Saturday, January 5, 2008

கம்ப்யூட்டர் பாகங்கள் மற்றும் கம்ப்யூட்டர் அசெம்பிள் பற்றி.

கம்ப்யூட்டர் பாகங்களின் ஒரு அறிமுகம்

கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வதற்கு முன்னதாக ஒரு கம்ப்யூட்டரில் உள்ள பாகங்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

மதர்போர்டு:
CPUவில் எல்லா பாகங்களும் இணைக்கப்படும் அடிப்படையான சர்க்யூட் போர்டு. எல்லாவற்றிற்கும் தாய். தாயைப் போலவே ஊமையாக உழைக்க வேண்டும். கம்ப்யூட்டர் தலைமைச் செயலகமான ப்ராஸஸர், பல்வேறு ப்ரோக்ராம்களை ஒரே சமயத்தில் திறக்க உதவும் மெமரி ஆகியவை இதன் மடியில் தான் தாலாட்டப்படுகிறது. உங்கள் கம்ப்யூட்டரைக் குறிப்பிடும் போது ப்ராஸஸர், ராம், ஹார்ட் டிஸ்க் பற்றியெல்லாம் பெருமையாக குறிப்பிடுவீர்கள். ஆனால் மதர் போர்டு?

மைக்ரோ ப்ராஸஸர்:
சுருக்கமாகச் சொன்னால் அரசன். முக்கியமான கணக்குகளைத் தானே போட்டு, எல்லாப் பாகங்களுக்கும் ஆணைகள் இட்டு செய்து முடிப்பவன்.

மெமரி (RAM):
ஓடிக்கொண்டிருக்கும் எல்லா ப்ரோக்ராம்களையும் ஞாபகத்தில் வைத்திருக்கும். அரசன் ஆணையிடும் போது தகவல்கள் அனுப்பும் மந்திரி. ஹார்ட் டிஸ்க்:
கருவூலம் அல்லது நூலகம் என்று சொல்லலாம். இன்றைய விண்டோஸ் யுகத்தில் ஹார்ட் டிஸ்க் இல்லாத கம்ப்யூட்டர் வைத்திருப்பவரை காதலி கூட சீண்ட மாட்டாள்! இதன் ஞாபகக் கொள்ளளவு ஒவ்வொரு இரண்டு வருடங்களில் இரட்டிப்பாவதாக கூறப்பட்டாலும். தற்போது அதைவிட வேகமாக கூடுவதாகத் தோன்றுகிறது. கம்ப்யூட்டரில் உள்ள எல்லாப் ப்ரொக்ராம்களும் இந்த நூலகத்தில் தான் வைக்கப்படுகின்றது.

ப்ளாப்பி ட்ரைவ்:
ரொம்ப நாளாக (வருடங்களாக) கம்ப்யூட்டரில் மாறாமல் இருக்கும் ஒரே பாகம். உங்கள் கணக்குகளை கம்ப்யூட்டரிலிருந்து ப்ளாப்பியில் நகலெடுத்து பையில் வைத்துக் கொண்டு போகலாம். எல்லாக் கம்ப்யூட்டரிலும் போடும்படியாக இருக்க வேண்டும் என்பதால் இது மாறவே இல்லை. ஆனால் தற்போதைய அளவில் இதன் ஞாபகச் சக்தி மிகவும் குறைவு. ஆகவே கிட்டத்தல்ல இது வழக்கொழிந்த்து விட்டது என்றே சொல்லலாம்.


சிடி ட்ரைவ்:
ப்ளாப்பிக்கு கிட்டத்தட்ட சீப்பான மாற்றாக சிடி வந்துள்ளது. சாதாரண சிடி 675MB வரை கொள்ளும், விலையும் மிகக் குறைவு. வீட்டில் உபயோகிக்கும் சிடி ட்ரைவ்கள் சிடி-ரோம் ட்ரைவ்கள், அதாவது சிடியைப் படிக்க மட்டுமே முடியும் எழுத முடியாது. சிடியும் கூட ஒரு முறை எழுதினால் அழித்து எழுத முடியாது. ஆகவே ப்ரோக்ராம்களை விற்க வசதியான சாதனமாக உள்ளது. சினிமாக்களால் சிடியை அனைவரும் தற்போது அறிந்துள்ளனர்.

சிடி-ரோம் மட்டுமல்ல CD-W, CD-RW போன்ற வகைகளும் உள்ளன. CD-W(rite) ட்ரைவ் சிடியை எழுத உபயோகிக்கலாம். CD-RW (Rewrite) ட்ரைவில் சிடியை அழித்து மீண்டும் எழுதலாம். இதில் உபயோகிக்கும் சிடி சற்று வித்தியாசமானது, ஆனால் சாதாரண சிடி-ரோம் ட்ரைவில் உபயோகிக்க முடியும்.

