Wednesday, December 12, 2007

111. TEACH - 3 கதிரியக்கம் மற்றும் விளைவுகள் - சி.ஜெயபாரதன் BE.(Hons) P.Eng (Canada)

இந்த வாரம் நமக்காக அற்புதமான பாடம் எடுப்பவர்,

RadiationEffects
RadiationEffects.p...
Hosted by eSnips


திரு சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada

http://jayabarathan.wordpress.com/

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றவர்.

பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தவர்.

அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்.

பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் (1970-1978) ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றியவர்.

இவரது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருப்பவர்.

இவரது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே.

“மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்”

என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே இவரது ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.

We salute you sir, thanks a lot... குட்டீஸ்

5 comments:

வடுவூர் குமார் said...

ஆர்வம் உள்ளவர்கள் இவர் எழுதும் கட்டுரையை ஒரு தடவையாவது படிக்கவேண்டும்.பல அரிய விஷயங்கள் கொட்டிக்கிடக்கிறது.

Baby Pavan said...

நன்றி அங்கிள், இப்ப இருந்து டேட்டா பேஸ் கலக்ட் செய்யறோம், நாங்க பெரிய பசங்க ஆகும் போது யூஸ் ஆகும்...நீங்க கூட எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க

Sanjai Gandhi said...

ஜெயபாரதன் ஐய்யா ஒரு விஞ்ஞானி மட்டும் அல்ல.. அற்புதமான எழுத்தாளரும் கவிஞரும் கூட.. இவரது பல படைப்புகள் அன்புடன் குழுமத்தில் காணலாம்.
http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/d2d9352367f862b3/
http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/b64fa86be7be70b/bada159f8745f4c6?

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20305046&format=html [கல்பாக்கம் பற்றி முதல் கட்டுரை]

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20309252&format=html [கல்பாக்கம் பற்றி இரண்டாம் கட்டுரை

muthu said...

nan mika makilchi adaikeran

muthu said...

i like this type of friendly classes class with animation will be more helpful