Thursday, December 20, 2007

குசும்பன் மாமாவுக்கு ஆனந்தவிகடனின் பாராட்டு, குட்டீசின் குதூகல கொண்டாட்டம்

இந்த வார ஆனந்தவிகடனில் நம்ம குசும்பன் மாமாவ பத்தி இப்படி வந்திருக்கு


மொக்கை,காமெடி,நக்கல் என கலாய்ப்புகள் நிறைந்த குசும்புத்தனமான வலைப்பூ. 'பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி எப்பொழுதும் கலாய்ப்பவன்' என்கிறார் குசும்பன். அரசியல், அன்றாடச்செய்திகள், சினிமா, பெண்ணியம் உட்பட்ட எதுவும் இவரது நக்கலில் இருந்து தப்பவில்லை. சக வலைப்பூக்காரர்களைக்க் கலாய்க்கும் பதிவுகள் தான் அதிகம். கற்பனைக் காமெடி மிக இயல்பாக வருகிறது குசும்பனுக்கு. இலவசத்திட்டங்களால் பலர் சோம்பேறிகளாக மாறுவதை நக்கலும் நையாண்டியுமாகச் சிரிக்க சிரிக்க சொல்லிவிட்டு, கூடவே, விவசாயப் பொருட்கள் பாதிக்கபடுவதை சுட்டிக்காட்டும்போது கொஞ்சம் சீரியஸ்! ஆனாலும், கலக்கலான கலாய்ப்பு!

இதெல்லாம் நமக்குத் தெரியாத விஷயம் இல்லை. வலைப்பூக்கள் படிக்காத மற்றவர்களிடமும் நம்ம குசும்பன் மாமாவை விகடனின் இந்த பாராட்டு கொண்டு போய் சேர்க்கும்.

குட்டீஸ் கார்னரின் அனைத்து குட்டீஸும் குதூகலமாக இதை கொண்டாடுகிறோம்


மனம் திறந்த வாழ்த்துக்கள் குசும்பன் மாமா

17 comments:

said...

புகழும் பெருமையும் மேன்மேகும் சேர இனிய நல்வாழ்த்துகள்

said...

வாழ்த்துக்கள் குசும்பன் :)))

said...

இத வெச்சே மாமாவுக்கு பொண்ணு தேடிடலாம். அந்தக் கொடுமையையும் குட்டீஸ் தான் பண்ணனும்னு நினைக்கிறேன்

said...

ஆஹா.. வாழ்த்துக்கள் மாம்ஸ்.. :-)

said...

//
~பொடியன்~ said...
ஆஹா.. வாழ்த்துக்கள் மாம்ஸ்.. :-)

//
repeateyyyyyy

said...

வாழ்த்துக்கள் குசும்பன்!

said...

//நிலா said...
இத வெச்சே மாமாவுக்கு பொண்ணு தேடிடலாம். அந்தக் கொடுமையையும் குட்டீஸ் தான் பண்ணனும்னு நினைக்கிறேன்
//

நிலா குட்டி! யாருக்கு கொடுமை....!?????

said...

வாழ்த்துக்கள், குசும்பரே...குசும்புகள் தொடரட்டும்!!

said...

குசும்பருக்கு சங்கத்து சகாவின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

said...

ஹலோ குட்டீஸ் உங்களுக்கெல்லாம் ஒரு சந்தோஷமான விசயம். நம்ம வீட்டுல நடக்கற "கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிக்கு .நாளைக்கு நம்ம குட்டித் தேவதை நிலா வந்து கலக்கப்போறாங்க.. போறாங்க.. அங்க வந்து நிலாவுக்கு உங்க ஆதரவை தெரிவிய்யுங்க..

(அப்புறம் பொடியன்& பேபி பவனுக்கு ஒரு சீக்கிரட் மேட்டரு.. அங்க.. நம்ம தல குசும்பன் மாம்ஸ்சும் வராரு..வந்து பின்னிடுங்க..ஹீஹி...)

கலக்கப்போவது யாரு? (ஹாலிடே ஆப்பு ஸ்பெசல் - சீசன் I )
http://rasigan111.blogspot.com/2007/12/i.html

said...

நிலா நிஜமாதான் சொல்றீயா?:))

இல்லை இது ஆப்பா?:((

said...

///நிலா said...
இத வெச்சே மாமாவுக்கு பொண்ணு தேடிடலாம். அந்தக் கொடுமையையும் குட்டீஸ் தான் பண்ணனும்னு நினைக்கிறேன்///

ஒரு கொடுமையை கண்டுபிடிக்க மற்றொரு கொடுமையால தான் முடியும்:))))

said...

ஆகா அருமை அற்புதம், வாழ்த்துக்கள் குசும்பன் மாமா. உங்களுக்காகவே அதிகாலை நாலு மணிக்கு எழுந்து வாழ்த்து கமெண்ட் போடரேன்.

said...

குசும்பன் மாமா ரெண்டு வாரம் முன்னாடி சும்மா இந்த மாதிரி போட்டு ஒரு ஆப்பு வைக்கலாம்ன்னு நினைச்சேன். அதுகுள்ள ஆனந்த விகடன்ல எனக்கு ஆப்பு வெச்சு உங்கள இந்த வாரம் போட்டுட்டாங்க.

உங்க ஊர்ல விகடன் கிடைக்காதா?

said...

மத்தபடி எப்பவுமேவா உங்களுக்கு ஆப்பு வைப்போம்?

ஒன்னு தெரிஞ்சுக்கோங்க. ஆப்பு வைக்கிற கைதான் அணைக்கும்.

ஆப்புவைப்பதும் நாங்கதான் அணைச்சுக்கிறதும் நாங்கதான்.

ஆனா உங்களுக்கு பொண்ணு பாக்கறத இதுல எதுல சேத்தரதுன்னுதான் தெரியல

said...

வாழ்த்துக்கள் அங்கிள்!!!
:)

said...

வாழ்த்துக்கள் அண்ணே ;))