Monday, January 14, 2008

பொங்கல் பொங்குது பலவிதமாய்

வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் நம் பாரத தேசத்தில் பொங்கல் பண்டிகை பல விதமான பெயர்களுடன் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் உழவர் திருநாளாய், சூரியனுக்கும், மாட்டிற்கும் நன்றி சொல்லும் திரு நாளாய் கொண்டாடுகிறோம்.


ஆந்திரா, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் "மகர சங்கராந்தி" எனும் பெயரில் கொண்டாடுகிறார்கள்.

சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு (தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு) பிரவேசிக்கும் நாளை மகர சங்கராந்தி என்று அழைத்து கொண்டாடுகிறார்கள்.


சூரியனின் இந்த பிரவேச காலம் 'உத்தராயணம்" என்றழைக்கப்படுகிறது. (உத்தரம்- வடக்கு.) மகாபாரதத்தில் அர்ஜுனனின் அம்புபடுக்ககயில் இருந்த பீஷ்மர் உயிர் நீத்தது இந்த புனித காலத்தில் தான். இந்த உத்தராயனம் புண்யகாலம் என்றே அழைக்கப்படுகிறது.


ஆந்திரா மற்றும் சில மாநிலங்களில் "மகர சங்கராந்தி" தனுர் மாதத்தின் (மார்கழி) முடிவாக கொண்டாடப்படுகிற்து. தனுர் மாதத்தில் சுப காரியங்கள் விலக்கி வைப்பார்கள். சாண உருண்டையில் பூவைத்து கோலத்தின் நடுவே வைப்பதே "கொப்பிம்மலு" (GOBBIMMALU). இது வைப்பதால் வீட்டிற்க்கு சுபிக்க்ஷம் ஏற்படுவதாக நம்பிக்கை.

வடநாட்டில் பட்டம் விடுவது வழக்கம். குஜராத்தில் இந்த வருடம் சர்வேதச பட்டம் விடும் போட்டி நடந்தது கொண்டிருக்கிறது.




சர்க்கரை பொங்கல் செய்து, கரும்புடன் சூரியனுக்கும் மாட்டிற்கும் படைத்து
தமிழ் நாட்டில் கொண்டாடுவது போல், எள்ளுருண்டையில் இனிப்புகள் செய்து கர்நாடக, மஹாரஷ்டிர மக்கள் இறைவனுக்குப் படைத்து உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வர்.
பஞ்சாபில் "லோகிரி" எனும் பெயரில் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
எந்த வகையில் சாப்பிட்டாலும் இனிப்பு இனிப்புதான். அது போல கொண்டாடும் வழிமுறை வேறாக இருந்தாலும் பொங்கல் பண்டிகை அனைவருக்கும் மகிழ்வைதருகிறது.
அனைவருக்கும் இனிய "பொங்கல்"," மகர சங்கராந்தி" மற்றும் "லோகிரி" நல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஆஷிஷ் & அம்ருதா.

4 comments:

said...

வாழ்த்துக்கள் அண்ணா, அக்கா, அங்கிள், ஆன்ட்டி

said...

குட்டீஸ் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

said...

நன்றி பவன் செல்லம்.

said...

சீனா அங்கிள்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்.