Tuesday, November 27, 2007

அப்பாவுக்கு தப்பாம பொறந்திருக்காங்க.

எனக்கு ரொம்ப நாளா ஒரு பலமொழியில உடன்பாடு இல்ல. ( ஓய் யாரது.. நம்பாதிங்க நம்பாதிங்கனு உண்மைய சொல்றது? :( )
அதாவது
"நூல போல சேல..தாய போல புள்ள".

எனக்கு தெரிஞ்சி நெறய புள்ளைங்க தாய போல இருக்கிறதில்ல.அப்பா மாதிரி தான் இருக்காங்க. அப்புறம் எதுக்கு இந்த பலமொழி வந்ததுனு பிரிட்டனை சேர்ந்த சில மருத்துவ நிபுணர்கள் கிட்ட பேசிட்டிருக்கும் போது கேட்டிருந்தேன். அவங்களும் மெனக் கெட்டு ஆராய்ச்சி பண்ணி நான் சொன்னது சரி தான்னு நிருபிச்சிருக்காங்க. அப்பா சமத்தா இருந்தா குழந்தயும் சமத்தா இருக்கும். அப்பா ஓவர் அழிச்சாட்டியம் பண்ணா குழந்தயும் அப்படியே தான் செம அராஜக பார்ட்டியா இருக்குமாம். எனக்கு தெரிஞ்ச நெறய உதாரணக் குழந்தைகள் இருக்காங்க. அவங்க எல்லாரயும் உங்களுக்கு தெரியாது என்பதால் உங்களுக்கு தெரிந்த சில உதாரண குழந்தைகளை இங்கு அறிமுகப் படுத்த விரும்புகிறேன்.

1. நம்ம நிலா - செம அராத்து.
அவங்க அம்மா படு சமத்து. அநியாயத்துக்கு அப்பிராணி. சத்தம் போட்டு பேசக் கூட மாட்டாங்க. ஆனா அவங்க அப்பா பாருங்க. அவர பத்தி நான் எதும் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

2. நம்ம அம்முவாகிய நிஷாலினி - பயம் கிலோ என்ன விலைனு கேக்கர ஆளு.
அவங்க அம்மா ரொம்ப பயந்த சுபாவம். அவங்க அப்ப எப்போவாச்சும் வெளியூர் போனா, அம்முவோட அம்மா அம்முவோட தாத்தா வீட்டுக்கு போய்டுவாங்க. வீட்ல தனியா இருக்க பயம். ஆனா நம்ம அம்மு பாருங்க பல்லி கால ஒடைக்கிறதுல ஆரம்பிச்சி கரப்பான் பூச்சிய பயமுறுத்தறது வரைக்கும் கொஞ்சமும் பயமில்லாம செய்வா. அவங்க அப்பா இருக்காரே. நடுக் கடல்ல தனியா குதிச்சி மீன் முள்ளால நெஞ்சில வீரத் தழும்போட உலா வர்ரார்.

3.நம்ம அண்ணாச்சி பவன் - வருங்கால மாவீரன்..
எதயும் புடிக்காம சைக்கிள் மேல ஏறி தனியா நிக்கறான். எதுனா மனசுல கொஞ்சமாச்சும் பயம் தெரியுதா பாருங்க. அவங்க அப்பா பன்ற இம்சைக்கு கொஞ்சமும் சளைக்காதவன்.

4. நம்ம அப்பு @ அப்ரா - சமத்து பைய்யன்.( என்ன மாதிரியே )
அவன் இருக்கிற இடம் தெரியுதா பாருங்க. தான் உண்டு தன் வேலையுண்டு. அவ்ளோ அப்பாவியா சமத்தா இருக்கான். நிச்சயம் அவங்க அப்பா மாதிரி தான் அவன் இருக்கனும். ஏன்னா அவங்க அம்மாவுக்கும் சமத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் சொல்லுங்க?:P

இப்போ சொல்லுங்க.தாயைப் போல பிள்ளையா இல்ல அப்பாவுக்கு தப்பாம பொறக்குறாங்களா சாரி வளர்கிறார்களா?

14 comments:

Baby Pavan said...

ஜுப்பரு ஜுப்பறு

Baby Pavan said...

நான் தான் பர்ஸ்ட்டா....

இம்சை said...

அப்பா ஓவர் அழிச்சாட்டியம் பண்ணா குழந்தயும் அப்படியே தான் செம அராஜக பார்ட்டியா இருக்குமாம். எனக்கு தெரிஞ்ச நெறய உதாரணக் குழந்தைகள் இருக்காங்க.

