Friday, January 25, 2008

கியூபா - ஃபிடல் - The Motor Cycle Diaries - எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா

வாழ்க கியூபா! வாழ்க பிடல் காஸ்ட்ரோ! Posted by லக்கிலுக்

கியூபா பல தீவுகளை இணைத்த ஓர் குடியரசு ஆகும். வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவுக்கும் பகாமாசுக்கும் தெற்கிலும், மெக்சிகோவுக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது.

தலைநகரம்: ஹவானா
அதிபர்: ஃபிடல் காஸ்ட்ரோ
பரப்பளவு: மொத்தம் 110,861 கி.மீ.² (105வது)42,803 ச.மைல்
மக்கள்தொகை : 2006 மதிப்பீடு 11,382,820 (73வது)
நாணயம் : கியூபா பீசோ (CUP)
இணைய குறி: .cu
தொலைபேசி: +53

பிடல் காஸ்ட்ரோ 1959 இல் புரட்சியை வழிநடத்தி ஃபுல்ஜெனிசியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்திப் பிரதம மந்திரி பதவியைப் பெற்ற காஸ்ட்ரோ 1976 இல் குடியரசுத் தலைவராய் பதவியேற்றார். கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சோசலிசக் குடியரசாக்கினார்.

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜுன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) ஆர்ஜன்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார்.

The Motorcycle Diaries (Spanish: Diarios de motocicleta) is an autobiographical book by the great revolutionary Che Guevara about his travels through South America with his friend Alberto Granado on a 1939 Norton 500 motorcycle. Born into an upper middle class family, this was Guevara's first expedition around Latin America. In the book, he details the role and life of the indigenous peasantry throughout Latin America, including mine workers and persecuted communists fleeing their homes. The book ends with a declaration by Che of his willingness to fight and die for the cause of the proletariat in Latin America.

THIS IS NOT THE TALE OF IMPRESSIVE DEEDS IS A PIECE OF TWO LIVES TAKEN IN A MOMENT WHEN THEY WERE CRUISING TOGETHER ALONG A GIVEN PATHWITH THE SAME IDENTITY OF ASPIRATIONS AND DREAMS Ernesto Guevara de la Serna,

The Plan: To travel 8 thousand kilometers in four months
The method: Improvisation
Objective: Explore the Latin American continent that we only know by books motorcycle diaries
Equipment: "La Poderosa" (The Powerful)
The Pilot: Alberto Granado
A chubby friend, 29 years old and biochemist
self proclaimed scientific vagabond
The Pilot's dream: crown the trip with he's 30th birthday
Copilot: That would be me Ernesto Guevara de la Serna "El Fuser", 23 years old

சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

http://www.marxists.org/archive/guevara/works.htm
http://www.marxists.org/archive/guevara/biography.htm

இதயும் பாருங்க :
கியூபாவின் மனிதாபிமானம்
காஸ்ட்ரோ கவுண்ட்-அப்

4 comments:

said...

சுட்டு கொடுத்ததற்கு நன்றிகள்!

said...

'சுட்டி' குடுங்கப்பான்னா

'சுட்டு' குடுக்கறீங்களே!!

said...

பதிவுக்கும் சுட்டிகளுக்கும் நன்றி!!
:)

said...

அச்சச்சோ... விரல் தவறிடுச்சு மங்களூர் சிவா :)