Saturday, December 8, 2007

80. தமிழ்நாட்டு கோவில்களில் இது உண்டா?

வணக்கம் மாம்ஸ், நான் கடவுள் இருக்காரா இல்லயான்னு இங்க சொல்லபோறது இல்ல. எங்க வீட்ல 2 ஆதரவு கட்சியும் இருக்கு.

என் அம்மாக்கு கடவுள் நம்பிக்கை உண்டு அனைத்து கோவிலுக்கும் போவாங்க. ஆனா இம்சை சொல்வாரு கடவுள் எல்லா இடத்திலயும் இருக்காரு அதனால கடவுளை மனதில நினைத்து யாருக்காவது ஹெல்ப் பண்ணா அதுவே கடவுளுக்கு ரொம்ப மகிழ்ச்சி அளிக்கும் என்று.

ஹைதராபாத்ல இருந்து எங்க வீட்டுக்கு ஒரு பாட்டி வந்துருக்காங்க அவங்க ஷிரடி பாக்க விருப்பபட்டாங்க அதனால ஷிரடி அழைத்து போனோம்.

நேற்று மதியம் கிளம்பி இரவு 8:00 மணிக்கு அங்கு ரீச் ஆனோம். இம்சை உடனே தூங்கிட்டாரு. அம்மா கோவில்க்கு போனாங்க ரொம்ப கூட்டம் நைட் 10 மணிக்கு போய் காலை 6:30 க்கு தான் வந்தாங்க.

காலைல 8:00மணிக்கு இம்சை பாட்டியை அழைச்சிட்டு போனாங்க, அங்க அப்பவும் செம கூட்டம் ஆனா பெரியவங்க, பிசிக்கலி சாலஞ்ட் இவங்களுக்காக தனி லைன் இருந்திச்சி அதனால 8 மணி நேரம் நிக்காம 8 மினிட்ஸ்ல தரிசனம் பண்ணிட்டு 8:30 க்கு வந்துட்டாங்க. (இங்க கொவில்ல பணம் கட்டி ஷ்பெசல் தரிசனம் லைன் இல்லை)

இது மாதிரி நம்ம ஊர் கோவில்லயும் தனி லைன் இருக்கா ?

நாளை காலை திரும்ப ஊர் சுத்த போறேன், இம்சை ஒரு 150 வில்லேஜ் ஷ்டுடென்ட்சை பாடம் எடுத்து இம்சிக்க போறாரு வந்து போட்டாவுடன் பதிவு போடரேன்.

3 comments:

Anonymous said...

இங்க கோவிலே இல்ல

said...

//யாருக்காவது ஹெல்ப் பண்ணா அதுவே கடவுளுக்கு ரொம்ப மகிழ்ச்சி அளிக்கும் //

பவன் உங்கப்பாவும் எங்கப்பாவும் ஒரே மாதிரித்தான் போல

said...

inge special darishanamlam kidayathu.

kovilgal perusa, cleana, nisapthama irukkum.

manathukku oru amaiyithi kidaikum.

katargamathila kooda, paza thattungaloda poravanga thani varisai, athu illama poravanga thani varisai, avvalavuthan.

aalayangalil manthirangal ozikum idam, cellphonegal ozikum idam allangra board ella koilalayum parakalam.