Wednesday, December 5, 2007

64 குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் U/A

குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் கோபி அண்ணாவின் பதிவை இங்கு காப்பி பண்ணிக்கிறோம்.

எங்கள் வேண்டுகோள் - ஏன் அனைவரும் பதிவிடுவதை நிறுத்திவிட்டீர்கள். மீண்டும் வாங்க நாங்க காத்திருக்கிறோம்.

குழந்தைகள் முகம் எப்பவுமே மலர்ச்சியா இருக்க காரணம் அவங்க மனசுல வஞ்சம் ஏதும் இல்லாம இருக்கறது தான். குழந்தைகள் யாரோடாவது சண்டையிட்டால் கூட மனதில் ஏதும் வைத்துக் கொள்ளாமல் மீண்டும் அவர்களோடு இன்முகம் காட்டி பழகும்.

இப்படி இருக்கும் குழந்தைகள் நாளடைவில் சுற்றத்தாரைப் பார்த்தும் வளர்ப்பு முறையினாலும் வஞ்சங்களைப் பழகிக் கொள்கிறது.

குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க விரும்பும் பெற்றோர்களும் குழந்தைகளுக்கேற்ற வகையில் நல்ல பல நீதிக்கதைகளையும் குட்டிக் கதைகளையும் பதியும் சில வலைப்பூக்கள் கீழே:

பரஞ்சோதியின் சிறுவர் பூங்காவில் "சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்." என்கிறார். இந்த வலைப்பக்க வடிவமைப்பைப் பார்க்கும்போது அம்புலிமாமா,பாலமித்ரா படிப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

கங்காவின் தினம் ஒரு ஸென் கதையில் பல்வேறு ஸென் கதைகளை மொழிபெயர்த்து தனது கருத்துக்களுடன் வெளியிட்டு வருகிறார். சமீப காலம் வரை தினம் ஒரு கதையாகத்தான் பதித்து வந்தார். தற்சமயம் அவ்வாறில்லாமல் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது பதிக்கிறார்.

இது நான் தவறாமல் படிக்கும் வலைப்பூ.ந. உதயகுமாரின் குட்டிக் கதைகள். இவர் இந்தப் பக்கத்தில் பல்வேறு மொழிகளில் வெளிவந்த சின்னஞ்சிறு நீதிக்கதைகளைத் தமிழ்ப்படுத்தி வெளியிட்டு வருகிறார். சிறுவர்களுக்கு ஏற்றவாறு அருமையாய் இருக்கிறது.

சந்திரமதி கந்தசாமி (மதி) சிறுவர் பாடல்கள் என்ற தளத்தில் சிறுவர்களுக்கான பாடல்களைத் தொகுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

சந்திரவதனா குழந்தைகள் - தாய்ப்பால் முதல் முதலுதவி வரை என்ற தளத்தில் தலைப்பில் கூறியவாறு குழந்தை வளர்ப்பு சம்பந்தமாய் பயனுள்ள அனைத்து விவரங்களையும் பதித்து வருகிறார்.

இன்னும் இது போல குழந்தைகளுக்கான எத்தனையோ தளங்கள் எனக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படி ஏதேனும் இருந்தால் நீங்கள் சொல்லுங்கள்.எல்லோரும் படிப்போம். குழந்தைகள் ஆவோம் மனதினால்!

4 comments:

Anonymous said...

இன்னும் இது போல குழந்தைகளுக்கான எத்தனையோ தளங்கள் எனக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படி ஏதேனும் இருந்தால் நீங்கள் சொல்லுங்கள்.எல்லோரும் படிப்போம். குழந்தைகள் ஆவோம் மனதினால்!

ரிப்பிட்டேய்

Anonymous said...

ennayum aattaila sethukkongappa

said...

வாங்க அனானி அண்ணெ, ஒரு மெயில் அனுப்புங்க உங்களை பத்தி உங்களையும் சேர்த்திக்கறோம் kuttiescorner@gmail.com

said...

தேட வேண்டும் - இன்னும் இருப்பதாக நினைவு