Friday, December 7, 2007

நவம்பர் 26 ல் பேபி பவனுக்கு நடந்தது என்ன? உடனடி விளக்கம் தேவை.

இப்பொதுதான் தெரிந்து பாப்பா மனம் கொந்தளித்து போயிள்ளது.ஒரு இருபது நாள் ஊரில் நான் இல்லை. அதற்குள் என்னவெல்லாம் நடந்திருக்கிறது. எங்கள் சங்கத்து சிங்கம், துறுதுறு தங்கம், வீரக்கனல், பயமறியா பாலகன், ரிப்பீட்டேய் புகழ் பவனுக்கு என்னாவாயிற்று? இதற்காகத்தானே சங்கத்தில் இரண்டு பெரிசுங்களை வேறு வைத்திருக்கிறோம். அவர்களும் கவனிக்கவில்லையா?கையில் எதற்காக சலைன் ஏற்றும் கட்டு, சலைன் ஏற்றும் அளவுக்கு என்ன நடந்தது.

1. சாதாரண சளி காய்ச்சலா?

2. நம் சிங்கத்தின் இயல்பான வீரதீர செயல்களால் எதாவது பிரச்சனையா?

3. எதிரிகளால் எதாவது நடந்ததா?


முதலிரண்டு காரணங்கள் என்றால் பரவாயில்லை. நன்றாக பவனை பார்த்துக்கொள்ளுங்கள் என்ற சங்க அறிவுறையுடன் முடித்துக்கொள்வோம்.

மூண்றாவது காரணமென்றால் புனே ஸ்தம்பிக்கும். குட்டிப் பாப்பாக்களின் மூன்று சக்கர சைக்கிள் படை புனே புறப்பட தயாராக இருக்கிறது. இங்கும் தமிழகம் தழுவிய பந்த் நடக்கும். பத்து பஸ்ஸாவது எரியும். மொத்த தமிழ்நாடும் முடக்கப்படும் அபாயம் இருக்கிறது.

அதனால் பவன் அப்பா இம்சை அவர்கள் உடனே உடனே உடனே குட்டீஸ்கார்னர் கூண்டில் ஏறி நடந்தது என்னவென விளக்கம் கூறவேண்டும்

14 comments:

said...

இதற்க்கு காரணம் குசும்பன் தான் என்பதை இங்கே நான் சொல்லிக்கரேன்... அப்படியே அந்த ஆட்டோ எல்லாம் துபாய் பக்கம், அபிதாபி பக்கம் , ஜார்ஜா பக்கம் திருப்புங்கோ....

said...

குசும்பன் said...
Baby Pavan said...
நாங்க அலவ்டா அங்கிள்....////

உங்களுக்கு எல்லாம் அனுமதி இல்லை, சின்ன புள்ளைங்கள கெடுக்கிறேன் என்று கெட்ட பேர் எனக்கு வந்துவிடும், இப்ப யார் குழந்தை நட்சத்திரம் என்று தெரியவில்லை, இருந்தா அவுங்களுக்கு சங்கம் ஆரம்பிச்சிடுங்க:)))

குசும்பன் தன்னை சங்கத்தில சேர்க்காத காரணத்தால் மனமுடைந்த பவன், ஒரே மூச்சில் 3 பாட்டில் புருட்டியை இம்சைக்கு தெரியாமல் குடித்தார்.
இதை தாங்க முடியாமல் அவருடைய குட்டி digestive system பிச்சிகிச்சி...

said...

அப்போ குசும்பன் மாமாவயும் குட்டீஸ் கோர்ட்டுக்கு வரச்சொல்லுங்க. சம்மன் உடனே அனுப்பவும்

said...

நிலா பிரண்டு உனக்கு தான் என் மேல எவ்வளவு பாசம், இந்த பாசம் இம்சைக்கு இல்லயே... டாக்டர் சொன்னாருங்கரதுக்காக புருட்டி தரதே இல்ல...அதனால தான் யாருக்கு தெரியாம 1 லிட்டர் புருட்டியை எடுத்து அடிச்சிட்டேன்... அது கொஞ்சமா ஒத்துக்காம போச்சி அதான் சிங்கத்த ஹாச்பிடல்ல 2 டேஸ் அடச்சி வெச்சிட்டாங்க

said...

