Showing posts with label maths-comp. Show all posts
Showing posts with label maths-comp. Show all posts

Saturday, January 26, 2008

குட்டீஸ் - மோட்டாரிங் ஸ்கில்ஸ்

குட்டீஸ்க்காக ஒரு நல்ல ஆக்டிவிட்டி புக் இதோ.


இங்க இருந்து டவுன்லோட் பண்ணிக்கோங்க: http://static.scribd.com/docs/7u0csz9c4l3l0.pdf

Saturday, January 19, 2008

கணக்கு பிராக்டிகல்ஸ்

இப்படி கூட கணக்கு சொல்லிதராங்க. நல்லா தான் இருக்கு. நீங்களும் இந்த மாதிரி கொஞ்சம் ஈசியா புரியர மாதிரி மெத்தட்ல சொல்லிகுடுங்க.

Saturday, January 12, 2008

கணக்கு - பெருக்கல் மேட் ஈசி

Squaring a 2-digit number beginning with 1

சாம்பிள்: If the number is 16, square the second digit:6 × 6 = 36 _ _ 6
Multiply the second digit by 2 and add the carry: 2 × 6 + 3 = 15 _ 5 _
The first digit is one plus the carry:1 + 1 = 2 2 _ _
So 16 × 16 = 256.

மேலும் ஒரு சாம்பிள்
For 19 × 19, square the second digit:9 × 9 = 81 _ _ 1
Multiply the second digit by 2 andadd the carry: 2 × 9 + 8 = 26 _ 6 _
The first digit is one plus the carry:1 + 2 = 3 3 _ _
So 19 × 19 = 361.


Cool Math Pattern! Squaring Numbers Made Easy... - Click here for this week’s top video clips

Saturday, January 5, 2008

கம்ப்யூட்டர் பாகங்கள் மற்றும் கம்ப்யூட்டர் அசெம்பிள் பற்றி.

கம்ப்யூட்டர் பாகங்களின் ஒரு அறிமுகம்

கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வதற்கு முன்னதாக ஒரு கம்ப்யூட்டரில் உள்ள பாகங்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

மதர்போர்டு:
CPUவில் எல்லா பாகங்களும் இணைக்கப்படும் அடிப்படையான சர்க்யூட் போர்டு. எல்லாவற்றிற்கும் தாய். தாயைப் போலவே ஊமையாக உழைக்க வேண்டும். கம்ப்யூட்டர் தலைமைச் செயலகமான ப்ராஸஸர், பல்வேறு ப்ரோக்ராம்களை ஒரே சமயத்தில் திறக்க உதவும் மெமரி ஆகியவை இதன் மடியில் தான் தாலாட்டப்படுகிறது. உங்கள் கம்ப்யூட்டரைக் குறிப்பிடும் போது ப்ராஸஸர், ராம், ஹார்ட் டிஸ்க் பற்றியெல்லாம் பெருமையாக குறிப்பிடுவீர்கள். ஆனால் மதர் போர்டு?

மைக்ரோ ப்ராஸஸர்:
சுருக்கமாகச் சொன்னால் அரசன். முக்கியமான கணக்குகளைத் தானே போட்டு, எல்லாப் பாகங்களுக்கும் ஆணைகள் இட்டு செய்து முடிப்பவன்.

மெமரி (RAM):
ஓடிக்கொண்டிருக்கும் எல்லா ப்ரோக்ராம்களையும் ஞாபகத்தில் வைத்திருக்கும். அரசன் ஆணையிடும் போது தகவல்கள் அனுப்பும் மந்திரி. ஹார்ட் டிஸ்க்:
கருவூலம் அல்லது நூலகம் என்று சொல்லலாம். இன்றைய விண்டோஸ் யுகத்தில் ஹார்ட் டிஸ்க் இல்லாத கம்ப்யூட்டர் வைத்திருப்பவரை காதலி கூட சீண்ட மாட்டாள்! இதன் ஞாபகக் கொள்ளளவு ஒவ்வொரு இரண்டு வருடங்களில் இரட்டிப்பாவதாக கூறப்பட்டாலும். தற்போது அதைவிட வேகமாக கூடுவதாகத் தோன்றுகிறது. கம்ப்யூட்டரில் உள்ள எல்லாப் ப்ரொக்ராம்களும் இந்த நூலகத்தில் தான் வைக்கப்படுகின்றது.

