Wednesday, December 5, 2007

65 பெருக்கல் கணக்கு U/A

பெருக்கல் கணக்கு Posted by வெங்கட் as கல்வி
வெங்கட் அண்ணா உங்க இந்த பதிவு நாங்க காப்பி பண்ணிக்கறோம், வருத்தப்படாதிங்க.

பெருக்கல், வகுத்தல் கணக்குகளை குழந்தைகளுக்குச் சொல்லித்தர பல செய்முறைகள் இருக்கின்றன. இந்தியாவில் படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் Traditional Algorithm என்ற முறையில் பெருக்கக் கற்றுக் கொண்டவர்கள். இன்றளவும் நான் இதைத்தான் பயன்படுத்திவருகிறேன்.

என்னுடைய பையனுக்குச் சொல்லித்தரும்பொழுது செய்வழிகளுக்கு முன்னால் உள்ளுணர்வின் அடிப்படையில் அவனாக எப்படிச் செல்கிறான் என்பதை அவதானிப்பது என் வழக்கம். மேற்கொண்டு படிக்குமுன் இந்த வீடியோவைப் பாருங்கள்:

இதில் வருகின்ற Partial Fractions Method உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது. ஆறாம் வகுப்பிலோ, ஏழாம் வகுப்பிலோ படித்ததாக நினைவு. Lattice Algorithm பாடமுறையில் படித்த நினைவு இல்லை. ஆனால் பொழுதுபோக்கு கணிதம் போன்ற ஏதோ ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

இங்கே (ஒண்டாரியோ மாநிலம், கனடா) நான்காம் வகுப்பு படிக்கும் என் மகனுக்குப் போதுமான அளவுக்குக் கணக்கு பயிற்சித் தரப்படுவதில்லை என்பது என் கருத்து. இந்த வீடியோவின் அடிப்படையில் விவாதிக்கப் பல விடயங்கள் இருக்கின்றன. வரும் நாட்களில் எழுதலாம் என்று எண்ணம்.
நீங்கள் ஒரு சிறுமிக்கோ, சிறுவனுக்கோ கற்றுக் கொடுத்தால் எப்படிக் கற்றுக் கொடுப்பீர்கள்?

3 comments:

said...

நான் ஒரு மான்டிசோரி, பிரீஸ்கூல் டிப்ளமோ படித்த ஆசிரியை.

சின்னக் குழந்தைகளுக்கு எளிய முறை பயிற்சி அளிக்க திட்டம்.

எப்படி செயல் படுத்துவது என்பது கொஞ்சம் சொன்னால் நானும் என்னால் இயன்றதை செய்வேன்.

said...

எனக்கும் நீங்கள் சொல்வதில் உடன்பாடு. நம் இந்தியாவில், அதுவும் தென்னிந்தியாவில் கணிதம் கற்றுக்கொடுப்பது போல் வேறு எங்கும் கிடையாது.

என் மகனுக்கு வாய்ப்பாடே சொல்லித்தராமல் பெருக்கல், வகுத்தல் கற்றுக்கொடுத்தார்கல். (இதற்கு முந்தைய பள்ளியில்)

நாம் சொல்லிக்கொடுத்தாலும் பள்ளியில் டீச்சரும் சொல்லும்போது டபுள் டோஸ் ஆகிறது.

said...

தமிழ் நாட்டுக் குழந்தைகளுக்கு இதெல்லாம் தேவை இல்லை. கணக்கு தானாகவே வரும்