Friday, December 14, 2007

120. H2O

ஸ்கூல்ல டீச்சர் ஒரு தடவை என்னை நிக்க வச்சி ஒரு கேள்வி கேட்டாங்க.. அதுக்கு நான் சொன்ன பதிலை பார்த்து எல்லாரும் ஜோரா கைத்தட்டுனாங்க. சிலர் மூக்கு மேலே (அவங்க சொந்த மூக்குலதான்) விரலை வச்சி ஆச்சர்யப்பட்டாங்க. ஆனா, டீச்சர் மட்டும் டைட்டானிக் கப்பல் கவுந்த மாதிரி கன்னத்துல கைவச்சிக்கிட்டாங்க.. நான் பிற்காலத்துல பெருசா சாதிப்பேன்னு நெனச்சு கனவு காண ஆரம்பிச்சுட்டாங்க போல.. சரி.. அப்படி என்னத்தான் டீச்சர் கேட்டாங்க & நான் பதில் எழுதினேன்?

டீச்சர் கேட்ட கேள்வி: தண்ணீருக்கு இன்னொரு பேர் என்ன?

நான் சொன்ன பதில்:

H
I
J
K
L
M
N
O
என் க்ளாஸ்ல எப்போதும் நான் அறிவுப்பூர்வமா பதில் சொன்னா அதை கிண்டல் பண்றதுக்குன்னே ஒருத்தன் இருக்கான். கோபாலுன்னு பேரு. உடனே அவன் எழுந்திரிச்சு என்ன சொன்னான் தெரியுமா?
கோபாலு: இது சைன்ஸ் க்ளாஸ் இல்ல. H2Oன்னு பதில் சொல்றதுக்கு. இது இங்கிலீஸு க்ளாஸ்.
நான் விடுவேனா?
நான்: அதுனாலத்தான் H2Oன்னு ஃபார்முலா சொல்லாமல் இங்கிலீஸ் லெட்டர்ல பதில் சொல்லியிருக்கேன்.. கூட்டி கழிச்சு பாரு.. கணக்கு சரியா வரும்.. ;-)
டீச்சர் கண்டிப்பா இப்படிப்பட்ட ஸ்டூடண்ட் கிடைச்சதுக்கு ரொம்ப பெருமை பட்டிருப்பாங்கல்ல? நீங்களே சொல்லுங்க மக்களே.. :-)
பி.கு: பவன் தம்பி மட்டும்தான் எதிர்ப்போஸ்ட் போடுவானா? நாங்களும் போடுவோம்ல. சென்ஷி அண்ணனோட ஐ மிஸ் யூ பதிவுக்கு இது ஒரு எதிர்ப்போஸ்ட். ;-)

3 comments:

said...

கோவாலு....!

எலே கோவாலு...1

இப்ப எங்கடாப்பா இருக்க........:))))

said...

கடிக்காதீங்கடா - சாமி - தாங்க முடிலேடா

said...

:)))))))))))