17/10: கணினி, இணையம், குழந்தைகள்தொழில் நுட்பம் பெருகி வரும் இந்நாளில் கிட்டதட்ட 150 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உலகளவில் இணையத்தை பயன்படுத்துவதாக 2001 இல் வெளியான அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க கல்வித்துறை வெளியிட்ட அறிக்கைபடி படி 5 இலிருந்து 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 90% கணிணியை பயன்படுத்துவதாக கூறி இ ருக்கிறார்கள்.22% குழந்தைகள் 5 வயதுடையவர்கள். 50% குழந்தைகள் 9 வயதுடையவர்கள்.
நிறைய விளையாட்டு குறுந்தட்டுக்கள் இப்போது கிடைக்கின்றன. இதில் பல எண்கள், சொற்கள் கற்றுத்தருவனவாகவும் இருக்கின்றன. இதை ஒரு அளவோடு பயன் படுத்தினால் பரவாயில்லை.
அமெரிக்க கல்வித்துறையின் கருத்தின் படி78% இணையத்தை பயன்படுத்தும் வாய்ப்பு இக்குழந்தைகளுக்கு வீட்டில் கிடைக்கிறது, 68% பள்ளியில் அனுமதிக்கப்படுகிறது.
ஐந்திலிருந்து 17 வயதுக்குட்பட்ட பள்ளிக்குழந்தைகள் வீட்டு பாடம் செய்ய, மற்றும் அதை தொடர்ந்த ஆராய்ச்சிக்கு இணையதளத்தை பயன் படுத்துகிறார்கள். ஆசிரியர்கள் குழந்தைகளை மேலும் ஆராய்ச்சி செய்து ஒரு விரிவான குறிப்பும் கட்டுரையும் தயாரிக்க சொல்கிறார்கள். இதுவும் இதுபோல அறிவு சேர்ந்த விஷயமும் நேர்மறையான ஆக்கங்கள்.
ஆனால் அதே சமயம் குழந்தைகளின் விரல்களும் எலும்புகளும் வளர வேண்டிய நிலையில் மணிக்கணக்காக கணிணி முன் இருந்தால் அது விரைவிலேயே கார்பல் டுன்னெல் நோய் வரவும், மூட்டு வலி வரவும் காரணமாகிறது.ஒருமாதிரி கூன் போட்டு அமர்ந்திருக்கும் குழந்தைகள் முதுகு சீராக வளர்வதும் பாதிக்க படுகிறது.
கண் பார்வை பற்றி சொல்ல வேண்டியதும் இல்லை. மேலும் இவ்வாறு கணிணி விளையாட்டு விளையாடும் குழந்தைகள் நாளடைவில் மூளை வளர்சியில் மந்த நிலை ஏற்படவும் வழிபிறக்கிறது.
இது குறித்து நடந்த ஒரு ஆராய்ச்சியில் இது போல கணிணி முன் வளரும் குழந்தைகள் விளையாட்டு போன்றவற்றில் (குழு விளையாட்டில்) ஈடுபடுவதில்லை எனவும் அதனால் மனிதர்களின் உடல் மொழியை கற்க முடிவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். பழக,, விட்டு கொடுக்க என்பது கற்று தேர்வதில்லை.
மனதில் உள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் தெரிவதில்லை என்று கூறுகிறார்கள்.இப்போது குழந்தைகள் உடனடி தகவல் அனுப்புவது, மின்மடல் அனுப்புவது என்பதோடு அதில் குறைந்த வரிவாக்கமும் பயன் படுத்துவதால் மொழி ஆளுமை அடியோடு குறைகிரது.
பள்ளியில் கொடுக்கும் பாடங்களுக்கும் பல இணைய கட்டுரைகளை வெட்டி ஒட்டி போட்டு எது என்று தெரியாமல் காப்பி அடிப்பதால் பல பள்ளிகள் “plagiarism” வெகுவாக கண்டிக்க தொடங்கி இருக்கின்றன.
