Friday, December 14, 2007

119 வீக் எண்டு சூப்பர் பதிவு - மானாட மயிலாட

ரயில் மயில் ! பற்றி எங்க தல ஜொள்ளுப்பாண்டி (காலேஜ் விடர நேரம், ஸ்கூல் விடர நேரம் அப்படியே பார்த்தீங்கன்னா எதிர்ல இருக்கிற டீக்கடை, பக்கத்தில இருக்கிற பஸ்ஸ்டாப்பில நின்னுட்டு இருப்பேன் ! ) சொல்லிருக்காங்க.

துளசி கோபால் பாட்டிக்கு மான் குட்டின்னா ரொம்ப பிடிக்கும்னு எங்க சங்கத்துக்கு நியூஸ் வந்திச்சி அதான் இன்னைக்கு மான்குட்டி பதிவு
எனக்கு மான்குட்டி ரொம்பப் பிடிக்கும். எனக்கு ஒண்ணு பிடிச்சுக்கிட்டு வாங்க:-)

இதோ உங்களுக்காக மான், மயில்
விக்கில என்ன சொல்லி இருக்காங்கன்னா
மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும்.
ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் : தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை, அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது.

விக்கில என்ன சொல்லி இருக்காங்கன்னா
மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும். கொம்புகள் கிளைத்து இருப்பதால் ஆண்மானுக்கு கலை என்று பெயர் பெண்மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ் இருக்கும். பெண்மானுக்குப் பிணை என்று பெயர். மானின் குழந்தைக்கு (குட்டிக்கு), மான்மறி என்று பெயர்.
இந்தியாவில் நிறைய மலைப்பகுதிகளில் பல வகையான மான்கள் காணப்படுகின்றன. மான்கள் அழிந்துவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டு அவற்றை வேட்டையாடுவதை இந்திய அரசு தடை செய்துள்ளது.

சரி சரி இப்போ படம்.



4 comments:

said...

என்ன ஆச்சி யாருமே கும்மி அடிக்க வரல இன்னைக்கு

said...

//என்ன ஆச்சி யாருமே கும்மி அடிக்க வரல இன்னைக்கு//
வெள்ளிக்கிழமை மச்சி.....

said...

கும்மி அடிச்சி கும்மி அடிச்சி விரல் வலிக்குது ஆதான் யாரும் வரலைனு நெனைக்கிறேன் மானும் மயிலும் நல்லாத்தான் ஆடுது சத்தம் போடாம நான் அடுத்த பதிவுக்கு போயிடுரேன்

said...

மானாட மயிலாட - துளசிக்காக மான் குட்டிப் பதிவு குட்டீஸோடது - சூப்பர்டா பசங்களா