ப்ளாப்பி ட்ரைவ்:
ரொம்ப நாளாக (வருடங்களாக) கம்ப்யூட்டரில் மாறாமல் இருக்கும் ஒரே பாகம். உங்கள் கணக்குகளை கம்ப்யூட்டரிலிருந்து ப்ளாப்பியில் நகலெடுத்து பையில் வைத்துக் கொண்டு போகலாம். எல்லாக் கம்ப்யூட்டரிலும் போடும்படியாக இருக்க வேண்டும் என்பதால் இது மாறவே இல்லை. ஆனால் தற்போதைய அளவில் இதன் ஞாபகச் சக்தி மிகவும் குறைவு. ஆகவே கிட்டத்தல்ல இது வழக்கொழிந்த்து விட்டது என்றே சொல்லலாம்.


சிடி ட்ரைவ்:
ப்ளாப்பிக்கு கிட்டத்தட்ட சீப்பான மாற்றாக சிடி வந்துள்ளது. சாதாரண சிடி 675MB வரை கொள்ளும், விலையும் மிகக் குறைவு. வீட்டில் உபயோகிக்கும் சிடி ட்ரைவ்கள் சிடி-ரோம் ட்ரைவ்கள், அதாவது சிடியைப் படிக்க மட்டுமே முடியும் எழுத முடியாது. சிடியும் கூட ஒரு முறை எழுதினால் அழித்து எழுத முடியாது. ஆகவே ப்ரோக்ராம்களை விற்க வசதியான சாதனமாக உள்ளது. சினிமாக்களால் சிடியை அனைவரும் தற்போது அறிந்துள்ளனர்.

சிடி-ரோம் மட்டுமல்ல CD-W, CD-RW போன்ற வகைகளும் உள்ளன. CD-W(rite) ட்ரைவ் சிடியை எழுத உபயோகிக்கலாம். CD-RW (Rewrite) ட்ரைவில் சிடியை அழித்து மீண்டும் எழுதலாம். இதில் உபயோகிக்கும் சிடி சற்று வித்தியாசமானது, ஆனால் சாதாரண சிடி-ரோம் ட்ரைவில் உபயோகிக்க முடியும்.

மோடம்:
கம்ப்யூட்டரை டெலிபோனுடன் இணைக்கும் சாதனம். இதில் மற்ற பேக்ஸ் சாதனங்களுக்கு கம்ப்யூட்டரிலுள்ள பக்கங்களை பேக்ஸாக அனுப்பவும், பேக்ஸ் சாதனங்கள் அனுப்பும் பக்கத்தை பெறவும் முடியும். இண்டர்நெட் வீட்டிற்கு வரும் வழி.

உங்கள் கம்ப்யூட்டரை நீங்களே அசெம்பிள் செய்ய Build a PC

 PCபாகங்கள் வாங்குதல்:

உங்கள் தேவை மற்றும் வசதிக்கேற்ப கம்ப்யூட்டரில் அமைக்கப் போகும் பாகங்களைத் தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் அவற்றின் விலைகள். தற்போது போட்டி காரணமாகவும், மிக எளிதில் கிடைப்பதாலும் விலைகள் பெரும்பாலும் சரியானவையாகவே இருக்கின்றன. எனினும் விலையை விட, விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் சுறுசுறுப்பை முக்கியமாக கவனித்து வாங்குதல் நல்லது. வாங்கும் பாகங்களுக்கு எவ்வளவு காலம் வாரண்டி என்பது போன்ற விபரங்களை தகுந்த அத்தாட்சியுடன் பெற்றுக் கொள்வது நல்லது.

பாகங்களை வாங்குமுன் நீங்கள் வைத்திருக்கும்/செய்யவிருக்கும் கம்ப்யூட்டருக்கு அது ஒத்துப் போகுமா என உறுதி செய்து கொள்ளவும். ஒரு கம்ப்யூட்டருக்கு வேண்டிய எல்லாப் பாகங்களும் ஒன்று சேர்த்த பின்னரே அசெம்பிள் செய்யத் தொடங்குவது, அதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் விரைவாகக் களைய உதவும். முக்கியமாக கம்ப்யூட்டருக்கு கிடைக்கும் மின்சக்தி சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள ஸ்டெபிலைஸர் அல்லது UPS அவசியம் தேவை.