இப்போது பல இணையதள சூதாட்டங்களில் குழந்தைகள் இறங்கி இருப்பதாக தெரிகிறது. இது பல ஆபத்துக்களில் கொண்டு விடக்கூடும். இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால் பிறகு மீள்வது கடினம்.
சமீபத்தில் நியுஜெர்ஸியில் ஒரு 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் இணயத்தில் செய்த மோசடிக்காக சிறைக்கு செல்ல நேர்ந்தது.
முதலில் காவலர்கள் கைது செய்ய சென்றபோது, மறுத்த பெற்றோர்கள் ஆதாரங்களை பார்த்து அதிர்ச்சியில் செயல் மறந்து போய்விட்டனர். முதலுக்கே மோசம் போன போது செய்வதொன்றும் இல்லை.விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றின் போட்டி நிறுவன அதிபர், இந்த மாணவனை அணுகி இருக்கிறார். மாணவன் கேட்ட விலல மிகுந்த விளையாட்டு ஷூக்கள் தந்திருக்கிறார் பரிசாக.
அவர் கேட்டு கொண்டதன் பேரில் இந்த மாணவன் போட்டி நிறுவத்தின் விற்பனை இணயதளத்திற்கு ஆயிரக்கணக்கில் தொடுப்பு கேட்கும் ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்திருக்கிறான். (hits to the site) இதன்மூலம் போட்டி நிறுவத்தின் விற்பனை இணையதளம் பலநாட்கள் செயலிழந்து போனது.
நிறுவன அதிபர் தந்த புகாரில் விசாரித்த உள்துறை, அந்த தொடுப்பு அதிகமாக வரும் இனைய இணைப்பு, அதன் மூலம் கணிணி என் று கண்டறிந்து மாணவனை கைது செய்துள்ளனர். பெற்றோர்கள் மாணவன் கணிணியில் விளையாடுவதாக நினைத்து கொண்டுள்ளனர்.ஷூக்கள் கொடுத்த போட்டி நிறுவன அதிபர், அன்பளிப்பாக என் பக்கத்து வீட்டு மாணவனுக்கு கொடுத்தேன், நான் செய்ய சொன்னதாக ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு தப்பி விட்டார். மாணவன் வழக்கு விசாரணையில் இருப்பதாக அறிகிறேன்.
கணினியே கூடாது என்பதல்ல, இணையதளத்தை பயன்படுத்த பெற்றோரின் அனுமதியும் பாதுகாப்பும் தேவை.
இதற்கு பெற்றோர்கள் தாங்களும் குழந்தைகளுடன் கலந்து பேசி சில நேரம் அவர்களுடன் செலவழிக்க வேண்டும். பேச உரையாட அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
மற்ற பள்ளி நன்பர்களுடன் விளையாட ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும் வாரத்தில் ஒருநாள் அவர்களை அழைத்தோ அல்லது அவர்கள் வீட்டிற்கு அனுப்பியோ விளையாட செய்ய வேண்டும்.
உறவு முறைகளில் கலந்து கொள்ள பழக வாய்ப்பு தர வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் பண்பும் , வீட்டில் உள்ள உறுப்பினரோடு பேச, விளையாட ஒன்றாக சில வேலைகள் செய்ய என்று ஒருவருக்கொருவர் அனுசரித்து போகும் நிலை வளர்க்க உதவ வேண்டும்.
வார இறுதியில் கணினியில் செல்வழிக்க சில குறிப்பிட்ட கால அளவும், வீட்டு பாடங்கள் செய்வதில் சில கால அ ள வும் கணிணி உபயோகிக்க அனுமதியும் தந்து அவற்றில் உறுதியாக இருந்து செயல்படவும் வேண்டும்.
இந்நிலை மாறாவிட்டால் வீட்டிலேயே ஒருவருக்கொருவர் மின்மடல் அனுப்பியும் உடனடி தகவல் தந்தும் செய்திகள் பரிமாறிக்கொள்ளும் காலம் வந்துவிடும்.