அண்ணெ நாங்க தான் இன்னைக்கு டார்கெட்டா...

Anonymous said...

என்ன கொடும சார்

MyFriend said...

ஹாஹாஹா.. பதிவ்வு சூப்பர் பொடியன் அங்கிள்..

பல வருடமா ரிசேர்ச் பண்ணியிருப்போங்க போல?;-)

Sanjai Gandhi said...

//
Baby Pavan said...

ஜுப்பரு ஜுப்பறு//

தேங்ஸ்பா.. :)

Sanjai Gandhi said...

//இம்சை said...

அப்பா ஓவர் அழிச்சாட்டியம் பண்ணா குழந்தயும் அப்படியே தான் செம அராஜக பார்ட்டியா இருக்குமாம். எனக்கு தெரிஞ்ச நெறய உதாரணக் குழந்தைகள் இருக்காங்க.

அண்ணெ நாங்க தான் இன்னைக்கு டார்கெட்டா...//

பின்ன.. அன்னைக்கு நான் தாய்லாந்து போகும் போது எங்க மேல் வீட்டு பொண்ணு எனக்கு பொக்கே குடுத்து விஷ் பண்ணி அனுப்பி வச்சது. நீங்க யார்னா ஒரு பிட் நோட்டிஸாச்சும் ஒட்டினிங்களா? இல்ல வரும் போது மாலை,கட் அவுட், போஸ்டர்னு எதுனா அமர்க்களம் பண்ணிங்களா? நான் உங்க கிட்ட எல்லாம் சொன்னேனா என்ன? எனக்கு விளம்பரம் பிடிக்காதுனு. ;( . அதான் ஆத்திரத்த காட்டிட்டேன். சாரி கொட்டிட்டேன். :((

Sanjai Gandhi said...

// அய்யனார் said...

என்ன கொடும சார்//

வாங்க அய்யானார் அங்கிள். நீங்க எந்த கொடுமைய சொல்றிங்க? இம்சை மாமாவோட அழிச்சாட்டியத்தயா? :)

Sanjai Gandhi said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

ஹாஹாஹா.. பதிவ்வு சூப்பர் பொடியன் அங்கிள்..

பல வருடமா ரிசேர்ச் பண்ணியிருப்போங்க போல?;-//

சூப்பருக்கு நன்னி.
பட் அங்கிள் சொன்னதுக்கு தலைல பவன் கையால குட்டவும் நிலா வாயால கடிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் அணு..அக்கா..ஆண்ட்டி..பெரியம்மா. :P

குசும்பன் said...

//அவங்க அப்பா பன்ற இம்சைக்கு கொஞ்சமும் சளைக்காதவன்.//

no no it is not true. இம்சை very good man like me:)))))

குசும்பன் said...

பொடியன்~ said...

பின்ன.. அன்னைக்கு நான் தாய்லாந்து போகும் போது எங்க மேல் வீட்டு பொண்ணு எனக்கு பொக்கே குடுத்து விஷ் பண்ணி அனுப்பி வச்சது.////

how ????? take care brother, all the best brother, once u reached call me brother , appadi than antha girl solli irukum:)) illai endralum solla vaipoom:)))

குசும்பன் said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
ஹாஹாஹா.. பதிவ்வு சூப்பர் பொடியன் அங்கிள்..///

not once more, 1000 times more..:))))

Sanjai Gandhi said...

//குசும்பன் said...

பொடியன்~ said...

பின்ன.. அன்னைக்கு நான் தாய்லாந்து போகும் போது எங்க மேல் வீட்டு பொண்ணு எனக்கு பொக்கே குடுத்து விஷ் பண்ணி அனுப்பி வச்சது.////

how ????? take care brother, all the best brother, once u reached call me brother , appadi than antha girl solli irukum:)) illai endralum solla vaipoom:)))
//

அட நீங்க வேற... அண்ணானு சொல்லி இருந்தாலும் பரவால்ல... அது வேற ஒரு வார்த்டை சொல்லிதான் பேசும். எல்லாம் இந்த மை பிரண்ட் பன்ற வேல. :(
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :((

( ஒருத்தன் கொஞ்சம் பில்ட் அப் குடுக்க விட மாட்டிங்களெ :( )

Sanjai Gandhi said...

//குசும்பன் said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
ஹாஹாஹா.. பதிவ்வு சூப்பர் பொடியன் அங்கிள்..///

not once more, 1000 times more..:))) //
இந்த பதிவு சூபப்ர்னு சோன்னதுக்கு 1000 Time More கேட்டதுக்கு ரொம்ப தேங்ஸ்ணா :P.