Tuesday, January 29, 2008

புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த‌ளிக்கவேண்டாம்!!!

தெரிந்து கொண்டே ஆகவேண்டிய உயிர்காக்கும் முக்கிய குறிப்புகள் - by அனுராதா

வருமுன் காப்போம்! புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த‌ளிக்கவேண்டாம்!!!

ஆம் நாம்தான் நமது உடலின் புற்றுநோய் கிருமிகளுக்கு அவற்றிற்கு பிடித்த விதவிதமான விருந்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.

a. சர்க்கரை ‍ கேன்சர் கிருமிகளின் கொடை வள்ளல்
சர்க்கரையை ‍ நிறுத்துவோம். கேன்சர் கிருமிகளை ‍ பட்டினி போடுவோம். (அவ்ளோதாங்க) அதற்கு பதிலாக தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை உபயோகப்படுத்துவது ரொம்பவும் நல்லது. முயற்சி செய்து பாருங்களேன்.

b. உப்பு
ஆமாங்க இதுவும்தான். டேபிள்சால்ட் எனப்படும் உப்பை வெள்ளையாக்க கலக்கப்படும் கெமிக்கல் வேறென்ன அதுவும் கெடுதல்தான். (ஏங்க உப்புன்னா வெள்ளையாத்தானங்க இருக்கும் அதுவுமா‍ ங்கற உங்க கேள்வி புரியுது. அதுவுந்தாங்க). உப்பில்லா பண்டம் குப்பையிலே னு நம்ம பெரியவங்க சும்மா இருக்காம சொல்லி வச்சுட்டு போய்ட்டாங்க. அப்புறம் எதைத்தான் சாப்பிடறதுன்னு தானே கேக்கறீங்க. நம்மகிட்டதான் கைவசம் கடல் உப்பு இருக்கே. அதாங்க கிலோ 2 ரூபாய்க்கு கிடைக்குமே அதேதான்.

c. ‍ பால்
வெள்ளையா இருக்கற எதையுமே தொடமுடியாது போல இருக்கே. என்னங்க பண்றது. கேன்சர் கிருமிக்கு தேவையான Mucus எனப்படும் முக்கியமான விஷயம் பால்‍-ல கொட்டிக்கிடக்கு. அதனால பாலுக்கு பதிலாக இனிப்பில்லாத சோயாபால் எடுத்துக்கறது பெட்டர்.

d. அசைவம்
இல்லை எனக்கு அசைவம் இல்லாத சாப்பாடு யோசிக்கவே முடியாதுன்னு நினைக்கறவங்க மீன், கொஞ்சமே கொஞ்சம் கோழி சேத்துக்கோங்க. எதுக்கும் அசைவம் இல்லாம சாப்பிட்டு பழகுங்களேன். உங்களால் முடியாதா என்ன?

e. உங்க சாப்பாடுல 80% காய்கறிகள் (அது கறி இல்லைங்க காய்கள் மட்டும்தான்), காய் ஜூஸ், தானிய பருப்பு வகைகள், கொஞ்சமா பழ வகைகள் இருக்கற மாதிரி பாத்துக்கோங்க.

மீதி 20% வேகவைக்கப்பட்ட உணவு வகைகள் எடுத்துக்கோங்க. உடலில் ஆரோக்கியமான அணுக்கள் வளர காய்கறி ஜூஸ் ரொம்ப முக்கியம்.பச்சைக் காய்கறிகள் 2,3 தடவை எடுத்துக்கோங்க. தப்பில்லை. ஆனா அதையும் நல்லா கழுவிட்டு சாப்பிடுங்க.

f. காபி, டீ, சாக்லெட் ‍ பெரிய டாடா (பிர்லா, அம்பானி கூட) சேர்த்து சொல்லிடுங்க.

கிரீன் டீ பிடிக்கும்னா எடுத்துக்கோங்க. கேன்சர் வராம தடுக்க உதவும்.

g. தண்ணீர் ‍ இதுகூடவா? அதானே கேள்வி. ஆமாங்க. அதுவும்தான்.
நல்லா சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மட்டும் குடிங்க.

அசைவ உணவு வகைகள் ஜீரணம் ஆகறது கொஞ்சம் லேட் ஆகும் அதோட இல்லாமல் ஜீரண உறுப்புகளுக்கு நிறைய வேலை குடுக்கறதால நம்மல மாதிரிதான் வேலையை பெண்டிங் வச்சிடும். அந்த மாதிரி மிச்சமாகிற உணவு வகைகள் கேன்சர்க்கு ரொம்ப வசதி.

