket
பெயர் : கார்த்திக் (எ) அப்ராஜித்
இந்த ஆளைத் தெரியாதவங்க இனி தமிழ்கூறும் இணையத்தில் யாரும் இருக்கக்கூடாது என்ற முடிவோட வந்திருக்க ஆள். வேற யாரு நான் தான். என் அப்பாபேரு மோகன்.என் அம்மா பேரு வித்யா கலைவாணி. நாங்க சவுதில இருக்கோம். இப்ப தான் நடக்க ஆரம்பிச்சு இருக்கேன். என்னோட ஒரே லட்சியம் என் அம்மாவைப் பாக்கிற ஆளுங்க 'இவங்க தான் அப்ராவோட அம்மா'னு சொல்லனும். அதுக்கு கடுமையா உழைக்கனும்.