அப்போ பந்த், பஸ் எரிப்பு போராட்டத்தையெல்லாம் நிறுத்திவிடலாமா?

said...

நிலா said...
அப்போ பந்த், பஸ் எரிப்பு போராட்டத்தையெல்லாம் நிறுத்திவிடலாமா?

ம்ம்ம் நிறுத்தீடலாம், நாம எல்லாம் பெரிசுங்க மாதிரி இல்லாம் ஒரு புது மாதிரி அமைதி போராட்டம் நடத்தி குசும்பன் அங்கிள்'கு பாடம் கத்து குடுக்கலாம்...உடனடியா சங்கத்து சிங்கங்களோட மாநாடு ஏற்பாடு பண்ணவும்...

said...

ஆமாங்க அன்னைக்கு அவர் படம் கையை பார்த்ததும் 'பக்'ன்னுச்சி

said...

பவன் குட்டி, உங்க அப்பாகிட்ட சொல்லி பிரிட்ஜ்க்கு பூட்டு போட சொல்றேன். (ஆனா புரூட்டி ருசியாத்தான் இருக்கும். எனக்கே ஆசையாத்தான் இருக்கு)

said...

யப்பா குட்டீஸ்களே நீங்க கிளப்புற பீதியில பாவம் குசும்பனோட digestive system பிச்சுக்கப்போவுதுன்னு நினைக்கிறேன்....!!!

said...

என்ன ஆச்சி என்ன இப்படி கையில் கட்டு?

said...

இம்சை said...
இதற்க்கு காரணம் குசும்பன் தான் என்பதை இங்கே நான் சொல்லிக்கரேன்... அப்படியே அந்த ஆட்டோ எல்லாம் துபாய் பக்கம், அபிதாபி பக்கம் , ஜார்ஜா பக்கம் திருப்புங்கோ....///

இம்சை யூ டூ????:((((

சிங் இன் ரெயின் ஸயிங் இன் த ரெயின்...:(((

said...

நிலா said...
அப்போ குசும்பன் மாமாவயும் குட்டீஸ் கோர்ட்டுக்கு வரச்சொல்லுங்க. சம்மன் உடனே அனுப்பவும்///

நான் சொல்வது எல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை, அவர் சங்கத்தில் சேர அனுமதி மறுக்கபட்டது உண்மை, அப்பா இம்சையும் உறுப்பினர் மகனும் உறுப்பினர் என்றால் எப்படி சரியாக இருக்கும், இம்சை அவர் மனைவிக்கு தெரியாமல் ஜொள்ளு விட ஸ்ரேயா கோசல் மன்றத்தில் தன்னை இனைத்து கொண்டார் அப்படி இருக்க அவர் மகனையும் எப்படி சேர்த்து கொள்வது?

இம்சைதான் தம் மகன் விண்ணபத்தை ரிஜெக்ட் செய்யும் படி ரகசியமாக கேட்டுக்கிட்டார்!

இதில் என் தவறு ஏதும் இல்லை.

said...

குசும்பன் மாமாவின் வாதங்களை குட்டீஸ் கோர்ட் கவனமுடன் பரீசிலித்தது.சங்கத்து சிங்கம் மனம் உடைந்ததற்கு குசும்பன் மாமாவோடு இம்சை மாமாவும் காரணம் என்பதாலும் குசும்பன் மாமா பாவம் "வளர வேண்டிய புள்ளை" என்பதை மனதில் கொண்டும்,கு.பீ.கோ 420 (குட்டீஸ் பீனல் கோர்ட்) சட்டப்படி குசும்பனை குட்டீஸ் கோர்ட் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கிறது.

ஆனால் இதுபோல இம்சையிடமிருந்து ரகசிய வேண்டுகோள் வந்தால் அதை உடனே குட்டீஸ் கோர்ட்டில் தெரியப்படுத்தவேண்டும் என்றும் கோர்ட் ஆணையிடுகிறது

said...

//
குசும்பன் தன்னை சங்கத்தில சேர்க்காத காரணத்தால் மனமுடைந்த பவன், ஒரே மூச்சில் 3 பாட்டில் புருட்டியை இம்சைக்கு தெரியாமல் குடித்தார்.
இதை தாங்க முடியாமல் அவருடைய குட்டி digestive system பிச்சிகிச்சி...
//
நல்லா கெளப்புறாய்ங்கய்யா பீதியை