என்ன வரையலாம்? சரி, நிலா குட்டிக்கு பிடிச்ச மாதிரி ஒரு ஒட்டகச்சிவிங்கி வரையலாமா குட்டீஸ்களா??
குட்டீஸ்களா, ஓடிப்போய் ஒரு வெள்ளை பேப்பர், பென்சில், ரப்பர் மற்றும் கலர் பென்சில் எடுத்துட்டு வாங்க..
வந்துட்டீங்களா.. சரி, எப்படி வரைவதுன்னு முதல்ல பார்ப்போம்..
1- வளைவா ஒரு கோடு போட்டுக்கோங்க.. கொஞ்சம் லைக்ட்டா வரையுங்க. ஏனென்றால், பிற்றகு நாம் இந்த கோடை அழிச்சிடுவோம்..
2- அந்த கோட்டுக்கு மேலே ஒரு பெரிய வட்டம்மும் சின்ன வட்டமும் வரைங்க. பெரிய வட்டம் அதன் தலைக்கு, சின்ன வட்டம் அதன் வாய்க்கு.
3- ஓகே.. இப்போ ரொம்ப முக்கியமான கட்டம். இந்த படத்துல வரையப்படிருக்கிற மாதிரியே கோடை பெரிய வட்டத்து மேலேயும் சின்ன வட்டத்து மேலேயும் படும்படி வரையணும்.
4- உள்ளே வரையப்பட்ட கோடும், வட்டங்களையும் இப்போது அழிச்சிடுங்க குட்டீஸ்களா..
5- இப்போ வாங்க ஒட்டகச்சிவிங்கியின் காதுகளையும் கொம்பையும் வரையலாம்.
6- இப்போ அழகா கண்ணையும், மூக்கையும், வாயையும் வரைங்க பார்க்கலாம்.
7- இப்போதான் ஆட்டம் கலைக்கட்ட போகுது. உங்க இஷ்டத்துக்கு புள்ளி வச்சு கோலம் போடுங்க.. ஒட்டகச்சிவிங்கிக்கு நிறைய மார்க்ஸ் இருக்கும்ல..
8- இப்போ கலர் அடிக்கிற போட்டி.. பென்சில் கலர், க்ரயோன்ன்னு என்ன இருக்கோ ஆதை உபயோகிச்சு கலர் அடிங்க. இது எப்படி இருக்கு?
5 comments:
நானும் வரயுறேனே .......
i am the first wooooow!
fantastic ideas for drawing.
i tried it.
its really good idea.
cheenu munthiteengale :-((
அக்கா சூப்பரப்பு, நான் 2 நாள் நல்லா ஊர் சுத்தீட்டு இப்ப தான் வந்தேன்.
படம் நல்லா போட்டுஇருக்கீங்க ஆனா இம்சையால நீங்களும் பாதிக்க பட்டுடீங்களெ....கணக்கு தப்பா போச்சே
Post a Comment