இன்னைக்கு எங்க அம்மாக்கு பொறந்தநாளு சரின்னு நானும் அக்கா கிட்ட ஒன் வீக் முன்னயே சொல்லி நல்லா அருமையா வாழ்த்து ரெடி பண்ணி அனுப்ப சொன்னேன், எங்க அக்காவும் கஷ்டப்பட்டு என்னோட டேய்லி பிக்சர் பிலாக் எல்லாம் தேடி (http://pavanyear2pictures.blogspot.com/ & http://pavanyear1pictures.blogspot.com/ ) சூப்பர் படம் எல்லாம் போட்டு வாழ்த்து அனுப்பினாங்க.
http://kuttiescorner.blogspot.com/2007/12/birthday.html
பவன் அம்மாவுக்கு Birthday!!!
அப்புறம் அக்கா & எல்லா குட்டி பிரண்ட்ஸ் நாங்க எல்லாம் சேர்ந்து இனி குறும்பு பண்ணமாட்டோம்னு வெற உறுதி எடுத்து இருந்தோம்.
இதெல்லாம் பண்ணப்புறம் அம்மா பிறந்தநாள்க்கு ஒரெ பையன் எனக்கு ஒரு சின்ன சாக்லேட்டாவது குடுக்கனுமா இல்லயா.
ஆனா எங்க வீட்டில என்ன நடந்தது தெரியுமா, நேத்து என்ன 11:30PM க்கு தூங்க வெச்சிட்டு கேக் எல்லாம் வெட்டி சாப்பிட்டு இருக்காங்க. அது பரவால்ல மன்னிச்சிட்டேன், இம்சை அம்மாக்கு டிரெஸ் எடுத்து குடுத்தாரு அது கூட ஒகெ மன்னிச்சிட்டேன்.
அம்மா அவங்க பிறந்தநாள்க்கு இம்சைக்கு 3 சட்டை, சித்தப்பாக்கு 1 சட்ட எடுத்து குடுத்து இருக்காங்க ஆனா எனக்கு ஒன்னும் இல்ல.
இது எல்லாம் கூட சரின்னு பொறுத்துகிட்டேன் அட்லீஸ்ட் ஒரு சாக்லெட் வாங்கிகுடும்மான்னு கேட்டேன் அதுக்கு என்ன கோயில்க்கு கூட்டிட்டு போய் அங்க freeயா கிடைக்கிற லட்டு வாங்கி குடுத்து இதுதான் உனக்கு birthday பிரசன்ட் அப்படின்னு சொல்லறாங்க...
காலைல பிரேக்பாஸ்ட் கூட போடல எனக்கு இன்னைக்கு, அவங்க எல்லாம் மட்டும் ஓட்டல் போய் நல்லா மூக்கு முட்ட சாப்பிட்டாங்க.
நான் பசில அப்படியெ ஒரு புல் லட்டு அடிச்சிட்டேன்.
நீங்க எல்லாம் பாத்து இதுக்கு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க.
Wednesday, December 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
:-P
நல்ல வேளை. அல்வா கொடுக்கல. :-P
ம்ம்.. ஆனா எங்க சிங்கத்துக்கு இப்படி வெஜிடேரியனா லட்டு மட்டும் கொடுத்ததுக்காக குட்டீஸ் கார்ர்னர் குட்டீஸ்கள் Mr & Mrs இம்சையை வன்மையாக கண்டிக்கிறோம்.
கரேக்ட்டா பவன்? ;-)
வாழ்த்துகள் உன் அம்மாவுக்கு..ஆனாலும் சின்னப் புள்ளய இப்டி நீங்களும் இம்சையும் சேந்து புலம்ப விட்டுட்டீங்களே..இது நியாயமா?
த்சொ.. த்சொ..
இது பெருங்கொடுமையால்ல இருக்கு
பெருங் கொடுமை - பவனுக்கு இழைக்கும் கொடுமைக்குக் காரணமே இம்சை தான். பசங்களா - ரெடியா - கொடி பிடிப்போமா ??
Post a Comment