தயாராகுதல்:
கம்ப்யூட்டரில் அசெம்பிள் செய்யப் போவது CPU எனும் பெட்டியை மட்டும் தான். மற்ற பாகங்களான மானிட்டர், கீஃபோர்ட், மௌஸ் முதலியவற்றை வாங்கி அப்படியே இணைக்க வேண்டியது தான். அசெம்பிள் செய்யும் போது சர்க்யூட் போர்டுகளைக் கையாள வேண்டியிருப்பதால் நம் கையில் (தலைமுடியைக் கோதுதல், உல்லன் பேன்ட் முதலியவற்றில் கையைத் துடைத்தல் முதலியவற்றால்) ஏற்படக்கூடிய ஸ்டேடிக் மின்சாரத்தை முதலில் எர்த் செய்ய வேண்டும். ஜன்னல் அல்லது இரும்பு மேஜைக்கால்களைத் தொட்டு எர்த் செய்யலாம். கையில் ஸ்டேடிக் மின்சாரத்தை எர்த் செய்யவென்றே உபயோகிக்கப்படும் கைப்பட்டையை முடிந்தால் அவசியம் பயன்படுத்தவும்.

அசெம்பிள் செய்ய உபயோகிக்கப்படும் மேஜை மரத்தாலனவையாக இருத்தல் நலம். மேஜை மீது பாலியஸ்டர் போன்ற துணிகளையோ அல்லது ப்ளாஸ்டிக் திரைச்சீலைகளையோ கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. சர்க்யூட் போர்டுகளில் இணைக்கும் பகுதிகளில் உள்ள செம்புப் பட்டைகளை எக்காரணம் கொண்டும் கையால் தொடக்கூடாது.

அசெம்பிளிங்:
CPUவில் எல்லா கருவிகளுக்கும் இணைப்புப் பாலமான 'மதர் போர்டை', கேபினட்டில் உள்ள பேஸ் ப்ளேட் டை எடுத்து அதிலுள்ள துளைகளுக்கு நேராக அத்துடன் கொடுக்கப்பட்ட ப்ளாஸ்டிக் ஆணிகளை உபயோகித்து ந ଡ଼'அ4லைபெறச் செய்ய வேண்டும். இதன் பின்னரே ப்ராஸஸர், மெமரி (RAM) உட்பட தேவைப்படும் பாகங்களை முறைப்படி இணைக்க வேண்டும். இந்த இணைப்பு முறைகள் தொழில்நுட்பம் மாறும் போது அவ்வப்போது மாறி வருவதால் அந்த பாகத்துடன் வரும் மானுவலைப் படித்து பார்த்து அதன்படி இணைக்கவும். முக்கியமாக மதர்போர்டில் செய்ய வேண்டிய செட்டிங்குகள் இருக்கின்றனவா என்று மதர்போர்டு மானுவலைப் பார்க்கவும்.

பயாஸ் செட்டிங் (BIOS‍ Settings):
அசெம்பிளிங் முடித்து, மானிட்டர், கீஃபோர்ட், மௌஸ் போன்றவற்றை CPU உடன் இணைத்து கம்ப்யூட் டர் தயாரானபின், தகுந்த பவர் சப்ளை அளித்து கம்ப்யூட்டரை உயிர்ப்பிக்கவும். திரையில் அது செல்ப் செக்கிங் வேலைகளை முடித்து ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் காணோம் என்பது போன்ற தகவலைச் சொன்னால் உங்களைத் தட்டிக் கொடுத்துக் கொள்ளவும். உங்களுடைய கம்ப்யூட்டரை நீங்களே அசெம்பிள் செய்து விட்டீர்கள்.

கம்ப்யூட்டரில் உள்ள பாகங்களின் விபரங்களை பயாஸ் பெரும்பாலும் தானாகவே குறித்துக் கொள்ளும். இருந்தாலும் மதர்போர்ட் மானுவல் உதவியுடன் நிச்சயித்துக் கொள்வது நலம்.

பின்னர் ஹார்ட் டிஸ்க் பார்மாட், ஆப்பரேடிங் சிஸ்டம் லோட் செய்தல் என்று மென்பொருள் வேலை தான் பாக்கி.

தகவல் உதவி : களஞ்சியம்.காம்

Wednesday, December 5, 2007

9ஆம் வாய்ப்பாடு கையாலே சொல்லலாமா? U/A

வாய்ப்பாடு (Times tables) மனப்பாடம் செய்வது கஷ்டமாக இருக்கிறது எனும் குட்டீஸ்'க்கு ஒரு எளிய வழி இது.

9 ஆம் வாய்ப்பாட்டை கையாலேயே சொல்ல பழகிக்கொண்டால் சுலபமாக மனப்பாடம் ஆகிவிடும். எடுத்துக்காட்டு : 9 * 2 = 18.

