Tuesday, January 1, 2008

குட்டீஸின் பு(கு)த்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கோயம்புத்தூர்காறங்க கண்டிப்பா பாக்க வேண்டிய பதிவு(படம்). இதுல உங்க வீட்டு குட்டிஸும் குட இருக்கலாம். பார்த்து ரசிங்க. இரவு புத்தாண்டுக் கொண்டாட்டம் கோவை ஜென்னிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. மாதக் கடைசி ஆணிகளை புடுங்கிவிட்டு செல்வதற்கு 11 மணி ஆகிவிட்டது. நான் போகும் போது மஸ்தானா மஸ்தானா மற்றும் ஜோடி நெ.1 ல் ஆடிய ஜோடிகள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். பெரிசா ரசிக்கும்படி ஒன்னும் இல்லை. ஆஹா 1350 ரூபாய் வீண் ஆய்டிச்சி போல இருக்குனு நெனச்சிட்டே பாத்துட்டு இருந்தேன். பார்வையாளர்களும் ஆங்காங்கே ஆட்டம் போட்டு கொண்டிருந்தார்கள். சும்மா சொல்ல கூடாது. அவங்கள விட இவங்க ரொம்ப நல்லாவே ஆடினாங்க. எல்லார் முகத்துலையும் சந்தோஷம்.அப்புறம் அந்த ஜோடிகள் ஆட்டத்தை முடித்துக் கொண்டதும் நம்ம கோயம்புத்தூர் குட்டீஸ் போட்டாங்க பாருங்க குத்தாட்டம். அட அட.. காண கண் கோடி வேண்டும். என் டிஜி கேமராவில் பேட்டரி சார்ஜ் குறைவாக இருந்ததால் நீண்ட நேரம் படம் பிடிக்க முடியவில்லை. நான் ரசித்ததை நீங்களும் ரசிங்க.

எல்லாருக்கும் குட்டீஸ்கார்னரின் இனிமையான பு(கு)த்தாண்டு நல் வாழ்த்துக்கள்.






பிங்க் நிற உடையில் ஆடி கலக்கிய இந்த குட்டிப் பாப்பவிற்கு தான் முதல் வாழ்த்து சொன்னேன்.







2 comments:

said...

//
ஆஹா 1350 ரூபாய் வீண் ஆய்டிச்சி போல இருக்குனு நெனச்சிட்டே பாத்துட்டு இருந்தேன்.
//

'பெர் கப்புள்' 1350 ரூபாயா ரொம்ப சீப்பா இருக்கே!!

ஆமா யார கூட்டிகிட்டு போனீங்க, (தனி மடல் அனுப்பவும்)
:-)))))))))))))

said...

//மங்களூர் சிவா said...

'பெர் கப்புள்' 1350 ரூபாயா ரொம்ப சீப்பா இருக்கே!!

ஆமா யார கூட்டிகிட்டு போனீங்க, (தனி மடல் அனுப்பவும்)
:-)))))))))))))
//
ஹிஹி.. தனியாத் தான் மாமு போனேன்..

நல்லா கெலப்பராய்ங்கய்யா வய்த்தெறிச்சலை...:(((((