தம்பி இன்னைக்கு காலையிலேயே ஒரு மலாய் ரைம்ஸ் போட்டுட்டு அக்கா வந்து விளக்குவாங்கன்னு சொல்லிட்டு போயிட்டான். அதுக்குதான் இந்த சங்கிலி பதிவு..
Burung Kakak Tua என்பது ஒரு வகை கிளி. அதுக்கு சேவலைப் போல பெரிய கொண்டை இருக்கும். வெள்ளை கலர்ல இருக்கும். மத்த கலரும் இருக்கு.ஆனால், குறைவு. burung - பறவை, kakak - அக்கா, tua - வயதான என்று டைரக்ட் ட்ரான்ஸ்லேட் பண்ணலாம். ஆனால், தமிழில் இந்த பெயர் கிடையாதுங்க இந்த பறவைக்கு. ஆங்கிலத்தில் Cockatooன்னு சொல்வாங்க.
எனக்கு மலாயிலும் ஆங்கிலத்திலும்தான் இதன் பெயர் தெரிந்தது. தமிழில் என்ன கிளின்னு தெரியவில்லை. சரின்னு நிறைய பேர் கிட்ட விசாரிச்சேன்.
அவங்க சொன்ன பதில்கள்:
1- இது கிளியும் இல்ல. மரங்கொத்தியும் இல்ல. அதுக்கு நடுவுல உள்ள ஒரு பறவை
2- இது கண்டிப்பா ஒரு கிளிதான். ஆனால், இதுக்கு கொண்டை பெருசா இருக்கே?
3- ஒருத்தர் வெட்டி ஆபிஸர் நான்னு ஸ்டேடஸ் போட்டிருந்தார். கேள்வி கேட்டதும் ஆள் எஸ்கேப்.. ஆஃப்லைன் போயிட்டாரு
4- இது தெரியாதா? கிளிக்கு வெள்ளையடிச்சிருக்காங்க. எங்க ஊரு பக்கதுல ஏகப்பட்டதை பார்த்திருக்கேன்னு சொன்னார் ஒருத்தர்.
5- ஊர் உலகத்துல யாரும் வைக்காதஹ் பேரு. முருகேசன்னு வச்சிக்கோங்கன்னு சொல்றார் ஒருத்தர்.
இதுல நாலாவது அஞ்சாவது சொந்தக்காரர் தம்பிண்ணா கதிர். இதை அப்படியே பதிவுல போடுவேன்னு உத்தரவு வாங்கிட்டு இங்கே சமர்ப்பிச்சுட்டேன்.
நண்பர் ஆயில்யன் உபயோகமாக ஒரு சுட்டி கொடுத்தாரு. இன்னும் பல தகவல்கள் சேகரித்து தர்றேன்னும் சொல்லியிருக்காரு..
மேலே உள்ள தகவலில் இது ஒரு வகை கிளி என்பது புரிகிறது. ஆனால், இதைப்பற்றிய முழு தகவல்கள் தெரிந்தால் சொல்லுங்களேன்.
இப்போ இந்த பூரோங் காகாக் தூவா பாட்டை தமிழில் மொழிபெயர்த்திருக்கேன்.. இசைக்கு ஏற்றவாரு பாடுங்கள் பார்ப்போம்.
கிளியே ஓ.. கிளியே
வந்தது ஜன்னல் ஓரத்தில்
பாட்டிக்கு வயசு ஆச்சு
பற்கள் கூட ரெண்டு
லெக்டும் லெக்டும் லெக்டும்
ஓ.. ல லா..
லெக்டும் லெக்டும் லெக்டும்
ஓ.. ல லா..
லெக்டும் லெக்டும் லெக்டும்
ஓ.. லா லா..
கிளியே ஓ.. கிளியே..
பாருங்க.. கிளி ஜன்னல் ஓரத்துல வந்ததுக்கும் பாட்டிக்கும் வயசாகி ரெண்டே ரெண்டு பல் மட்டும் இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்ன்னு தெரியல. ஆனால், இந்த ரைம்ஸ் எல்லாம் நாங்க பள்ளில படிச்சிருக்கோம். இதே பாட்டை கொஞ்சம் ஆங்கிலத்துல பாடலாமா?
Cuckatoo Oh Cuckatoo,
Perching by itself,
Grandma has turned old
Has only two teeth left
Lechum Lechum Lechum
Mu la la
Lechum Lechum Lechum
Mu la la
Lechum Lechum Lechum
Mu la la
Cuckatoo oh cuckatoo....
5 comments:
செல்லாது செல்லாது, எங்க ஊருல கிளி பச்சை கலர்'ல தான் இருக்கும்.....
ஆமாம். இது கிளி இல்ல. கிளின்னா பச்சைக் கலர்லதான் இருக்கும். சேப்பு கலர்ல மூக்கு இருக்கும்
//நண்பர் ஆயில்யன் உபயோகமாக ஒரு சுட்டி கொடுத்தாரு. இன்னும் பல தகவல்கள் சேகரித்து தர்றேன்னும் சொல்லியிருக்காரு..
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)))
//ஊர் உலகத்துல யாரும் வைக்காதஹ் பேரு. முருகேசன்னு வச்சிக்கோங்கன்னு சொல்றார் ஒருத்தர்.
"தம்பி" அண்ணனின் பதிலை,
ரசித்தேன்
பின்
சிரித்தேன் :-)
//
ஒருத்தர் வெட்டி ஆபிஸர் நான்னு ஸ்டேடஸ் போட்டிருந்தார். கேள்வி கேட்டதும் ஆள் எஸ்கேப்.. ஆஃப்லைன் போயிட்டாரு
//
ஹலோ நான் பதில் சொல்லிட்டுதான் எஸ்கேப் ஆனேன்
இது கிளி மாதிரியும் இருக்கு புறா மாதிரியும் இருக்கு 'காக்டெயிலோ' அப்பிடீன்னு
சாட் ஹிஸ்டரிய கொஞ்சம் பாருங்க அம்மிணி.
நான் எஸ்கேப்பானதுக்கு காரணம் வேற இந்த 'சப்பை' மேட்டர்கெல்லாம் நாங்க 'எஸ்' ஆக மாட்டோம்.
இப்படிக்கு
வெட்டி ஆப்பீசர்
Post a Comment