இதற்கு வலது கையின் இரண்டாவது விரலை மடக்கிக் கொண்டால், வரும் விடை 1 + 8 (மடக்கிய விரலைத்தவிர மீதம் இருக்கும் விரல்கள் தான் விடை.

9 * 1 = 9

9 * 2 = 18
இங்கே 1 (சுண்டு விரல்) + 8 (மீதி விரல்கல்) = 18

9 * 3 = 27
இங்கே 2(சுண்டு விரல்+ பக்கத்து விரல்) + 7 (மீதி விரல்கல்) = 27
9 * 4 = 36

9 * 5 = 45

9 * 6 = 54

9 * 7 = 63
9 * 8 = 72
9 * 9 = 81
9 * 10 = 90
என்ன குட்டீஸ் சுலபமா இருக்கா? உபயோகமா இருக்கா? பதில் பின்னூட்டத்தில் சொல்லுங்க.
அன்புடன்
புதுகைத் தென்றல்

65 பெருக்கல் கணக்கு U/A

பெருக்கல் கணக்கு Posted by வெங்கட் as கல்வி
வெங்கட் அண்ணா உங்க இந்த பதிவு நாங்க காப்பி பண்ணிக்கறோம், வருத்தப்படாதிங்க.

பெருக்கல், வகுத்தல் கணக்குகளை குழந்தைகளுக்குச் சொல்லித்தர பல செய்முறைகள் இருக்கின்றன. இந்தியாவில் படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் Traditional Algorithm என்ற முறையில் பெருக்கக் கற்றுக் கொண்டவர்கள். இன்றளவும் நான் இதைத்தான் பயன்படுத்திவருகிறேன்.

என்னுடைய பையனுக்குச் சொல்லித்தரும்பொழுது செய்வழிகளுக்கு முன்னால் உள்ளுணர்வின் அடிப்படையில் அவனாக எப்படிச் செல்கிறான் என்பதை அவதானிப்பது என் வழக்கம். மேற்கொண்டு படிக்குமுன் இந்த வீடியோவைப் பாருங்கள்:

இதில் வருகின்ற Partial Fractions Method உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது. ஆறாம் வகுப்பிலோ, ஏழாம் வகுப்பிலோ படித்ததாக நினைவு. Lattice Algorithm பாடமுறையில் படித்த நினைவு இல்லை. ஆனால் பொழுதுபோக்கு கணிதம் போன்ற ஏதோ ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

இங்கே (ஒண்டாரியோ மாநிலம், கனடா) நான்காம் வகுப்பு படிக்கும் என் மகனுக்குப் போதுமான அளவுக்குக் கணக்கு பயிற்சித் தரப்படுவதில்லை என்பது என் கருத்து. இந்த வீடியோவின் அடிப்படையில் விவாதிக்கப் பல விடயங்கள் இருக்கின்றன. வரும் நாட்களில் எழுதலாம் என்று எண்ணம்.
நீங்கள் ஒரு சிறுமிக்கோ, சிறுவனுக்கோ கற்றுக் கொடுத்தால் எப்படிக் கற்றுக் கொடுப்பீர்கள்?

Monday, December 3, 2007

55 பாடம் - 1 கணக்கு மேட் ஈசி

பெருக்கல் : Multiplying two 2-digit numbers having same 1st digit

ஏதெனும் இரண்டு, 2 எண்களை எடுத்து கொள்ளவும் (முதல் எண் ஒன்றாக இருக்கவேண்டும்)

ஒரு சாம்பிள், நான் எடுத்த எண் 42 X 45

இப்போ கடைசி இரண்டு எண்களையும் பெருக்கவும் 2 X 5 = 10 அதில் முதல் எண் மனதில் வைக்கவும்.

_ _ _ 0

இப்போ இரண்டாம் எண்களின் கூட்டி அதை முதல் எண்னுடன் பெருக்கவும். பிறகு மனதில் வைத்த எண்னை கூட்டவும்.

5 + 2 = 7 / 7 × 4 = 28 / 28 + 1 (மனதில் வைத்த எண்) = 29 (முதல் எண் மனதில் வைக்கவும்) .

_ _ 9 _

முதல் எண்களை பெருக்கவும், பிறகு மனதில் வைத்த எண்னை கூட்டவும்.

4 × 4 = 16 / 16 + 2 = 18 / 1 8 _ _

விடை 42 × 45 = 1890.

வெற எண்களையும் பாருங்க ? 62 x 67

2 × 7 = 14 / _ _ _ 4

2 + 7 = 9 / 6 × 9 = 54/ 54 + 1 = 55 / _ _ 5 _

6 × 6 = 36; 36 + 5 = 41 / 4 1 _ _

விடை 62 × 67 = 4154.

