ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான் அவனை புகழ்ந்து பாடிய புலவனிடம் பரிசில் என்ன வேண்டுமோ கேள் என அரசன் அகங்காரத்துடன் சொன்னான். அதற்கு அந்த புலவர் அரசனின் அகம்பாவத்தை அழிக்கவேண்டும் என எண்ணி அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் சதுரங்க பலகை இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணி தாருங்கள் 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 2ம் கட்டத்தில் எவ்வளவு இருக்கிறதோ அதை அதே எண்ணால் பெருக்கினால் எவ்வளவு வருகிறதோ அத்தனை நெல்மணி தாருங்கள், 4வது கட்டத்தில் 3ம் கட்டத்தில் எத்தனை உள்ளதோ அதே எண்ணால் பெருக்க கிடக்கும் எண்ணிக்கை இது போன்று அந்த 64 கட்டத்தில் எவ்வளவு பிடிக்கிறதோ அது போதும் என சொன்னார்.
பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என சொல்லிவிட்டான் சதுரங்க பலகையும் வந்தது.
1வது கட்டம் = 1 நெல்மணி
2வது கட்டம் = 2 நெல்மணி
3வது கட்டம் = 4 நெல்மணி
4வது கட்டம் = 16 நெல்மணி
5வது கட்டம் = 256 நெல்மணி
6வது கட்டம் = 65636 நெல்மணி
7வது கட்டம் = 4294967296 நெல்மணி
8வது கட்டம் = 18446744073709551616 நெல்மணி
9வது கட்டம் = 18446744073709551616 X 18446744073709551616 நெல்மணி
சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை என்றால் என்ன அரசன் இந்த 9 கட்டத்திற்குள்ளாகவே அவன் நாட்டில் இருந்த அனைத்து நெல் மணிகளும் காலியாகிவிட்டது.
அரசன் புலவரின் புத்தி சாதுரியத்தை மெச்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் என போகும் அந்த கதை.
சரி இந்த கதைக்கும் முதலீடு / பங்கு வர்த்தகம் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்றால் நம் முதலீடும் அப்படித்தான் எவ்வளவுக்கு எவ்வளவு சிறு வயதில் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பல்கி பெருகும் (வட்டி குட்டி போடும், அந்த குட்டியும் குட்டி போடும் அப்படி).
The Warren Buffet Way.
The Warren Buffet ... |
Hosted by eSnips |
The Real Warren Buffet
The Real Warren Bu... |
Hosted by eSnips |
How to build wealth like warrent buffet.
how to build wealt... |
Hosted by eSnips |
9 investing secrets of warren buffet
9 investing secret... |
Hosted by eSnips |
Warren Buffet unofficial Biography
Warren Buffett's M... |
Hosted by eSnips |
3 comments:
இத எங்கயோ படிச்ச மாதிரி இருக்கே!!!
என் ப்ளாக்ல இருந்து சுட்டுட்டீங்களா????
அவ்வ்வ்வ்வ்
இதுக்கே இப்படின்னா எப்படி நாங்க எல்லாம் 250 பதிவு இப்படி தான் காப்பி அடிச்சி போட்டிருக்கோம்...
காப்பி அடிப்பது பவனின் பிறப்புரிமை. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.
Post a Comment