மோடம்:
கம்ப்யூட்டரை டெலிபோனுடன் இணைக்கும் சாதனம். இதில் மற்ற பேக்ஸ் சாதனங்களுக்கு கம்ப்யூட்டரிலுள்ள பக்கங்களை பேக்ஸாக அனுப்பவும், பேக்ஸ் சாதனங்கள் அனுப்பும் பக்கத்தை பெறவும் முடியும். இண்டர்நெட் வீட்டிற்கு வரும் வழி.

உங்கள் கம்ப்யூட்டரை நீங்களே அசெம்பிள் செய்ய Build a PC

 PCபாகங்கள் வாங்குதல்:

உங்கள் தேவை மற்றும் வசதிக்கேற்ப கம்ப்யூட்டரில் அமைக்கப் போகும் பாகங்களைத் தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் அவற்றின் விலைகள். தற்போது போட்டி காரணமாகவும், மிக எளிதில் கிடைப்பதாலும் விலைகள் பெரும்பாலும் சரியானவையாகவே இருக்கின்றன. எனினும் விலையை விட, விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் சுறுசுறுப்பை முக்கியமாக கவனித்து வாங்குதல் நல்லது. வாங்கும் பாகங்களுக்கு எவ்வளவு காலம் வாரண்டி என்பது போன்ற விபரங்களை தகுந்த அத்தாட்சியுடன் பெற்றுக் கொள்வது நல்லது.

பாகங்களை வாங்குமுன் நீங்கள் வைத்திருக்கும்/செய்யவிருக்கும் கம்ப்யூட்டருக்கு அது ஒத்துப் போகுமா என உறுதி செய்து கொள்ளவும். ஒரு கம்ப்யூட்டருக்கு வேண்டிய எல்லாப் பாகங்களும் ஒன்று சேர்த்த பின்னரே அசெம்பிள் செய்யத் தொடங்குவது, அதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் விரைவாகக் களைய உதவும். முக்கியமாக கம்ப்யூட்டருக்கு கிடைக்கும் மின்சக்தி சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள ஸ்டெபிலைஸர் அல்லது UPS அவசியம் தேவை.

தயாராகுதல்:
கம்ப்யூட்டரில் அசெம்பிள் செய்யப் போவது CPU எனும் பெட்டியை மட்டும் தான். மற்ற பாகங்களான மானிட்டர், கீஃபோர்ட், மௌஸ் முதலியவற்றை வாங்கி அப்படியே இணைக்க வேண்டியது தான். அசெம்பிள் செய்யும் போது சர்க்யூட் போர்டுகளைக் கையாள வேண்டியிருப்பதால் நம் கையில் (தலைமுடியைக் கோதுதல், உல்லன் பேன்ட் முதலியவற்றில் கையைத் துடைத்தல் முதலியவற்றால்) ஏற்படக்கூடிய ஸ்டேடிக் மின்சாரத்தை முதலில் எர்த் செய்ய வேண்டும். ஜன்னல் அல்லது இரும்பு மேஜைக்கால்களைத் தொட்டு எர்த் செய்யலாம். கையில் ஸ்டேடிக் மின்சாரத்தை எர்த் செய்யவென்றே உபயோகிக்கப்படும் கைப்பட்டையை முடிந்தால் அவசியம் பயன்படுத்தவும்.

அசெம்பிள் செய்ய உபயோகிக்கப்படும் மேஜை மரத்தாலனவையாக இருத்தல் நலம். மேஜை மீது பாலியஸ்டர் போன்ற துணிகளையோ அல்லது ப்ளாஸ்டிக் திரைச்சீலைகளையோ கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. சர்க்யூட் போர்டுகளில் இணைக்கும் பகுதிகளில் உள்ள செம்புப் பட்டைகளை எக்காரணம் கொண்டும் கையால் தொடக்கூடாது.

அசெம்பிளிங்:
CPUவில் எல்லா கருவிகளுக்கும் இணைப்புப் பாலமான 'மதர் போர்டை', கேபினட்டில் உள்ள பேஸ் ப்ளேட் டை எடுத்து அதிலுள்ள துளைகளுக்கு நேராக அத்துடன் கொடுக்கப்பட்ட ப்ளாஸ்டிக் ஆணிகளை உபயோகித்து ந ଡ଼'அ4லைபெறச் செய்ய வேண்டும். இதன் பின்னரே ப்ராஸஸர், மெமரி (RAM) உட்பட தேவைப்படும் பாகங்களை முறைப்படி இணைக்க வேண்டும். இந்த இணைப்பு முறைகள் தொழில்நுட்பம் மாறும் போது அவ்வப்போது மாறி வருவதால் அந்த பாகத்துடன் வரும் மானுவலைப் படித்து பார்த்து அதன்படி இணைக்கவும். முக்கியமாக மதர்போர்டில் செய்ய வேண்டிய செட்டிங்குகள் இருக்கின்றனவா என்று மதர்போர்டு மானுவலைப் பார்க்கவும்.