கேன்சர் கிருமிகளோட மேற்புறத்தோல் ஒரு கடினமான புரோட்டின் கவர் இருக்கு. நம்ம அசைவம் கம்மியா சாப்பிடறது இல்லை சாப்பிடாம இருக்கறது மூலமா நோய் எதிர்ப்பு கிருமிகளை நேரா இந்த கேன்சர் கிருமிகளோட போராட டைம் குடுக்கறோம். இதுனால கேன்சர் கிருமிகளை அழிக்கறது ஈஸியா இருக்கும்.

மத்தபடி மினரல்ஸ் (மினரல் வாட்டர் இல்லைங்க), விட்டமின்ஸ் இதெல்லாம் டாக்டர் ஆலோசனையோட எடுத்துக்கறது நம்ம உடம்பில் இருக்கற போராட்ட குணமுள்ள கிருமிகள் வளர நல்லது. அப்புறம் இந்த போர் வீரர்கள் கேன்சர் கிருமிகளை கவனிச்சுப்பாங்க.

இதெல்லாம் விட கேன்சர்‍ன்றது உடம்பு, மனசு சம்பந்தப்பட்ட விஷயம். கொஞ்சம் முன்னெச்சரிக்கையும், நிறைய பாசிட்டிவாவும் இருக்கறது கேன்சர் எதிர்த்து போராட பெரிய பலம் குடுக்கும்.

நிறைய கோபம், பிடிவாதம், எல்லார் மேலயும் வெறுப்பு இருந்தா என்னங்க பண்ணப்போறோம்? இதுனால நம்ம உடம்புல ஒரு தீவிர தன்மை உருவாகறது கேன்சர்க்கு ரொம்ப செளகரியமா இருக்கும். அதனால வாழ்க்கையா ரொம்ப லைட்டா எடுத்துக்கோங்க. சாதாரணமா இருங்க. எதுக்கும் ஓவரா ரியாக்ட் பண்ணாதீங்க. சந்தோஷமா இருங்க.

நம்ம உடம்புல ஆக்ஸிஜன் சரியான அளவுல இருக்கும் போது கேன்சர் அண்டாது. அதுனால உடற்பயிற்சி செய்யறதும், மூச்சுப்பயிற்சி செய்யறதும் ஆக்ஸிஜன் அளவை சரியா வச்சுக்க உதவி செய்யும். ஆக்ஸிஜன் தெரபி‍னு வந்திருக்கற புது வழியும் நல்லதுதான்னாலும் நம்ம கைவசம் வெண்ணையை வச்சிக்கிட்டு எதுக்கு அலையணும்.

யோகா செய்ங்க, நிறைய நடங்க, புது நண்பர்கள், மனசு விட்டு பேசுங்க.

அவ்ளோதான். போயே போச்செல்லாம் இல்லை. வராமலே தடுத்திடலாம் கேன்சர் நோயை. என்ன சொல்றிங்க.

சில முக்கியமான விஷயங்கள்: பெரிய நோ நோ

1. மைக்ரோ வேவ்ல பிளாஸ்டிக் பாத்திரங்கள் கண்டிப்பா வேண்டாம்
2. தண்ணீர் பாட்டிலை ஃப்ரீஸரில் வைக்க வேண்டாம்
3. பிளாஸ்டிக் பேப்பர் சுத்தி மைக்ரோவேவ் ல எதுவும் வைக்கவேண்டாம்

பிளாஸ்டிக்கு பதிலா ஓவன்க்குன்னே விக்கற பாத்திரங்கள் யூஸ்
பண்ணிக்கோங்க.

இதெல்லாம் நம்ம நல்லதுக்கு தானேங்க...

வருமுன் காப்போம்!

4 comments:

said...

:) அதுக்குள்ள ஆட்டைய போட்டுட்டீங்களா.

சூப்பர்..

நன்றி!

said...

எங்க வேலையே அதானெ அங்கிள், நீங்க சொல்லாம இருந்திருந்தா கூட காப்பி அடிச்சி இருப்போம்.

said...

நன்றி.. (மெதுவா காதோட தான் சொன்னேன்)

said...

நல்லது சொல்லியுள்ளீர்கள்; முயல்கிறேன்.