Sunday, December 16, 2007

127 வந்துட்டாங்கய்யா...வந்துட்டாங்க - எதிர் பதிவு

வந்துட்டாங்கய்யா...வந்துட்டாங்க ன்னு பதிவு போட்ட எங்க டீச்சர் பதிவுக்கு எதிர் பதிவு இது.

எங்க .:: மை ஃபிரண்ட் ::. அக்காக்காக ரொம்ப ஈசியான க்ளு...இந்த பதிவர் எல்லாம் யாருன்னு கண்ணுபிடிங்க...

1. நல்லவன், வல்லவன், நாலும் தெரிஞ்சவன்...அப்படீன்னு இவரு சொல்றத நம்பவா போறிங்க... இவரு யாரு

2. எல்லோரும் இன்புற்றிருப்பதொன்றை தவிர வேறொன்றும் யான் அறியேன் பராபரமே!! அப்படீன்னு சொல்பவர்

3. The eyes donot always see the truth. They just like us, are pre-judiced. சூரியனும் மறைக்குது நட்சத்திரங்களை.... என்று தத்துவம் சொல்ரவர்

4. ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......

5. தானும்,தன்னை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா

6.வந்தோமா..படிச்சோமா..கும்மி அடிச்சோமானு இருக்கனும்..சொல்லறவர்

7. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பவர்

8.ஏதோ ‍கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்கன்னு சொல்றவர்

9.ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் சொல்லி இருக்கார்

10. கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி இவர்

11. You've been invited to a fancy ball but the only thing you have to wear is an orange wooly jumper. What shoes do you wear?

12. My Message in a Bottle
The best kind of friend is the kind you can sit on a porch swing with, never say a word, then walk away feeling like it was the best conversation that you ever had.

13. எந்தநேரமும் உலாத்தல் தான் இவருக்கு

14. பிரிந்தும் பிரியாமல்சேர்ந்தே இருக்கின்றனகல்லூரி மரங்களில்சிற்பமாக...மறந்துவிட்டதாய் சொல்லிக்கொண்டுதினமும் எழுதப்படுகின்றனகடவுச்சொல்லாக...கடற்கரை காலடிச்சுவடுகளில்புதைந்துகிடக்கின்றன மறக்கப்பட்ட சத்தியங்களாக...தனித்த இரவுகளில்முகமூடி இழந்துவழிகின்றன கண்ணீராக...வலிகள் பல சுமந்தாலும்தினம் தினம் புதியதாய்பிறக்கத்தான் செய்கின்றதுகாதல், காதலாக..
இந்த கவிதய ரொம்ம்ப ரசிப்பவர்

15. உண்மைக்குச் செல்லும் வழி தனிமையானது .....

16. இவர பத்தி நானே என்னன்னு சொல்றது நீங்க தான் சொல்லணும் இவரு அருமை பெருமையெல்லாம்!!! அப்படீன்னு சொல்றவர்

17. இவர் ஒரு அப்பாவி சிறுமி.பொய்யைத் தவிர வேறு ஒன்றும் பேச தெரியாது.மொத்ததில் ரொம்ப அமைதியான பெண்.

18. பேரன்பும் மிகப்பேரன்பும் மட்டுமே கொண்டவர்

19. வாளும் வேலும் இவருக்கு இரு கண்கள்...போர்க்களம் என்பது இவரின் பொழுதுபோக்கு...

20.நாலு பொண்ணுங்கசந்தோசப்படறாங்கன்னா சைட் அடிக்கறதிலே தப்பே இல்ல அப்படின்னு அட்வைஸ் சொன்னவர்

தொடரும்

16 comments:

Baby Pavan said...

.:: மை ஃபிரண்ட் ::.அக்கா இதுக்கும் விடை தெரியாது சொல்லிடாதிங்க பிளிஸ்

நிலா said...

இது இது இதத்தான் எதிர்பாத்தேன்.

எங்க சங்கத்து சிங்கத்துக்கு பதில் சொல்லுங்க பெருசூஸ்

கண்மணி/kanmani said...

ஹேய் குட்டீஸ் இதென்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு.உங்கா குரு குசும்பரா அதேன் இப்படி எதிர் பதிவு போட்டு கெட்டுப் போறீங்க.ஓகே

4.தேந்சிறீல் அலெக்ஸ்
5.கண்மணி
6.வெட்டிப் பயல்
8.லக்கி
9.அபிஅப்பா
10.விவசாயி
16.டிபிசிடி
18.தம்பி
19.ஜி
20.ஜொள்ளு பாண்டி

நிலா said...

கண்மணி அத்தை, என்ன இது டீச்சரா இருந்துகிட்டு ஒன்னு ரெண்டு மூணு கூட சொல்ல தெரியல

சரி, நான் அத்தைக்கு சொல்லி தரேன். 4 க்கு முன்னாடி 1,2,3, இதெல்லாம் இருக்கு.

சரியா வீட்டுல எழுதி பழகிட்டு வந்து இங்க வந்து பாப்பாகிட்ட எழுதிகாட்டனும்.

