Monday, December 10, 2007

88 பர்த்டே பார்ட்டிக்கு நோ!

எங்க வீட்டில பர்த்டே பார்ட்டி செய்யமாட்டங்க அம்மா. அதுல எங்களுக்கு கொஞ்சம் வருத்தமாதான் இருந்தது. அம்மா கிட்ட கேட்டு இல்லன்னா அப்பாகிட்ட ஓகே வாங்கிக்கலாம்லா எங்க வீட்ல கிடையாது. அம்மா நோ சொன்னா அப்பாவும் நோ தான் சொல்வாங்க. அப்பா நோ சொன்னா, அம்மாவும் நோ தான் சொல்வாங்க. ரொம்ப அதிகமாக பார்ட்டீக்கும் அனுப்ப மாட்டாங்க.

பிறந்தநாள் என்றால், எங்களுக்கு பிடித்த சமையல், சாயந்திரம் புது டிரஸ் போட்டு, வீட்டிலேயே சிம்பிளாக கேக் வெட்டி, கோயிலுக்கு போவோம். அதன் பிறகு அப்பா எங்களுக்கு பிடித்த ஹோட்டலுக்கு கூட்டி போவார். அம்மா, அப்பா இருவரும் பரிசு தருவார்கள்.

3 வருஷம் முன்னாடி என்னோட பர்த்டே அன்றைக்கு கோவிலுக்கு போயிட்டு, அம்மா, அப்பா சூப்பர் மார்கெட் போயி, சோப், ஷாம்பு, பால் பவுடர், பருப்பு அரிசி எல்லாம் வாங்கி கிட்டு எங்களை ஒரு பெரிய இடத்திற்கு கூட்டிட்டு போய் ஒரு அங்கிள் கிட்ட என்னை கொடுக்கச் சொன்னாங்க. அந்த அங்கிள் பெரிய ஹாலுக்கு கூட்டிட்டு போய் நிக்க வெச்சாங்க.

அப்ப அங்க நிறைய பசங்க வந்து எனக்கு HAPPY BIRTHDAY பாடினாங்க.
நான் கொடுத்த சாமான்களுக்கு நன்றி சொன்னார்கள். வெளியே வந்த போது அப்பா சொன்னார், " இவர்களுக்கு பெற்றோர்கள் இல்லை. அதனாலே இவர்கள் அனனவரையும் இந்த ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் பார்த்து கொள்கிறார்கள்.
நாம் இப்போது கொடுத்த பொருட்களை இவர்கள் அனனவரும் 1 வாரத்திற்கு
உபயோகிப்பார்கள்.

நம் வீட்டில் எந்த ஒரு முக்கியமான் நிகழ்ச்சியின் போதும் நம்மால் இயன்ற வரை இவர்களைப்போன்றவர்களுக்கு உதவுகிறோம்.

ப்ர்த்டே பார்ட்டி வைத்தால் சாப்பிட போவது உன் நண்பர்கள். அவர்களுக்கு வேண்டியது செய்ய பெற்றவர்கள் இருக்கிறார்கள். இப்படியும் கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். அதனாலே நாங்கள் பார்ட்டி செய்யாமல், இவர்களுக்கு உங்கள் பெயரில் உதவி செய்கிறோம்" என்றார்.

இப்பொழுதெல்லாம் நாங்கள் வருத்தப்படுவது கிடையாது. நல்லதை சொல்லிக்கொடுத்த அம்மா, அப்பாவிற்கு நன்றி சொல்லி நாங்களும் சந்தோஷமாக பர்த்டே பார்ட்டிக்கு நோ சொல்லிவிட்டோம். :))

(அப்பப்போ எங்க பிளாக் பக்கமும் வாங்க அங்கிள்ஸ் & ஆண்டிஸ்)

ஆஷிஷ் .

7 comments:

Anonymous said...

இப்பொழுதெல்லாம் நாங்கள் வருத்தப்படுவது கிடையாது. நல்லதை சொல்லிக்கொடுத்த அம்மா, அப்பாவிற்கு நன்றி சொல்லி நாங்களும் சந்தோஷமாக பர்த்டே பார்ட்டிக்கு நோ சொல்லிவிட்டோம். :))

(அப்பப்போ எங்க பிளாக் பக்கமும் வாங்க அங்கிள்ஸ் & ஆண்டிஸ்)

Fantastic Good work...

said...

//
சொல்லிக்கொடுத்த அம்மா, அப்பாவிற்கு நன்றி
//
hats off Mrs. & Mr. Kala Sridhar

said...

சிவா
நான் கலா ஸ்ரீராம். பேர மாத்திட்டீங்களே? நியாயமா? தர்மமா?

said...

//
புதுகைத் தென்றல் said...
சிவா
நான் கலா ஸ்ரீராம். பேர மாத்திட்டீங்களே? நியாயமா? தர்மமா?
//
oh
really I m very Sorry. Thanks for the intimation.

(amnesia)

said...

வாழ்த்துக்கள்.
எல்லா விருந்து வைபவங்களிலும் விழாக்களிலும் இம்முறையை எல்லா பிள்ளைகளும் பெற்றோரும் கடைபிடித்தால் மிக நன்றாயிருக்கும். இறைவனிடமிருந்து நன்மையும் மனதுக்கமைதியும் கிட்டும்.

said...

நல்ல நல்ல விஷயம் கத்துத் தர்றாங்க உங்க அப்பா அம்மா..பாராட்டுகள்..(புதுகை.உங்கள் பெயர் கலாவா.)

said...

பாச மலர் said...
நல்ல நல்ல விஷயம் கத்துத் தர்றாங்க உங்க அப்பா அம்மா..பாராட்டுகள்..(புதுகை.உங்கள் பெயர் கலாவா.)

பாசமலர் அக்கா, புதுகை அவங்க ஊர், கலா அத்தை தான் அவங்க பசங்களுக்கு நல்ல விஷயம் கத்துத் தர்றாங்க அவங்களுக்கு கத்து குடுத்தது யாருன்னு எனக்கு தெரியாது, இப்ப உங்களுக்கு தெளிவா புரிஞ்சிடிச்சா...