பயாஸ் செட்டிங் (BIOS‍ Settings):
அசெம்பிளிங் முடித்து, மானிட்டர், கீஃபோர்ட், மௌஸ் போன்றவற்றை CPU உடன் இணைத்து கம்ப்யூட் டர் தயாரானபின், தகுந்த பவர் சப்ளை அளித்து கம்ப்யூட்டரை உயிர்ப்பிக்கவும். திரையில் அது செல்ப் செக்கிங் வேலைகளை முடித்து ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் காணோம் என்பது போன்ற தகவலைச் சொன்னால் உங்களைத் தட்டிக் கொடுத்துக் கொள்ளவும். உங்களுடைய கம்ப்யூட்டரை நீங்களே அசெம்பிள் செய்து விட்டீர்கள்.

கம்ப்யூட்டரில் உள்ள பாகங்களின் விபரங்களை பயாஸ் பெரும்பாலும் தானாகவே குறித்துக் கொள்ளும். இருந்தாலும் மதர்போர்ட் மானுவல் உதவியுடன் நிச்சயித்துக் கொள்வது நலம்.

பின்னர் ஹார்ட் டிஸ்க் பார்மாட், ஆப்பரேடிங் சிஸ்டம் லோட் செய்தல் என்று மென்பொருள் வேலை தான் பாக்கி.

தகவல் உதவி : களஞ்சியம்.காம்

8 comments:

said...

Hardware/System Admin பத்தி ஒரு தொடர் போட இருக்கிறோம். அந்த நேரத்தில் இந்தப்பதிவு ஒரு முன்னுறையாக இருக்கும்.
மேலும் ஒரு துளி

http://www.youtube.com/watch?v=41sq0RnPjeQ

said...

@ இளா..
போடுங்க போடுங்க.. ஆவலா கத்துட்டு இருக்கோம்.

said...

சஞ்சய்
உருப்படியாஒரு போஸ்ட்

:)

said...

//மங்களூர் சிவா said...

சஞ்சய்
உருப்படியாஒரு போஸ்ட்

:)//
அப்டியா... இருக்கக் கூடாதே...:)

said...

சஞ்செய் - நல்லதொரு பதிவு - ஆனா கம்பியூட்டர் அசெம்பிள் பண்ணறதுக்கு இப்பதிவு உதவலாமே தவிர - இந்த அறிவு மட்டும் போதாது. யாராச்சும் பசங்க இதப் படிச்சுட்டு நானும் பண்றேன்னு ஆரம்பிக்கப் போறானுங்க -பாத்துக்கங்க - இல்லையா சிவா

said...

//cheena (சீனா) said...

சஞ்செய் - நல்லதொரு பதிவு - ஆனா கம்பியூட்டர் அசெம்பிள் பண்ணறதுக்கு இப்பதிவு உதவலாமே தவிர - இந்த அறிவு மட்டும் போதாது. யாராச்சும் பசங்க இதப் படிச்சுட்டு நானும் பண்றேன்னு ஆரம்பிக்கப் போறானுங்க -பாத்துக்கங்க - இல்லையா சிவா
//

இது வெறும் அறிமுகம் தான் தாத்தா.. ஆழமான வழிகாட்டி அல்லது கைய்யேடு அல்ல. :)

said...

நல்லதொரு பயன் தரக்கூடிய பதிவு. ஆங்கில வார்த்தைகளுக்கு முடிந்தவரை தமிழில் மொழிப்பெயர்த்து அடைப்புக்குள் ஆங்கில வார்த்தைகளை இட்டிருக்கலாம்.

கணினி என்ற சொல் பரவலாக எல்லோராலும் அறியப்பட்டுள்ள ஒரு சொல் ஆதலால் அதையே பயன்படுத்தவெண்டும்.

இனி வரும் உங்கள் பதிவுகளில் ஆங்கில வார்த்தைகளை குறைத்து முடிந்த வரை தமிழில் எழுதுமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.

said...

//மஞ்சூர் ராசா said...

நல்லதொரு பயன் தரக்கூடிய பதிவு. ஆங்கில வார்த்தைகளுக்கு முடிந்தவரை தமிழில் மொழிப்பெயர்த்து அடைப்புக்குள் ஆங்கில வார்த்தைகளை இட்டிருக்கலாம்.

கணினி என்ற சொல் பரவலாக எல்லோராலும் அறியப்பட்டுள்ள ஒரு சொல் ஆதலால் அதையே பயன்படுத்தவெண்டும்.

இனி வரும் உங்கள் பதிவுகளில் ஆங்கில வார்த்தைகளை குறைத்து முடிந்த வரை தமிழில் எழுதுமாறு வேண்டுகோள் வைக்கிறேன்//

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி மஞ்சூர். இனி வரும் பதிவுகளில் நீங்கள் சொல்வது போலவே செய்கிறோம். வலைப்பூவின் மேல் இடது பக்கத்தில் எங்கள் திட்டம் இருக்கு. நீங்களும் உதவலாம். முயற்சி செய்யுங்களேன்.