ஈசியா இருக்கா கணக்கு. நாளை சந்திப்போம்

51. எங்களுக்கு புரியல கொஞ்சம் doubt கிளியர் பண்ணுங்க பிளிஸ்

முத்துலெட்சுமி ஆன்ட்டி, காயத்ரி ஆன்ட்டி, கண்மணி ஆன்ட்டி மூனு பேரும் ஒரு காபி ஷாப் போய் 'டீ' சாப்ட்டாங்க.

ஒரு டீ ரூபாய் '10', மூனு டீ'க்கு '30' ரூபாய் டேபிள்ல வெச்சிட்டு போனாங்க, ஆனா அந்த கடைல ஒரு டிஸ்கவுன்ட் ஸ்கீம் வெச்சி இருந்தாங்க. மூனு டீ சாப்டா ரூபாய் 25 தான்.

அதனால அந்த காபி ஷாப் ஓனர் அந்த கடை பையன் கிட்ட '5' ரூபாய் மீதி குடுத்துவிட்டார். அதில மூனு ஆன்ட்டியும் ஈச் 1 ருபி எடுத்திட்டு 2 ருபி அந்த பையனுக்கு டிப் குடுத்தாங்க.

இப்ப நம்ம .:: மை ஃபிரண்ட் ::. அக்கா'க்கு கணக்குல எப்பவும் போல டவுட் வந்திருச்சி. மூனு ஆன்ட்டியும் ஈச் 10 ருபி செலவு பண்ணாங்க அதில ஈச் 1 ருபி ரிட்டர்ன் வாங்கிட்டாங்க. அப்ப ஒருத்தர் 9 ருபி செலவு பண்ணாங்க, சொ டோட்டல் 27 ருபி. ஹோட்ல் பையனுக்கு 2 ருபி டிப். ஆக மொத்தம் 27+2 = 29.

மீதி 1 ருபி எங்க எங்க எங்க எங்க எங்க?

இதயும் எஞ்சாய் பண்ணுங்க... அப்படியே செந்தில் அங்கிள் கேள்விக்கும் பதில் சொல்லுங்க


Wednesday, November 21, 2007

நாங்களும் சொல்லுவோம்ல பன்னிரெண்டாம் வாய்ப்பாடு..

ஹை ஹை ஹை..

வந்ததே லேட்டு. இதுல ஹை ஒரு கேடான்னு கேட்கப்படாது ஆமா.. மை ஃபிரண்ட் குழந்தை கணக்கு படிக்க போயிருந்தா.. இதோ இப்போதான் ஓடோடி வந்திருக்கா குட்டீஸ் கார்னருக்கு..

பவன், நிலா, அப்ரா, இன்னைக்கு டீச்சர் என்ன சொல்லிக்கொடுத்தாங்கன்னு சொல்லித்தாரேன் கேட்குறீங்களா?

அண்ணா, அக்கா, ஆண்டிஸ் & அங்கிள்ஸ்.. நீங்களும் கேட்கலாம். பிடிச்சிருந்தா உங்க வீட்டுல குட்டீஸ்களுக்கு சொல்லி தரலாம்.

நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். வாய்ப்பாடு மனப்பாடம் பண்ணாததுனால அண்ணாஸ் & அக்காஸ் ஸ்கூல்ல அடி வாங்குறாங்க.. இதோ.. இந்த டெக்னிக் ஃபால்லோ பண்ணி பாருங்க.. பன்னிரெண்டாம் வாய்ப்பாடு மனப்பாடம் பண்ணாமலேயே நீங்க சூப்பரா சொல்வீங்க..

முதல்ல ஒன்னுல இருந்து ஒன்பது வரை எழுதிக்கோங்க. அடுத்த லைன்ல ரெண்டுல இருந்து 18 வரை ரெண்டு ரெண்டா கூட்டி எழுதிக்கோங்க.

1 /2 = 12
2 /4 = 24
3 /6 = 36
4 /8 = 48
5 /10 = 60 (5 + 1 =6)
6 /12 = 72 (6 + 1 =7)
7 /14 = 84 (7 + 1 = 8)
8 /16 = 96 (8 + 1 = 9)
9 /18 = 108 (9 + 1 = 10)

அட.. ரொம்ப சுலபமா இருக்குல்ல. இனி பன்னிரெண்டாம் வாய்ப்பாடு யார் கேட்டாலும் சுலபமா சொல்லிடுவோம் குட்டிஸ்ங்க நாங்க. :))