இம்சை அரசி said...

2. CVR
4. ஜி.ரா
9. அபி அப்பா
16. இம்சை அரசி
17. துர்கா
19. ஜி
20. ஜொள்ஸ்

இதுக்கு மேல எனக்கு தெரியலை குட்டீஸ் :)))

இம்சை அரசி said...

8. லக்கி லுக்

MyFriend said...

இப்படி காப்பி பேஸ்ட் கேள்வி கேட்டா டக்க்ன்னு சொல்லிடுவோம்ல.. டீச்சர்தான் ட்வீஸ்ட் வைக்கிறேன்னு சொல்லி எல்லாம் மறைமுகமா கேட்டாங்க்.. அப்பாவி பொண்ணுக்கு எப்படி பதில் தெரியும்??? (அட நாந்தாங்க.. )

MyFriend said...

பதில் சொல்லலாம்ன்னு வந்தா நிறைய பேர் சொல்லிட்டாங்க.. நான் வேற போட்ட்டி நடத்துறவங்க லிஸ்ட்ல இருக்கேனா? அதனால் மத்தவங்க ட்ரை பண்ணட்டும்.. நான் ரசிக்கிறேண். ;-)

என்ன தம்பி சரிதானா?

Baby Pavan said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
பதில் சொல்லலாம்ன்னு வந்தா நிறைய பேர் சொல்லிட்டாங்க.. நான் வேற போட்ட்டி நடத்துறவங்க லிஸ்ட்ல இருக்கேனா? அதனால் மத்தவங்க ட்ரை பண்ணட்டும்.. நான் ரசிக்கிறேண். ;-)

என்ன தம்பி சரிதானா?

அக்கா 20க்கும் நீங்க சரியான பதில சொல்லாட்டி பெரிய ஆப்பு ஒன்னு உங்களுக்கு வைக்கப்படும்...

இப்ப கொஞ்சம் வெல இருக்கு ஈவ்னிங் வந்து சரியான விடை யாரு யாரு சொல்லீருக்காங்கன்னு சொல்லரேன்

Baby Pavan said...

இம்சை அரசி said...
8. லக்கி லுக்

தப்பு....

Baby Pavan said...

கண்மணி said...
4.தேந்சிறீல் அலெக்ஸ்

தப்பூ...

MyFriend said...

//Baby Pavan said...

அக்கா 20க்கும் நீங்க சரியான பதில சொல்லாட்டி பெரிய ஆப்பு ஒன்னு உங்களுக்கு வைக்கப்படும்...//

தம்பி நாமெல்லாம் ஒரு கட்சி.. நாம மாத்தவங்களுக்குதான் ஆப்பு வைக்கணும்.. நமக்குள்ள இல்ல. ;-)

MyFriend said...

1- நாட்டாமை ஷ்யாம்
2- விஞ்ஞானி சி.வி.ஆர்
3- கனவுலக நாயகன் ட்ரீம்ஸ்
4- மேட்டி ராகவன்
5- கண்மணி டீச்சர்
6- அண்ணாத்தே கே4கே
7- தமிழ் அறிஞர் TBCD அண்ணே
8- தங்க தலைவலி அனுசுயா
9- அபி & நட்ராஜ் அப்பா
10- விவசாயீஈஈஈஈஈஈ விவசாயி
11- இதுல நிறைய பேர் இருக்காங்க.. எனக்கு தெரிஞ்ச லிஸ்ட்ல இராம். :-)
12- கடல் வீரர் கணேசன்
13- கானா உலக பிரபா
14- நிலா ரசிகன்
15- தனிமையின் இசை அய்யனார்
16- இம்சைக்கே அரசி
17- மலேசிய மாரியாத்தா துர்கையம்மன்
18- பாவனா புகழ் தம்பி
19- சின்னண்ணே ஜீ
20- ஜொல்லு மன்னன் பாண்டி

MyFriend said...

தம்பி, அக்கா 20 பேரையும் வரிசைப்படுத்திட்டேன்.. இப்போ சொல்லு.. அக்கா எல்லாம் சரியா பதில் சொல்லியிருக்கேனா இல்லையான்னு. ;-)

G3 said...

மை பிரண்ட் சொன்னதுல 10-வது சரியான்னு தெரியல.

14-வது நிலா ரசிகன் கிடையாது. நம்ம கவிதாயினி காயத்ரி.

மீதி 1-9, 11-13, 15-20 மை பிரண்டோட ஆன்சருக்கு ரிப்பீட்டே :))

MyFriend said...

//G3 said...

14-வது நிலா ரசிகன் கிடையாது. நம்ம கவிதாயினி காயத்ரி. //

ஆஹா.. ரைட்டு.. கவிதை எழுதுனவரு நிலா ரசிகன். ரசிச்சது கவிதாயினி. கேள்வில கடைசி எழுத்த படிக்காம பதில் எழுதுனதுலால இந்த 'சின்ன' தவறு. ;-)