Wednesday, November 14, 2007

அம்மு (எ) நிஷாலினி ஒரு அறிமுகம்

இவதாங்க அம்மு (எ) நிஷாலினி.வயசு ஒரு வயசு 9 மாசம். பாக்க எவ்வளவு சமத்தா தெரியுது. ஆனா இவ ஒரு குட்டி சுனாமி.
இவள பத்தி முழுசா சொல்வதுக்கு பதிலா அம்முவோட லேட்டஸ்ட் திருவிளையாடல் ஒன்னு சொல்றேன்.

வீட்ல ஒரு பெரிய பல்லி ஒன்ன கையில புடிச்சுட்டா. அது அவளோட குட்டிக்கையவிட பெரிய பல்லி.

கீழ்வீடு,பக்கத்து வீடு, எதிர்வீடுன்னு எல்லாரும் எதோ பல்லி அம்முவ புடிச்சுகிட்ட மாதிரி கத்துன கத்துல மொத்த தெருவும் கூடிருச்சு, பல்லிய பாத்து எல்லோரும் பயந்து ஓடறதபாத்து குஷி வேற ஆகி எல்லாறயும் பல்லிய காட்டி மிரட்ட ஆரம்பிச்சுட்டா.

பயந்தவங்க பக்கதுல போயி பல்லிய மேல போடற மாதிரி காட்டறது, அவங்க விட்டா போதும்ன்னு ஓடறது.யாரு சொல்லியும் இவ பல்லிய விடல. கடைசில ஒரு பெரிய பூச்சிய புடிச்சு அவகிட்ட காட்டுனதும் அய்ய் பூச்சின்னு பல்லிய விட்டுட்டு பூச்சிய புடிச்சுகிட்டா. (குத்துயிரும் கொலையுயிருமான அந்த பல்லி இப்பவும் ஒரு கால் ஒடிஞ்சி போயி வீட்டுலதான் இருக்கு, அதுக்கு இப்போ பாப்பா பல்லின்னு பேரு. அத யாரும் விரட்றதில்ல.)

அப்புறம் பெரிய கட்டெரும்பா இருந்தா லாவகமா வேட்டையாடி அதை வாயில போட்டு சாப்பிடறதுல அலாதி பிரியம்.

நான் சொன்ன சாம்பிள்ஸ்ல இருந்து கொஞ்சம் இவள பத்தி புரிஞ்சிருக்கும். இவ என்ன மாதிரி இல்லை.இவ அதிரடி பார்ட்டி. நான் அவ்வளவு அதிரடி இல்லை. ஒரு குடும்பத்துல ரெண்டு பேர் வேற வேற மாதிரி இருந்தா தானே நல்லாயிருக்கும். யெஸ் அம்மு என் கஸின்.என்ன விட ரெண்டு மாசம் மூத்த அக்கா.(ரெண்டு மாசம் பெரியவன்னா அக்கான்னு சொல்லனுமா?) குட்டீஸ் மற்றும் சீனியர்ஸ் எனக்குக் கொடுத்த ஆதரவை அம்முவுக்கும் கொடுங்க

21 comments:

பாப்பா பல்லி said...

ஓ. அவங்களா இவங்க!!!

பாப்பா பல்லி said...

மைண்ட்ல வெச்சிக்கிறேன்

said...

ஆகா, கெளம்பிடுச்சிய்யா அடுத்த சுனாமி....

~பொடியன்~ said...

நான் பின்னூட்டம் போடுவதற்காக அதுல எவ்ளோ பெரிசா டைப் பண்ணி வச்சிருந்தேன்.. அதெல்லாம் எங்க நிலா மேடம்? :((

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

said...

அவசரத்துல அதயும் எடுத்துட்டேன் பொடியா.சாரி. மறுபடியும் டைப் பண்ணீ போட்டுக்கோ

said...

நானும் வருவேன் ஆட்டத்தை கலைப்பேன்.

said...

பிளிஸ் பிளிஸ் பிளிஸ் கும்மி வேண்டாம்.

கும்மி said...

//
Baby Pavan said...
பிளிஸ் பிளிஸ் பிளிஸ் கும்மி வேண்டாம்.
//
அப்ப வேற என்ன வேணும்???

said...

A big WELCOME to the kutti tsunami :-)

said...

Cute'ஆ இருக்கா செல்லம்... :)

said...

வாங்க! அடுத்த சுனாமியா? ம் கலக்குங்க.

said...

அக்காவை சங்கத்து சிங்கங்கள் சார்பாக வரவேற்கிறோம். அக்கா ஏதாவது பாட்டை எடுத்து விடுங்க. சும்மா அதிரட்டும்.

said...

அப்ரா said...
அக்காவை சங்கத்து சிங்கங்கள் சார்பாக வரவேற்கிறோம். அக்கா ஏதாவது பாட்டை எடுத்து விடுங்க. சும்மா அதிரட்டும்.

அறிமுக பதிவு போட்டப்பிறம் எங்கப்பா காணாம போய்ட்ட...சீக்கிரம் வந்து நல்ல உபயொகமான பதிவா போடுப்பா...அக்காவயும் பொடியனையும் பாத்து நானும் மொக்கயா போட்டுட்டிருக்கேன்...எதுனா நல்ல idea குடுடா...

said...

ஓய்ய்ய் பாப்பா பல்லி, மிச்சம் இருக்கும் மூணு காலும் ஒழுங்கா இருக்கனுமா வேணாமா?

said...

பவன்,பொடியன்,கலைவாணிக்கா,தேவ் மாமா, ராம் மாமா,அப்ரா அனைவருக்கும் நன்றி

said...

ஓய்ய் பெரிய பல்லி, அடுத்த டார்கெட் பாம்புன்னு நெனச்சுகிட்டு இருக்கேன், குறுக்கால வராத.

said...

சரிக்கா மொதல்ல ஒரு பதிவு போடுக்கா...இரண்டு அக்காங்க இருக்கீங்க ஆனா ஒரு பதிவு கூட போடரது இல்ல... மலெசியா அக்கா பிசியா வலைசரம் போட போய்டாங்க...

said...

ஆமா மாபெரும் வலைபதிவர் மாநாடு ஈரோடுல நடக்க இருக்கறதா ஒரு செய்தி கேள்வி பட்டேன்....சொல்லவெஇல்ல..

said...

ஆமா பவன், ஒரு பெரிய வலைபதிவர் சந்திப்பு ஈரோட்ல நடக்கப் போவுது.NDTV ல லைவ் டெலகாஸ்ட் பண்ண போறாங்க

said...

நிலாவோட தொல்லையே தாங்கலே - இதுலே அம்மு வேறயா ?? அதுவும் பல்லி பாம்புன்னு இப்பவே பயமுறுத்துறா - கட்டெறும்பு தின்னுறாளா - அவங்கம்மா என்ன பண்றாங்க

kuttipampu said...

ammadi bayama irukupa